Singappenne Serial: அழகன் யார்னு சொல்லு..அன்பின் கழுத்தை நெறிக்கும் ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்!
Sep 24, 2024, 08:35 AM IST
Singappenne Serial: ஆனந்தி அடுத்த கட்டமாக அழகனைப் பற்றி அன்பிடம் கேட்கிறாள். காதலையே விட்டுக்கொடுத்த பின், ஆனந்திடம் என்னசொல்வதென்று தெரியாமல் நிற்கிறான் அன்பு. - சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்!
சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து இன்று வெளியான புரோமோவில், ஆனந்தியின் பரம்பரை நிலத்தை மகேஷ் பணம் கொடுத்து, அன்பு மீட்ட நிலையில், ஆனந்தி அடுத்த கட்டமாக அழகனைப் பற்றி அன்பிடம் கேட்கிறாள். காதலையே விட்டுக்கொடுத்த பின், ஆனந்திடம் என்னசொல்வதென்று தெரியாமல் நிற்கிறான் அன்பு.
இதற்கிடையே, அன்புவின் அம்மா நீ சம்மதம் சொன்னாலும் சரி, சொல்லாவிட்டாலும் சரி, உனக்கு திருமணம் நடப்பது நிச்சயம் என்று கறாராக சொல்லுகிறார். இதைக் கேட்ட அன்பு அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறான். மற்றொரு பக்கம் மகேஷ், ஆனந்தியிடம், பரம்பரை நிலத்தை நீங்கள் பத்திரமாக மீட்டு விட்டீர்களா என்று கேட்க, ஆனந்தி சார் உங்களுக்கு எப்படி தெரியும் என்று மறு கேள்வி கேட்டாள். அதற்கு அன்பு எல்லாவற்றையும் என்னிடம் சொல்லிவிட்டான் என்று கூறினான். இதைக்கேட்ட ஆனந்தி அன்பை முறைத்து பார்க்கிறாள். இத்தகைய நிகழ்வுகள் இன்றைய புரோமோவில் இடம் பெற்று இருக்கின்றன.
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
நேற்றைய எபிசோடில், சொக்கலிங்கமும், நிலத்தை அடமானத்திற்கு கொடுத்தவரும் ஒருவழியாக அழகப்பனை பத்திரத்தில் கையெழுத்து போட அழைத்துச் செல்லும் கடைசி நேரத்தில், ஆனந்தியும் அன்பும் பணத்தோடு ஓடி வந்தார்கள். இதைப் பார்த்த அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். அதன் பின்னர் பணத்தை கொடுத்து, நிலத்துக்கான பத்திரத்தை அவர்கள் கேட்க, ஊர் தரப்பினரும் பின்னர் என்னப்பா….. ஆனந்தி பணத்தோடு வந்துவிட்டாள். அதனை வாங்கிக் கொண்டு பத்திரத்தை கொடுங்கள் என்றார்கள்.
இந்த நிலையில் அடமானம் கொடுத்தவர் சொக்கலிங்கத்தை பார்க்க, அன்பு என்ன அவரை பார்க்கிறீர்கள் என்று கேட்டார். அப்போது ஆனந்தி, அடமானத்திற்கு வாங்கியவர் வெறும் பொம்மைதான். அதற்கு சாவியாக இருந்தவர் இந்த சொக்கலிங்கம் தான் என்று சாட, உடன் இருந்தவன் யாரிடம் பேசுகிறீர்கள் என்று தெரியுமா என்று கேட்க, அன்பு அவரை அடக்கப் பார்த்தான். அதற்கு அவன் எகிற, உன்னுடைய அண்ணன சொக்கலிங்கமே அமைதியாக இருக்கும் பொழுது, நீ என்ன துள்ளுகிறாய் என்றான் அன்பு.
நன்றி கூறுகிறார்கள்
மேலும், நீங்கள் அனுப்பிய ஆட்களை ஏற்கனவே துவைத்து விட்டு தான் அங்கு வந்திருக்கிறேன் என்று அவன் சொல்ல, சொக்கலிங்கமும் அவனது கூட்டாளியும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். தொடர்ந்து அடமான பத்திரத்தை வாங்கிய ஆனந்தி, கடுப்பில் சில வார்த்தைகளை விட, நிலத்தை அடமானத்திற்கு கொடுத்தவர் இன்னும் உங்கள் வீடு என்னிடம் இருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம் என்றார். அதற்கு ஆனந்தியோ இதை மீட்டெடுத்த எனக்கு அதையும் மீட்க தெரியும் என்று சவால் விட்டாள். இதையடுத்து ஆனந்தியின் அப்பாவும், அம்மாவும் அன்பை கடவுள் போல பாவித்து நன்றி கூறுகிறார்கள்.
ஆனால், அவன் மகேஷ்தான் ஆனந்திக்கு பணம் கொடுத்தார். என்பதை சொல்லக்கூடாது என்று மகேஷ் கூறியிருந்ததால், அவன் எதுவும் சொல்ல முடியாத கட்டத்திலிருந்து, குற்ற உணர்ச்சியோடு தவித்துக் கொண்டிருந்தான். இதனை மகேஷிடம் அவன் சொல்ல யார் பணம் கொடுத்தாலும் அவருடன் உடன் இருந்து உறுதுணையாக நிற்பதற்கு நல்ல இதயம் வேண்டும். அது உன்னிடம் இருக்கிறது. அதனால் நீ எந்த குற்ற உணர்வும் கொள்ள வேண்டாம். ஆனந்தியும் நீயும் பத்திரமாக வந்து சேருங்கள் என்று சொன்னான்” என்று பேசினார்.
டாபிக்ஸ்