Jayam Ravi: பாடகியுடன் ரகசிய உறவு.. திருமண நாளில் கூட மனைவியை கண்டு கொள்ளாத ஜெயம் ரவி - விவாகரத்திற்கு இதுவும் காரணமா?-rumours spreading that jayam ravi was in relationship with singer in goa - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jayam Ravi: பாடகியுடன் ரகசிய உறவு.. திருமண நாளில் கூட மனைவியை கண்டு கொள்ளாத ஜெயம் ரவி - விவாகரத்திற்கு இதுவும் காரணமா?

Jayam Ravi: பாடகியுடன் ரகசிய உறவு.. திருமண நாளில் கூட மனைவியை கண்டு கொள்ளாத ஜெயம் ரவி - விவாகரத்திற்கு இதுவும் காரணமா?

Aarthi Balaji HT Tamil
Sep 20, 2024 06:52 AM IST

Jayam Ravi: பாடகி கெனிஷாவை, ஜெயம் ரவி காதலிப்பதாக பல தகவல்கள் வெளியாகின. ஜெயம் ரவி சமீப காலமாக கோவாவில் அடிக்கடி விடுமுறையை கழித்து வருகிறார்.

Jayam Ravi: பாடகியுடன் ரகசிய உறவு.. திருமண நாளில் கூட மனைவியை கண்டு கொள்ளாத ஜெயம் ரவி - விவாகரத்திற்கு இதுவும் காரணமா?
Jayam Ravi: பாடகியுடன் ரகசிய உறவு.. திருமண நாளில் கூட மனைவியை கண்டு கொள்ளாத ஜெயம் ரவி - விவாகரத்திற்கு இதுவும் காரணமா?

ஜெயம் ரவியுடன் தங்கள் உறவு குறித்து வெளிப்படையாக பேச முயற்சித்ததாகவும், ஆனால் அந்த முயற்சிகள் வீணாகிவிட்டதாகவும் அவரின் மனைவி ஆர்த்தி ரவி கூறினார். ஜெயம் ரவியின் திடீர் அறிவிப்பு தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றும் வேதனை தெரிவித்தார்.

18 வருட திருமண வாழ்க்கை

18 வருட திருமண வாழ்க்கையில் இதுபோன்ற முக்கியமான முடிவை எடுக்கும்போது, ​​பரஸ்பர மரியாதையுடனும், தனியுரிமையுடனும் கையாளப்பட்டிருக்க வேண்டும் என்று ஆர்த்தி ஜெயம் ரவி வெளியிட்ட செய்தி குறிப்பு வைரலானது. சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் ஜெயம் ரவியும் விவாகரத்து மனு தாக்கல் செய்து உள்ளார்.

ஜெயம் ரவி முற்றிலும் தன்னிச்சையான முடிவை எடுத்ததாக ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் விமர்சித்தனர். ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து பற்றி பேசப்பட்டு வரும் நிலையில் நடிகர் சங்கம் தொடர்பான சில தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் உலா வருகின்றன.

மனைவியை கண்டு கொள்ளாத ஜெயம் ரவி

பாடகி கெனிஷாவை, ஜெயம் ரவி காதலிப்பதாக பல தகவல்கள் வெளியாகின. ஜெயம் ரவி சமீப காலமாக கோவாவில் அடிக்கடி விடுமுறையை கழித்து வருகிறார். ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் திருமண நாளான ஜூன் 4 அன்று அவர், ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினருடன் கலந்து கொள்ளவில்லை. கடந்த 14 ஆண்டுகளாக, ஜெயம் ரவி தனது திருமண ஆண்டு விழாவில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட தனது படப்பிடிப்பை நிறுத்தினார். ஆனால் இம்முறை அது நடக்கவில்லை.

அவர் கோவாவிற்கு விடுமுறைக்காக சென்றதை ஆர்த்தி கண்டுபிடித்தார், அதுவும் பிரச்னைகளை ஏற்படுத்தியது. ஜெயம் ரவி, ஆர்த்தி பெயரில் வாங்கிய காரை கோவா பயணத்திற்கு பயன்படுத்தினார். தடை செய்யப்பட்ட சன் ஃபில்டர் பேப்பர் ஒட்டப்பட்டிருந்ததால் அவரின் வாகனத்தை பயன்படுத்திய போது, ​​போலீசார் அதை பிடித்து காருக்கு அபராதம் விதித்தனர். ஆர்த்தி பெயரில் வாகனம் இருந்ததால், இது தொடர்பாக மோட்டார் வாகனத் துறையின் செய்தி ஆர்த்தியின் போனுக்கு சென்றது.

ரவியின் பயணமும் அப்படி தான் ஆர்த்திக்கு தெரிய வருகிறது. ஆனால் அவரது கணவரிடம் இருந்து உறுதியான பதில் கிடைக்காததால், ஆர்த்தி சிலரிடம் விசாரித்தார். அப்போது தான் பாடகி கெனிஷாவின் பெயர் ஆர்த்தியின் காதில் விழுந்தது.

ஜெயம் ரவிக்கும், ஆர்த்திக்கும் இடையே இந்தப் பிரச்னை நடந்து கொண்டிருக்கும் போதே, இன்னொரு பிரச்னை எழுந்தது. ஆர்த்தியின் காரை கெனிஷா அதீத வேகத்தில் ஓட்டிச் சென்றதையும் ஆர்த்தி அறிந்தார். இதனால் ஜெயம் ரவி - ஆர்த்தி உறவில் பெரிய விரிசல் விழுந்தது. பின்னர் நடத்திய விசாரணையில், கோவா வரும் போது ஜெயம் ரவி வழக்கமாக தங்கும் விடுதியில் தங்கவில்லை என்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இரண்டு காரணங்கள்

ஜெயம் ரவி கோவாவில் ஆடம்பர பங்களா ஒன்றை வாங்கியுள்ளதாக தமிழ் திரையுலக ஊடகங்களில் உறுதிப்படுத்தப்படாத செய்தி ஒன்று கூறுகிறது. அதே நேரத்தில் ஆர்த்தியின் தாய் சுஜாதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விவாகரத்து அறிவிப்பின் பின்னணியில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.