Emergency: பணிந்தது எமர்ஜென்சி.. இதனால் எந்த பாதிப்பும் இல்லையாம்.. கடுப்பின் உச்சத்தில் நடிகை!
Emergency: மறைந்த பிரதமர் இந்திரா காந்தி குறித்த எமர்ஜென்சி திரைப்படம் விரைவில் திரைக்கு வரவேண்டும் என்பதால், தணிக்கை குழுவின் முடிவிற்கு நீண்ட இழுபறிக்குப் பின் கட்டுப்பட்டுள்ளார் நடிகையும் இப்படத்தின் இயக்குநருமான கங்கனா ரணாவத்.

Emergency: பணிந்தது எமர்ஜென்சி.. இதனால் எந்த பாதிப்பும் இல்லையாம்.. கடுப்பின் உச்சத்தில் நடிகை!
நடிகை கங்கனா ரணாவத் பலகட்ட போராட்டத்திற்குப் பின், தனது இயக்கத்தில் உருவாகியுள்ள எமெர்ஜென்சி திரைப்படத்தை வெளியிட உள்ளார். இந்திரா காந்தியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட இந்தப் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெற தனது முடிவை மாற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தாம்தூம் மூலம் அறிமுகம்
தமிழில் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம்தூம் திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களிக்கு பரிட்சையமானவர் கங்கனா ரணாவத். இவர் தன் அசைக்க முடியாத நடிப்புத் திறமையால் பாலிவுட்டின் முக்கிய கதாநாயகிகளில் ஒருவரானார்.
இயக்குநர் அவதாரம்
இதையடுத்து, படம் நடிப்பதுடன் அதனை இயக்கவும் எண்ணி, மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எமர்ஜென்சி என்ற படத்தை இயக்கியுள்ளார் கங்கனா. இந்தப் படத்தில் இந்திரா காந்தி கதாப்பாத்திரத்திலும் இவரே நடித்துள்ளார்.