Jayam Ravi Divorce: ஜெயம் ரவி பத்திரமாக இருக்கிறாரா? - ஓபனாக முதல் முறையாக பேசிய கெனிஷா
Sep 22, 2024, 03:01 PM IST
Jayam Ravi Divorce: நெட்டிசன் ஒருவர், ஜெயம் ரவி உங்களுடன் பத்திரமாக இருக்கிறாரா? என்று கெனிஷாவிடம் கேள்வி கேட்டு இருக்கிறார். அதற்கு அவர் தக்க பதிலடி கொடுத்து உருக்கிறார்
ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதனிடையே நடிகர் ஜெயம் ரவி தான் எதனால் மனைவியை பிரிந்தேன் என்று முதல் முறையாக பேசி உள்ளார்.
" வாழு வாழ விடு. ஒரு பாடகியுடன் என்னை தொடர்பு படுத்தி பேச வேண்டாம். அப்படி எல்லாம் செய்ய வேண்டாம் என கேட்டு கொள்கிறேன். கெனிஷா 600 லைவ் ஷோக்கலில் பாடியவர். அவருடைய வாழ்க்கையில் சொந்தமாக கஷ்டப்பட்டு முயற்சி செய்து இந்த இடத்திற்கு வந்தவர்.
கெடுக்கவும் முடியாது
நிறைய பேருக்கு உதவி செய்திருக்கிறார். அவர் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மனநல ஆசிரியர். நானும் அவரும் சேர்ந்து எதிர்காலத்தில் ஹீலிங் மையம் ஒன்றை தொடங்குவது தான் எங்களுடைய நோக்கமே. அதை கெடுக்காதீங்க. அதை யாரும் கெடுக்கவும் முடியாது “ என்றார்.
ஜெயம் ரவி விவாகரத்திற்கு காரணம் கெனிஷா என பேசப்பட்ட நிலையில் அவர் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் இருந்தார். தற்போது ஜெயம் ரவி இந்த விவகாரம் தொடர்பாக வாய் திறந்த பிறகு கெனிஷாவும் வாய் திறந்து இருக்கிறார்.
ஜெயம் ரவி பத்திரமாக இருக்கிறாரா?
நெட்டிசன் ஒருவர், ஜெயம் ரவி உங்களுடன் பத்திரமாக இருக்கிறாரா? என்று கெனிஷாவிடம் கேள்வி கேட்டு இருக்கிறார். அதற்கு கெனிஷா, நீங்கள் உங்கள் பெற்றோர்களுடன் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? உங்களிடமிருந்து உங்களுடைய கேவலமான சிந்தனைகள் இடம் இருந்தும் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? முதலில் நீங்களே ஒரு பாதுகாப்பான நபர்தானா? என்று தக்க பதிலடி கொடுத்து இருக்கிறார்.
ஆர்த்தி சொல்லும் கருத்து தவறு
ஜெயம் ரவி கூறுகையில், “என் மனைவி விவாகரத்து தொடர்பாக சொல்லி இருக்கும் கருத்து தவறானது. அவருக்குத் தெரியாமல் இது நடக்கவில்லை. நான், சமூக வலைத்தளத்தில் அறிவிப்பதற்கு முன்பே இரண்டு முறை ஆர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தேன்.
அதற்கு பிறகு தான் சமூக வலைத்தளத்தில் இந்த தகவலை முறைப்படி வெளியிட்டேன். எந்த முடிவு எடுத்தாலும் நான் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே எனது பெற்றோர்களின் ஆசை. இந்த விஷயத்திலும் அவர்கள் அப்படி தான் நினைக்கிறார்கள். எனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
கால சூழல் காரணமாக பிரிவு
அதில் முதல் மகன் சற்று வளர்ந்து இருப்பதால் நான் ஏற்கனவே அவனிடம் விவாகரத்து குறித்து சொல்லி இருக்கிறேன். இருப்பினும் தன் தாய் ஆர்த்தியை நான் பிரிவது அவர்களுக்கு விருப்பம் இல்லை. ஆனால் ஒன்றும் செய்ய முடியது. கால சூழல் காரணமாக நான் ஆர்த்தியை பிரிய முடிவு செய்து உள்ளேன் " என்றார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சினிமா தொடர்பான பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து பெற இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்!