தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தாரகாசுரன் மைந்தர்களின் தவம்..மைந்தனைக் காக்க பார்வதியுடன் மோதும் சிவன்! திருப்பங்களுடன் சிவசக்தி திருவிளையாடல் தொடர்

தாரகாசுரன் மைந்தர்களின் தவம்..மைந்தனைக் காக்க பார்வதியுடன் மோதும் சிவன்! திருப்பங்களுடன் சிவசக்தி திருவிளையாடல் தொடர்

Oct 17, 2024, 07:14 PM IST

google News
கார்த்திகைப் பெண்களிடம் பிறக்கும் சிவமைந்தன் கார்த்திக்கேயனை கொல்ல தாரகாசுரன் மைந்தர்கள் தவமிருக்க, மைந்தனைக் காக்க பார்வதியுடன் மோத இருக்கும் சிவன் என திடுக்கிடும் திடீர் திருப்பங்களுடன் சிவசக்தி திருவிளையாடல் வரும் வாரம் எபிசோடில் காட்சிகள் இடம்பெறவுள்ளது.
கார்த்திகைப் பெண்களிடம் பிறக்கும் சிவமைந்தன் கார்த்திக்கேயனை கொல்ல தாரகாசுரன் மைந்தர்கள் தவமிருக்க, மைந்தனைக் காக்க பார்வதியுடன் மோத இருக்கும் சிவன் என திடுக்கிடும் திடீர் திருப்பங்களுடன் சிவசக்தி திருவிளையாடல் வரும் வாரம் எபிசோடில் காட்சிகள் இடம்பெறவுள்ளது.

கார்த்திகைப் பெண்களிடம் பிறக்கும் சிவமைந்தன் கார்த்திக்கேயனை கொல்ல தாரகாசுரன் மைந்தர்கள் தவமிருக்க, மைந்தனைக் காக்க பார்வதியுடன் மோத இருக்கும் சிவன் என திடுக்கிடும் திடீர் திருப்பங்களுடன் சிவசக்தி திருவிளையாடல் வரும் வாரம் எபிசோடில் காட்சிகள் இடம்பெறவுள்ளது.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், மிகப் பிரமாண்டமாகவும் பார்ப்போரை ஈர்க்கும் வகையில் மிகுந்த சுவாரஸ்யத்தோடும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது ஆன்மிகப் புராண தொடரான சிவசக்தி திருவிளையாடல் .

ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்று வெற்றிகரமான தொடராக ஜூன் மாதம் முதல் ஒளிப்பரப்பாகி வருகிறது.

இந்த வாரம் சிவன் பார்வதியின் அம்சமாக கார்த்திகைப் பெண்களிடம் பிறக்கிறார் சிவமைந்தன் கார்த்திக்கேயன். கார்த்திகைப் பெண்கள் ஏழு பேரும் அவனுக்கு அன்னையாக இருந்து வளர்க்கிறார்கள்.

கார்த்திகேயனை கொல்ல தவமிருக்கும் தாரகாசுரன் மைந்தர்கள்

கார்த்திகேயன் கையால் கொல்லப்படுவாய் என்கிற பிரம்மனின் வாக்குக்குப் பயந்து பயந்து காத்திருக்கிறான் அசுர அரசன் தாரகாசுரன். கார்த்திக்கேயனைக் கொல்வதற்காக தாரகாசுரனின் மைந்தர்கள் 3 பேர் கையில் சிவத் தனுசுவுடன் அலைகிறார்கள். அதில் பின்னடைவு ஏற்பட பார்வதியை நோக்கித் தவம் இருக்கிறார்கள்.

பார்வதியும் திரிபுரசுந்தரியாக இருந்து அவர்களைக் காப்பதாக வரம் அளிக்கிறார். இதற்கிடையே சிவனும் பார்வதியும்தான் தன் பெற்றோர் என்பதைத் தெரிந்துகொள்ளும் கார்த்திக்கேயன், தன்னை விலக்கிவைத்துவிட்டார்கள் சிவனும் பார்வதியும் எனத் தப்பர்த்தம் செய்துகொண்டு, அவர்களோடு பிணங்குகிறான். தன்னை மகனே என அழைக்கவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டு அவர்களை வேதனைக்குள்ளாக்குகிறான்.

கார்த்திகேயனுக்காக மோதும் சிவன் - பார்வதி

கார்த்திக்கேயனைக் கொன்றுவிட துடிக்கிறார்கள் தாரகாசுரன் மைந்தர்கள். அவர்களுக்கு அளித்த வரத்தால் அவர்கள் பக்கம் கட்டுப்பட்டு நிற்கிறாள் பார்வதி. மைந்தனைக் காக்க கார்த்திக்கேயனே அறியாமல் அவர் பக்கம் நிற்கிறார் சிவன். இதனால் சிவனும் பார்வதியும் எதிர் எதிர் நின்று களமாடும் சூழல் உருவாகிறது.

இப்போது சிவனையும் பார்வதியையும் தன்னை மகனே என்று அழைக்கச் சம்மதிப்பானா கார்த்திக்கேயன்? மைந்தனைக் காக்க மனைவியை எதிர்ப்பாரா சிவன்? கொடுத்த வரத்துக்குக் கட்டுப்பட்டு சிவனையும் மகனையும் ஆபத்துக்கு ஒப்புக்கொடுப்பாளா பார்வதி. திடுக்கிடும் திடீர் திருப்பங்களுடன் சிவசக்தியின் திருவிளையாடல் பார்வையாளர்களைப் பரவசப்படுத்த காத்திருக்கிறது.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பகும் சிவசக்தி திருவிளையாடல் தொடரில் காணத் தவறாதீர்கள்.

சிவசக்தி திருவிளையாடல் முன்கதை

பிரஜாபதி தட்சண் செய்த தவப் பயனால் தாட்சாயிணி சதி என்கிற பெயரில், அவருக்கு மகளாக அவதரிக்கிறாள் ஆதிபராசக்தி. சிவன் மீது காதல் கொள்ளும் சதி, பிரஜாபதி தட்சண் தடைகளை தகர்த்தெரிந்து சிவனைக் கரம் பிடிக்கிறார். ஆனால், தட்சண் செய்யும் ஒரு யாகம் மூலம் தாட்சாயிணி வாழ்விலும் சிவன் வாழ்விலும் ஆறாத துயரம் நிகழ்கிறது. சதி தன் உடலை அக்னிக்கு இரையாக்குகிறார்.

இதனால் கோபம் அடையும் சிவன் வீரபத்ரராக உருவெடுத்து பிரஜாபதி தட்சனின் ஆனவத்தை அடக்கி அவர் தலையினைக் கொய்கிறார். கோபம் அடங்காத சிவன் இவ்வுலகினையே அழிக்கும் அளவுக்குச் செல்கிறார். அதனை நாராயணர் தடுக்கிறார். ஆனாலும் கோபம் அடங்காத சிவன் ஆழ்ந்த தவத்திற்குள் மூழ்குகிறார்.

இப்பூவுலகின் சுழற்சிக்கு சிவன் – சக்தியின் சேர்க்கை தேவை என்பதை உணர்ந்த நாராயணர், பிரம்மன் மற்றும் தேவர்கள் சக்தியை வேண்ட, சக்தி பார்வதியாக உருவெடுக்கிறார்.

இமயமலை அரசன் ஹிம்மான் - மைனாதேவி தம்பதிக்கு மகளாக பிறக்கிறார். சிவனின் மீது இளம் வயது முதலே பக்திகொண்டு வளர்கிறாள்.திருமண வயதை அடையும் பார்வதி திருமணம் செய்ய முடிவெடுக்கிறாள். ஆனால் சிவனின் தவம் அதற்கு பெரும் தடையாக இருக்கிறது. நாராயணர் ஏற்பாட்டில் மன்மதனும் ரதியும் சிவனின் தவத்தினைக் கலைக்கிறார்கள். தவம் கலைந்ததில் கோபம் அடையும் சிவன் நெற்றிக்கண்ணைத் திறந்து மன்மதனை எரித்துவிடுகிறார்.

காதல் கணவனை இழந்த ரதி கோபத்தில் பார்வதியை நோக்கி ”உனக்காகத்தான் சிவனின் தவத்தினைக் கலைத்தோம். அதனால் தான் இப்போது மன்மதனை இழந்து நிற்கிறேன். இந்த பாவம் உன்னைச் சும்மா விடாது. உனக்கும் சிவனுக்கு திருமணம் நடந்தாலும் உனக்கு குழந்தை பாக்யம் கிடைக்காது” என்று சபித்துவிடுகிறார்.

ஒரு புறம் சிவன் மீதான காதல், மறுபுறம் ரதியின் சாபம், பார்வதி கலங்கிப் போகிறார். சதியின் மறைவை மறக்க முடியாமல் தவிக்கும் சிவனை – பார்வதியோடு சேர்த்துவைக்க நாராயணரும் மற்ற தேவர்களும் படாத பாடு படுகிறார்கள்.

அதே நேரத்தில் அரக உலகத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தால் அரக்கர்களுக்கு நல்லதல்ல, எனவே இதைத் தடுக்க வேண்டும் என்று தாரகாசுரன் சுக்ராச்சாரியாரின் உதவியுடன் பல சதித்திட்டங்களை நிறைவேற்றுகிறான். ஒரு கட்டத்தில் மனம் மாறும் சிவன் பார்வதி தான் ஆதிபராசக்தி என்பதை உணர வேண்டும் என்பதற்காக பல சோதனைகளைத் தருகிறார்.

அரக்கன் தாரகாசுரனின் சதிகளைத் தகர்த்து, கடும் தவம் செய்து பார்வதி சிவனின் மனதில் இடம் பிடிக்கிறார்.

ஆனால் பார்வதியின் தாய் மைனாதேவி சிவனுக்கு பார்வதியைத் திருமணம் செய்து கொடுக்க மறுக்கிறார். ”ரதியின் சாபத்தினால் சிவனுக்கும் பார்வதிக்கு திருமணம் நடந்தால், பார்வதிக்கு குழந்தை பாக்யம் கிடைக்காது. அப்படியிருக்கும் போது ஒரு தாயாக பார்வதியை சிவனுக்கு எப்படி திருமணம் செய்து வைப்பது” என்று தன் வாதத்தை முன்வைக்கிறார்.

நாராயணர் மற்றும் தேவர்களால் மைனாதேவியின் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். ஆதிபராசக்திதான் பார்வதியாகப் பிறந்திருக்கிறாள். அவன் சிவனைத் திருமணம் செய்துகொள்வதே பிரபஞ்சத்தின் விருப்பம் என்பது மைனாதேவிக்கு உணர்த்தப்படுகிறது. அவளும் சம்மதிக்கிறாள்.

திருமணத்தின்போது சிவனின் விருந்தினர்களை அசுர அரசன் தாரகாசுரன் சிறைப்பிடிக்க, அவர்களை மீட்கப்போகும் சிவன் சிவ தனுசுவை அளித்து, தனக்குப் பிறக்க இருக்கும் மைந்தன் உயிரையும் பணயம்வைத்து விருந்தினர்களைக் காக்கிறார். சிவமைந்தன் கார்த்திக்கேயனைக் கொல்ல தாரகாசுரன் உள்ளிட்ட அசுரக் கூட்டமும், அவனைப் பாதுகாக்க சிவனும் பார்வதியும் களத்தில் நிற்கிறார்கள்.

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை