தனி இரவில் அழகு காதலி.. சுவைக்கு மொறுவல் தோசை.. கதவை தட்டிய அம்மா.. அலறிய அன்பு! -சிங்கப்பெண்ணே சீரியல்!
Oct 15, 2024, 09:51 AM IST
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி அன்பு வீட்டில் இரவு தங்கிய நிலையில், திடீரென்று அன்புவின் அம்மா மற்றும் தங்கை வந்து கதவை தட்டினார்கள்
சிங்கப்பெண்ணே சீரியலிருந்து இன்று வெளியான புரோமோவில், “ஆனந்தியை வெளியே அனுப்பிய ஹாஸ்டல் வார்டனை, அவளது தோழிகள் சரமாரியாக கேள்வி கேட்டனர். அத்துடன் ஐஸ்வர்யாவையும், ஆனந்தியை வெளியே அனுப்ப நீ எப்படி சம்மதித்தாய் என்ற ரீதியில் சாடினர். இன்னொரு பக்கம், எதிர்பாராத விதமாக கோயிலுக்கு சென்று ஒரு வாரம் கழித்து வருகிறோம் என்று சொல்லி விட்டு சென்ற அன்புவின் அம்மாவும், தங்கையும் வந்து விட்ட நிலையில், ஆனந்தியை வீட்டில் வைத்திருக்கும் அவன் என்ன செய்வது என்று திணறிக்கொண்டிருந்தான். ” இவை தொடர்பான காட்சிகள் இன்றைய புரோமோவில் இடம் பெற்று இருக்கின்றன
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
சிங்கப்பெண்ணே சீரியலில் நேற்றைய தினம் ஹாஸ்டல் வார்டன் ஆனந்தியை, நடு இரவில் சுவர் ஏறி குதித்து ஹாஸ்டலுக்குள் நுழைந்த காரணத்திற்காக, வெளியே அனுப்பிவிட்டார். இந்த விஷயம் மகேஷுக்கு தெரிய வர அவன் அவனது வீட்டில் அவளை தங்க வைக்க முயன்றான். ஆனால், அங்கு பெரும் பிரச்சினை வெடிக்க ஆனந்தியை, அன்பு வீட்டிற்கு அழைத்து வந்து, இன்று ஒரு நாள் மட்டும் ஆனந்தி இங்கு இருக்க வேண்டும் என்று அன்புவிடம் கூறினான். இதனையடுத்து அன்பு என்ன பிரச்சினை காரணமாக, நீங்கள் இந்த நடு இரவில் வெளியே சென்றீர்கள் என்று கேட்டான்.
முதலில் சொல்ல மறுத்த ஆனந்தி, பின்னர் ஐஸ்வர்யாவை ஒருவர் கடத்தி வைத்திருந்ததையும், அதிலிருந்து அவளைக் காப்பாற்றியதையும் கூறினாள். இதைக் கேட்ட மகேஷ், இவ்வளவு நேரம் நான் கேட்டேன் நீ கூறவில்லை. அன்பு கேட்டவுடன் கூறிவிட்டாய் என்று கேட்டான். அதற்கு, ஆனந்தி பதில் ஏதும் சொல்லவில்லை.
திரும்பி வந்த அம்மா
அன்புவின் அம்மாவும், தங்கையும் கோயில் திருவிழாவுக்கு சென்றிருந்ததால், அன்பும் ஆனந்தியை தன் வீட்டில் இருப்பதற்கு அனுமதித்தான். இருவரும் இரவில் தனியாக வீட்டில் இருந்தார்கள். ஆனந்திக்கு பசிக்கும் என்று தெரிந்து, அன்பு அவளுக்கு தோசை சுட்டுக்கொடுத்தான். தொடர்ந்து, சாப்பிட்டுவிட்டு தன்னுடைய அறையிலேயே தங்கிக் கொள்ளுமாறும் கூறிவிட்டுச் சென்று விட்டான். காலை விடிந்தது; அன்பு எழுந்ததுமே, அருகில் காபி இருந்தது. அதைப் பார்த்தவுடன் ஆஹா காலையிலேயே காபியா என்ற ரீதியில் அதை ரசித்து குடித்தவன், வீட்டிற்குள் வந்து பார்த்த பொழுது வீடு முழுவதும் ஆனந்தி சாம்பிராணி புகையை போட்டு இருந்தாள்.
இதற்கிடையே வீட்டின் பெல் அடிக்க வெளியே வந்து அன்பு கதவை திறந்த பொழுது, அம்மாவும் தங்கையும் வந்திருந்தார்கள். ஒரு வாரம் கழித்து வருகிறேன் என்று கூறியவர்கள், திடீரென்று வந்து நின்றதை பார்த்த அதிர்ச்சி அடைந்த அன்பு, இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் திருதிருவன முழித்துக் கொண்டிருந்தான். அடுத்து என்ன நடக்க இருக்கிறது என்பதை இன்று பார்க்கலாம்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்