Jayam Ravi: எல்லாமே தவறு.. உண்மை தெரியவரும்.. ஆர்த்தியை விவாகரத்து செய்ய ஜெயம் ரவி சொன்ன காரணம்?
Jayam Ravi: அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை நீதிமன்றம் பார்த்து கொள்ளும், அப்போது பல உண்மைகளும் தெரியவரும். வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு செய்து என்னை பேசுவதை ஏற்று கொள்ள முடியவில்லை என ஜெயம் ரவி கூறினார்.

Jayam Ravi: எல்லாமே தவறு.. உண்மை தெரியவரும்.. ஆர்த்தியை விவாகரத்து செய்ய ஜெயம் ரவி சொன்ன காரணம்?
Jayam Ravi: ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதனிடையே நடிகர் ஜெயம் ரவி தான் எதனால் மனைவியை பிரிந்தேன் என்று முதல் முறையாக பேசி உள்ளார்.
ஆர்த்தி சொல்லும் கருத்து தவறு
அவர் கூறுகையில், “என் மனைவி விவாகரத்து தொடர்பாக சொல்லி இருக்கும் கருத்து தவறானது. அவருக்குத் தெரியாமல் இது நடக்கவில்லை. நான், சமூக வலைத்தளத்தில் அறிவிப்பதற்கு முன்பே இரண்டு முறை ஆர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தேன்.
அதற்கு பிறகு தான் சமூக வலைத்தளத்தில் இந்த தகவலை முறைப்படி வெளியிட்டேன். எந்த முடிவு எடுத்தாலும் நான் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே எனது பெற்றோர்களின் ஆசை. இந்த விஷயத்திலும் அவர்கள் அப்படி தான் நினைக்கிறார்கள். எனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.