தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நடு இரவு.. தனி வீடு.. குமுறிய காதல்..கொட்டு வைத்த ஆனந்தி.. ஆசுவாசத்தில் மகேஷ்! - சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்

நடு இரவு.. தனி வீடு.. குமுறிய காதல்..கொட்டு வைத்த ஆனந்தி.. ஆசுவாசத்தில் மகேஷ்! - சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்

Oct 14, 2024, 12:11 PM IST

google News
சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு மற்றும் ஆனந்தி காதல் என்ன ஆனது? மகேஷ் குறுக்கிட்டு செய்யும் விஷயங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு மற்றும் ஆனந்தி காதல் என்ன ஆனது? மகேஷ் குறுக்கிட்டு செய்யும் விஷயங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு மற்றும் ஆனந்தி காதல் என்ன ஆனது? மகேஷ் குறுக்கிட்டு செய்யும் விஷயங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து இன்று வெளியான புரோமோவில் நேற்று மகேஷ், ஆனந்தியை அன்பு வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அப்போது மகேஷ் எவ்வளவு கேட்டும் ஹாஸ்டல் வார்டன் ஆனந்தியை வெளியே அனுப்பியதற்கான காரணத்தை சொல்லாத ஆனந்தி, அன்பு கேட்டவுடன் ஆனந்தி கூறி விட்டாள். இதையடுத்து மகேஷ், நான் அவ்வளவு தூரம் கேட்டேன். ஆனால், அப்போது சொல்ல மறுத்த நீ, அன்பு கேட்டவுடன் உடனே சொல்லி விட்டாயே என்றான்.

அன்பு வீட்டில் அவனது அம்மாவும் தங்கையும் கோயில் திருவிழாக்கு சென்றிருந்ததால், மகேஷ் சென்ற பின்னர் இவர்கள் இருவர் மட்டும் வீட்டில் இருந்தனர். தொடர்ந்து, இருவரும் ஒன்றாக சாப்பிட உட்கார்ந்த பொழுது, ஆனந்திக்கு சிரசில் ஏற, யாரோ உங்களை நினைக்கிறார் என்றான் அன்பு. அதற்கு ஆனந்தி வேறு யார் நினைப்பார். மகேஷ் சார்தான் நினைப்பார் என்று கூறினாள். இது தொடர்பான நிகழ்வுகள் இன்றைய சிங்கப்பெண்ணே சீரியல் எபிசோடில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கலாம்

கடந்த எபிசோடில் நடந்தது என்ன?

சிங்கப்பெண்ணே சீரியலின், கடந்த எபிசோடில் ஆனந்தி, காயத்திரிக்காக இரவு ஹாஸ்டலுக்கு தாமதமாக வந்து, சுவர் ஏறி குதித்த நிலையில், இதைப் பார்த்த ஹாஸ்டல் வார்டன் அவளை கையும் களவுமாக பிடித்ததோடு, இந்த நேரத்தில் எங்கே சென்று வருகிறாய் என்று கேட்டார். ஆனால், காயத்ரியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஆனந்தி உண்மையைச் சொல்ல மறுத்துவிட்டாள். இதில் கோபம் அடைந்த வார்டன் அவளை இரவோடு இரவாக ஹாஸ்டலில் இருந்து விரட்டினாள்.

இதையடுத்து எங்கே செல்வது என்று தெரியாமல் நின்ற ஆனந்தியை மகேஷ் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். இதைப் பார்த்த மகேஷின் அம்மாவும், அப்பாவும் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால், மகேஷ் ஆனந்தி நீ மேலே சென்று இரு. நான் பேசிவிட்டு வருகிறேன் என்று கூறினான். ஆனால் மகேஷின் அம்மாவோ, இவள் எதற்காக இங்கு வந்திருக்கிறாள் என்ற காரணம் தெரியாமல், யாரும் மேலே செல்லக்கூடாது என்று கறாராக சொல்லிவிட்டார்.

வார்டன் பார்த்த வேலை

இதையடுத்து மகேஷ் ஆனந்திக்கு நடந்ததை கூறினான். இதை சொன்ன உடன், மகேஷின் அம்மா அங்கேயும் இவள் ஏதாவது தவறு செய்திருப்பாள். அதற்காகத்தான் வார்டன் இவளை வெளியே அனுப்பி இருப்பார் என்றாள். அதனைத் தொடர்ந்து பேசிய மகேஷ், ஆனந்தி இங்கே வருவது இது முதல் முறை அல்ல; உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த போதும், நான் விபத்தில் சிக்கி சிகிச்சையில் இருந்த போதும், ஆனந்தி இங்கே வந்து நம்மை கண்ணும், கருத்துமாக பார்த்துக் கொண்டாள்.

அப்படி இருக்கையில் ஒரு இரவு அவளுக்கு உதவி செய்வதில் என்ன கெட்டு விடப் போகிறது என்று மகேஷ் கேட்டான். அதற்கு அவரது அம்மா உன்னுடைய விபத்து இவளால்தான் நடந்தது. அந்த குற்ற உணர்ச்சியை போக்குவதற்காக தான் அவள் உன்னை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டாள் என்று சொல்லி முடிப்பதற்குள் குறுக்கிட்ட மகேஷ், உங்கள் விஷயத்தில் உங்களால் ஆனந்தி மீது பழி சொல்ல முடியாது அல்லவா என்று கேட்டான்.

தங்க வைத்துக் கொள்

இதையடுத்து வந்த மகேஷின் அப்பா ஆனந்தியை என்னுடைய கெஸ்ட் ஹவுஸில் தங்க வைத்துக் கொள் என்று கூறினார். இதில் இன்னும் கோபம் அடைந்த மகேஷின் அம்மா, ஒருவேளை அவள் நம் வீட்டில் இருந்தால் நான் வெளியே சென்று விடுவேன் சொல்ல அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதைப்பார்த்து பதறிய ஆனந்தியோ என்னால் உங்களுக்குள் ஏன் சண்டை வர வேண்டும். நான் ஊருக்கு சென்று விடுகிறேன் என்று சொல்ல, மகேஷ் இல்லை செல்லக்கூடாது என்று கூறிவிட்டான். இந்த நிலையில் அப்பாவிடம் தனியாக பேச வேண்டும் என்று அவரை மேலே அழைத்துச் சென்ற மகேஷ், நான் அம்மாவிடம் இப்போது ஆனந்தியை காதலிப்பதை கூறி விட போகிறேன் என்று சொன்னான். அதற்கு அனுமதி மறுத்த அப்பா, ஆனந்தியை தற்போது பாதுகாப்பாக வைப்பதற்கு உனக்குத் தெரிந்த நம்பிக்கையான நண்பர் வீட்டில் தங்க வை என்று கூறினார். இதையடுத்து மகேஷ் இந்த பிரச்சினையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி, ஆனந்தியை அன்பு வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அன்பு வீடா என்று பயந்த ஆனந்தியிடம், மகேஷ் அன்பின் அம்மாவை நான் சமாளித்துக் கொள்கிறேன் நீ அதை பற்றி கவலைப்படாதே என்று கூறி அன்புவிடம் ஒப்படைத்தான்.

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி