Mythology Series: கலர்ஸ் தமிழ் டிவியில் சிவசக்தி திருவிளையாடல் - விறுவிறுப்பான ஆன்மிக புராண தொடர்
சிவசக்தி திருவிளையாடல் என்ற ஆன்மிக புராண தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஆராவாரமாகவும் பிரமாண்டமாகவும் பார்ப்போரை ஈர்க்கும் சுவாரஸ்யத்துடன் கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

மிகுந்த பொருட்செலவோடு தயாராகி, சுவாரஸ்யமான திரைக்கதையோடு ஜூன் மாதம் முதல் வாரத்திலிருந்து இந்த தொடர் ஒளிப்பரப்பாகி வருகிறது.
ஆன்மிக புராண தொடர்
சிவசக்தி திருவிளையாடல் தொடரின் திரைக்கதையில் திகிர் திருப்பங்கள், பாரதத்தின் ஆன்மிக புராணச் செய்திகள் அனைத்தும் சேர்த்து விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் கூட்டும் விதமாக அமைந்துள்ளது. கண்களை ஆச்சர்யத்தில் பளபளப்பாக்கும் செட் அமைப்புகள், நேர்த்தியான கதாப்பாத்திரத் தேர்வுகள், மாயாஜாலம் நிகழ்த்தும் சிஜி வேலைப்பாடுகள் போன்றவை கைலாயத்தையும், வானுலகையும் நேரில் காண்பதுபோல், ரசிகர்களுக்கு விருந்தாக உள்ளது.
கதைச்சுருக்கம்
சிவன் – ஆதிபராசக்தி இருவரும் இணைந்த ஆனந்த தாண்டவத்தில் அண்டசராசரங்களும், அனைத்து உயிர்களும் உருவாகின்றன. எல்லாவற்றுக்குள்ளும் ஆதி ஊற்றாக சிவன் இருக்கிறார். பிறகொரு காலத்தில் பிரஜாபதி தட்சண் செய்த தவப் பயனால் தாட்சாயிணி சதி என்கிற பெயரில், அவருக்கு மகளாக அவதரிக்கிறாள் ஆதிபராசக்தி.