தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஃபுல் போதை.. தள்ளாடிய நடிகை.. எதாவது பேசினால் எல்லாம் வெளியே வரும்.. மிரட்டிய பாடகர்

ஃபுல் போதை.. தள்ளாடிய நடிகை.. எதாவது பேசினால் எல்லாம் வெளியே வரும்.. மிரட்டிய பாடகர்

Oct 05, 2024, 07:05 AM IST

google News
நடிகை கங்கனா ரணாவத்தும் அவரது தோழியும் எனது காரில் அதிகளவு போதைப் பொருட்கள் எடுத்துக் கொண்டு நிலை தடுமாறி இருந்தார் என பாடகர் ஜஸ்பிர் ஜாசி கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நடிகை கங்கனா ரணாவத்தும் அவரது தோழியும் எனது காரில் அதிகளவு போதைப் பொருட்கள் எடுத்துக் கொண்டு நிலை தடுமாறி இருந்தார் என பாடகர் ஜஸ்பிர் ஜாசி கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நடிகை கங்கனா ரணாவத்தும் அவரது தோழியும் எனது காரில் அதிகளவு போதைப் பொருட்கள் எடுத்துக் கொண்டு நிலை தடுமாறி இருந்தார் என பாடகர் ஜஸ்பிர் ஜாசி கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத் தனது தோழியுடன் அதிகளவு போதையில் என் காரில் பயணித்தார். நான் இதுவரை அந்த அளவு போதைப் பொருட்களை பயன்படுத்திய நபர்களை பார்க்கவில்லை என பாடகர் ஜஸ்பிர் ஜாசி கூறி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நடிகை கங்கனா அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இவர் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள் குறித்து சர்ச்சையாக பேசி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தினார். பின் இவரின் கருத்துக்கு கடும் எதிரப்புகள் எழுந்த நிலையில், அந்தக் கருத்தை வாபஸ் வாங்கினார்.

பஞ்சாப் மக்களை தாக்கி பேசிய கங்கனா

பின் தற்போது அதிகளவில் சீக்கிய மதத்தினர் குறித்தும் பஞ்சாப் மக்கள் குறித்தும் அவதூறு கருத்துகளையும் சர்ச்சை கருத்துகளையும் பேசி வருகிறார்.

முன்னதாக இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கங்கனா ரணாவத் கலந்து கொண்டு மக்களிடம் உரையாற்றினார், அப்போது, பஞ்சாப் மாநிலத்தில் மதுக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த நிலை இமாச்சல பிரதேச இளைஞர்களுக்கு வரக் கூடாது. நாம் அவர்களைப் போல் பாதிக்கப்படக் கூடாது எனக் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பலதரப்பட்ட மக்களிடமிருந்து எதிர்ப்பு வந்தது.

அதிக போதையில் கங்கனா

இந்நிலையில், இதுகுறித்து பாடகர் ஜஸ்பிர் ஜாசி தற்போது கருத்து தெரிவித்துள்ளார். கங்கனா ரணாவத் அதிகளவில் பஞ்சாப் மக்களை தாக்கி பேசி வருகிறார். இதனால், அவர் குறித்த உண்மைத் தகவல்களை கூற நான் இப்போது கட்டாயப்படுத்தப் பட்டுள்ளேன். ஒருநாள் டெல்லியில் இருந்தபோது, கங்கனா அவருடைய தோழியுடன் எனது காரில் இருந்தார். அப்போது அவர் அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்தார். அவர் சுய நினைவிலேயே இல்லை. நிலைதடுமாறி இருந்தார்.

பகிரங்கமாக மிரட்டிய பாடகர்

அவர் எடுத்துக் கொண்ட அளவு மதுவையும் போதைப் பொருளையும் இதுவரை வேறு யாரும் எடுத்துக் கொண்டு நான் பார்த்ததே இல்லை என்றார். அத்துடன், கங்கனா தொடர்ந்து பஞ்சாப் மாநிலம் மற்றும் சீக்கியர்கள் பற்றி பேசுவதை நிறுத்த வேண்டும். இல்லையெனில், அவர் குறித்த வெளியே வராத பல தகவல்களை நான் கூற நேரிடும் என மிரட்டியுள்ளார்.

எமர்ஜென்சி திரைப்படத்தில் சர்ச்சை

இவர், மது விஷயத்தில் மட்டுமின்றி, அவரே இயக்கி நடித்த எமர்ஜென்சி திரைப்படத்திலும் சீக்கியர்கள் குறித்து பேசி சர்ச்சையாகியுள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று படமான எமர்ஜென்சியில் கங்கனா ரணாவத் இந்திரா காந்தியாக நடித்துள்ளார். அந்தப் படத்தில் சீக்கியர்கள் துப்பாக்கிச் சூடு பற்றி அவதூறான கருத்துகள் இடம் பெற்றிருப்பதாகக் கூறி தணிக்கை குழு அந்தக் காட்சியை நீக்க உத்தரவிட்டது. ஆனால், கங்கனா ரணாவத், அதற்கு மறுப்பு தெரிவித்த காரணகத்தால், படம் வெளியாக காலதாமதம் ஆகி வருகிறது.

மகாத்மா காந்தி தேசப்பிதா அல்ல..

முன்னதாக மகாத்மா காந்தி குறித்தும் அவர் சர்ச்சையான கருத்துகளை கூறியது பெரும் விமர்சனங்களையும் எதிர்ப்பையும் பெற்றது. கங்கனா ரணாவத், தேசப்பிதா என எழுதப்பட்ட மகாத்மா காந்தி சிலை முன் நின்று, நம் இந்திய நாட்டில் தேசப்பிதா என எவரும் இல்லை. அனைவருமே பாரதத் தாயின் மகன்கள் தான். அப்படி பார்த்தால், மகாத்மா காந்தியும், லால் பகதூர் சாஸ்திரியும் பாரதத் தாயின் ஆசி பெற்ற மகன்கள் எனக் கூறியிருந்தார்.

இந்தக் கருத்துக்கு அரசியல் தலைவர்கள், மகாத்மா காந்தி ஆதரவாளர்கள், மக்கள் என பலதரப்பில் இருந்தும் கங்கனாவிற்கு பல விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை