தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அம்மாவை முட்டாளாக்கும் அன்பு.. கரையானை வைத்து ஆனந்தி எடுக்கும் பாடம்.. சிங்கப்பெண்ணே இன்றைய எபிசோட்

அம்மாவை முட்டாளாக்கும் அன்பு.. கரையானை வைத்து ஆனந்தி எடுக்கும் பாடம்.. சிங்கப்பெண்ணே இன்றைய எபிசோட்

Oct 26, 2024, 09:25 AM IST

google News
என்னைக் காப்பாற்ற உங்கள் அம்மாவை முட்டாளாக்குவது நல்லதல்ல என ஆனந்தி அன்புவிற்கு அறிவுரை கூறியுள்ளார்.
என்னைக் காப்பாற்ற உங்கள் அம்மாவை முட்டாளாக்குவது நல்லதல்ல என ஆனந்தி அன்புவிற்கு அறிவுரை கூறியுள்ளார்.

என்னைக் காப்பாற்ற உங்கள் அம்மாவை முட்டாளாக்குவது நல்லதல்ல என ஆனந்தி அன்புவிற்கு அறிவுரை கூறியுள்ளார்.

கோகிலாவைக் காப்பாற்ற முயன்று ஹாஸ்டலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆனந்தி அன்புவின் உதவியுடன் அவரது வீட்டில் தங்கியுள்ளார். சமீப காலமாக அன்புவின் நடவடிக்கையால் சந்தேகமடையும் அவரது அம்மா, அன்புவின் அறையில் இருந்து வேறொருவருடைய செல்போனை எடுத்ததால், மீண்டும் அன்பு மேல் சந்தேகமடைகிறார். இதுகுறித்து அன்புவிடம் பலமுறை கேட்டும் அவர் ஆனந்தியைக் காப்பாற்ற உண்மையை மறைக்கிறார்.

உண்மையை சொல்ல நினைக்கும் ஆனந்தி

இதனால், மிகுந்த கவலை அடையும் ஆனந்தி, அன்புவின் அம்மாவிடம் உண்மையை கூறி விடலாம் என நினைக்கிறார். அந்த சமயத்தில் அவர், அன்பு செய்யும் தவறுகளை எடுத்துரைக்கிறார். என்னை பிரச்சனையில் இருந்து காப்பாற்ற நீங்கள் எடுக்கும் முயற்சி எனக்கு புரிகிறது.

தொடர்ந்து பொய் சொல்லும் அன்பு

சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட நீங்கள் உங்கள் அம்மா மற்றும் தங்கச்சியிடம் அவ்வளவு பொய் சொல்கிறீர்கள். அவ்வளவு திட்டு வாங்குகிறீர்கள். அவர்களின் காலில் விழுந்து கெஞ்சுகிறீர்கள்.

இது அனைத்தையும் நீங்கள் எனக்காக விருப்பப்பட்டு தான் செய்கிறீர்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்களை நீங்கள் முட்டாளாக்கும் போதும், அவர்களிடம் சொன்ன பொய் ஒருநாள் தெரியவந்தால் என்ன ஆகும் என்ற பயம் உங்கள் கண்களில் தெரிகிறது. அவர்கள் உங்களை எப்படி நடத்துவார்கள் என்ற பயமும் உங்களிடம் இருக்கிறது எனக் கவலையுடன் பேசினார்.

சமாதானம் செய்ய முயலும் அன்பு

ஆனந்தி கவலை அடைவதைக் கண்ட அன்பு, எனக்கு எந்த கவலையும் இல்லை. நீங்கள் அப்படி நினைக்க வேண்டாம் எனக் கூறினார்.

அதைக் கேட்ட ஆனந்தி, சந்தேகம் என்பது கரையான் மாதிரி. அதை குடும்பத்தில் படரவிட்டால், அரித்து உறவையே பாதித்துவிடும். சந்தேகம் உறவை பாழாக்கிவிடும். நாளுக்கு நாள் உங்கள் அம்மாவிற்கு சந்தேகம் அதிகரித்து வருகிறது. நீங்கள் இத்தனையும் எனக்காகத் தான் செய்தீர்கள் எனத் தெரிந்தால் அவர்கள் மனது மிகவும் கஷ்டப்படும் என தன் பக்க நியாயத்தை எடுத்துக் கூறுகிறார்.

இதைக் கேட்ட அன்பு ஆனந்திக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் நிற்கிறார். மேலும், தன் மனதில் உள்ள காதலை வெளியில் சொல்லவும் முடியாமல், உள்ளேயே வைத்துக் கொள்ளவும் முடியாமல் தவித்து வரும் நிலையில், ஆனந்தியின் ஆதங்கத்தை எப்படி சமாளிப்பது என்ற தவிப்பும் சேர்ந்து வந்துள்ளது.

போனால் வந்த சந்தேகம்

முன்னதாக ஆனந்தியை மகேஷிடம் அன்பு அழைத்துச் சென்ற சமயத்தில், ஆனந்தியின் அம்மா அவருக்கு போன் செய்துள்ளார். ஆனால், அன்புவும் ஆனந்தியும் வீட்டிலேயே போனை வைத்துவிட்டு சென்றதால், அது அடித்துக் கொண்டே இருந்தது. இதனால், போன் சத்தம் கேட்டு அன்புவின் அறைக்கு வந்த அவரது அம்மா திகைத்து போனார். இது அன்புவின் போன் இல்லை என்பதை உறுதிப்படுத்திய அவர், இது யாருடைய போன், எதற்காக அன்பு ரூமில் இருக்கிறது என சந்தேகதத்தில் இருந்தார். அதுவே, இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம். இதுகுறித்த வீடியோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி