தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  49 Years Of Thangappathakkam: நிதி, நேர்மை தவறாத போலீஸ் எஸ்பி செளத்ரியாக வாழ்ந்த சிவாஜி கணேசன்

49 Years of Thangappathakkam: நிதி, நேர்மை தவறாத போலீஸ் எஸ்பி செளத்ரியாக வாழ்ந்த சிவாஜி கணேசன்

Jun 01, 2023, 05:15 AM IST

மறைந்த இயக்குநர் மகேந்திரனின் தங்கப்பதக்கம் என்ற நாடகத்தை அதே பெயரில் திரைவடிவம் கொடுக்கப்பட தனது அற்புத நடிப்பால் உயிரூட்டியிருப்பார் நடிப்பு திலகம் சிவாஜி கணேசன்.
மறைந்த இயக்குநர் மகேந்திரனின் தங்கப்பதக்கம் என்ற நாடகத்தை அதே பெயரில் திரைவடிவம் கொடுக்கப்பட தனது அற்புத நடிப்பால் உயிரூட்டியிருப்பார் நடிப்பு திலகம் சிவாஜி கணேசன்.

மறைந்த இயக்குநர் மகேந்திரனின் தங்கப்பதக்கம் என்ற நாடகத்தை அதே பெயரில் திரைவடிவம் கொடுக்கப்பட தனது அற்புத நடிப்பால் உயிரூட்டியிருப்பார் நடிப்பு திலகம் சிவாஜி கணேசன்.

தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு போலீஸ் கதாபாத்திரம் என்பது ஒரு கெத்தான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. எத்தனை வித்தியாசமான கதைகளில் அபார நடிப்பை வெளிப்படுத்தினாலும், போலீஸ் வேடத்தில் ஒரு படத்தில் தோன்றினாலே ரசிகர்களின் மனதில் எளிதில் குடிபுகுந்து விடாலாம். அப்படியொரு செண்டிமென்ட் தமிழ் சினிமாவில் வரும் போலீஸ் கதாபாத்திரங்களுக்கு உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Amala Paul: நன்றி சொல்ல உனக்கு.. கணவரின் அக்கறையால் நெகிழ்ந்து இருக்கும் அமலா பால்!

Aavesham OTT: ரூ. 150 கோடி வசூல் செய்த ஆவேஷம்.. ஓடிடியில் எப்போது ஸ்ட்ரீமிங்கிற்கு கிடைக்கும்?

Archana Bigg Boss: என் ஹீரோ.. இறுதியாக சீரியல் நடிகருடன் காதலில் விழுந்த அர்ச்சனா

Karthigai Deepam: கார்த்திக்,தீபாவின் சாந்தி முகூர்த்தம்!அபிராமியின் சர்ப்ரைஸ் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

அந்த வகையில் சிவாஜி கணேசனின் நடித்த 300க்கும் மேற்பட்ட படங்களில் எத்தனையோ போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்திருந்தபோதிலும், தங்கப்பதக்கம் படத்தில் அவர் தோன்றி எஸ்.பி. செளத்ரி கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நீங்காத தனியொரு இடத்தை பிடித்தது.

இதற்கு காரணமாக அமைந்தது எமோஷனல் பாணியில் அமைந்திருக்கும் படத்தின் கதையம்சம்தான். பொதுவாக ஹீரோ ஒருவர் போலீஸ் வேடத்தில் தோன்றுகிறார் என்றால் அவர் மிகவும் நேர்மையானவராகவும், நீதிக்கும் நேர்மைக்கும் தலை வணங்குபவராகவும் அவரது கதாபாத்திரம் கட்டமைக்கப்படும்.

தங்கப்பதக்கம் எஸ்,பி. செளத்ரியும் இதற்கு விதிவிலக்கு இல்லை. அத்துடன் ஒரு படி மேலே சென்று குற்றம் செய்தது மகனாக இருந்தாலும் அவனை சட்டத்தின் முன் நிறுத்தும் உச்சகட்ட நேர்மை கொண்ட போலீஸ் வேடத்தில் நடிப்பில் பட்டையை கிளப்பியிருப்பார் சிவாஜி கணேசன்.

கேஆர் விஜயா அவரது மனைவியாகவும், ஸ்ரீகாந்த் மகனாகவும் நடித்திருப்பார்கள். இதுதவிர விகே ராமசாமி, மேஜர் சுந்தர்ராஜன், சோ, ஆர்எஸ் மனோகர், மனோராமா போன்ற ஜாம்பவான் நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்தை சரியாக செய்து படத்துக்கு வெய்ட்டேஜ் கொடுத்திருப்பார்கள்.

கண்ணதாசன் வரிகளுக்கு எம்எஸ் இசைமைத்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. மிகவும் பிரபலமான சோதனை மேல் சோதனை எந்ற கிளாசிக் பாடல் இடம்பெற்றிருப்பது இந்த படத்தில்தான். அதேபோல் நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம் பாடலும் இந்த படத்தில் தான் இடம்பிடித்துள்ளது.

1970, 80களில் பல்வேறு படங்களில் கொடூர வில்லனாக மிரட்டிய செந்தாமரைக்காக, இயக்குநர் மகேந்திரன் எழுதி மேடையில் அரங்கேற்றப்பட்ட நாடகம், பி மாதவன் இயக்கத்தில் திரைப்படமாக உருவாகி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டடித்தது.

சிவாஜி கணேசன் சினிமா கேரியரில் நல்ல வசூலை பெற்ற படங்களில் ஒன்றான தங்கப்பதக்கம் வெளியாகி இன்றுடன் 49 ஆண்டுகள் ஆகிறது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.