அன்புவாக மாறும் ஆனந்தி.. சத்தியம் செய்த பயத்தில் அன்பு.. சிக்குவாரா ஆனந்தி? பரபரப்பான கட்டத்தில் சிங்கப்பெண்ணே..
Oct 21, 2024, 07:25 AM IST
அன்புவின் அம்மாவிற்கு தெரியாமல் வீட்டை விட்டு கிளம்ப, ஆனந்தியும் அன்புவும் சேர்ந்து தீட்டும் திட்டம் என்ன என்பதை இன்றைய எபிசோடில் காணலாம்.
சிங்கப் பெண்ணே சீரியலில், காயத்ரியை சிலர் கடத்தி வைத்திருந்ததை அறிந்த ஆனந்தி அவளைக் காப்பாற்ற முயன்று, ஹாஸ்டலுக்கு தாமதமாக வந்தார். அப்போது, ஹாஸ்டலுக்குள் நுழைய சுவர் ஏறி குதித்து வார்டனிடம் மாட்டிக் கொண்டார். இதனால், ஆனந்தியை ஹாஸ்டல் வார்டன் வெளியே அனுப்பி விட்டார்.
ஆனந்திக்காக போராடும் மகேஷ்
இதனால் செய்வது அறியாமல் தவித்த ஆனந்தியும் மகேஷும் அன்புவின் உதவியை எதிர்பார்க்கின்றனர். ஆனந்தியை ஒரு நாள் மட்டும் அன்பு வீட்டில் தங்க வைக்குமாறு மகேஷ் கேட்டுக் கொள்கிறார். இந்த சமயத்தில் தனது அம்மாவும் தங்கையும் வெளியே சென்றிருப்பதால், ஆனந்தியை வீட்டில் தங்கவைக்க அன்பு சம்மதம் தெரிவிக்கிறார்.
பாசமாக பார்த்துக் கொள்ளும் அன்பு
பின், நடு இரவில் வீட்டிற்கு வந்த ஆனந்திக்கு அன்பு தோசை எல்லாம் சுட்டுக் கொடுத்து பாசமாக பார்த்துக் கொள்கிறார், பின் அவர் இரவு தூங்குவதற்கு தன்னுடைய அறையையும் தருகிறார். அடுத்த நாள் காலை விடிந்து பார்த்தால், ஆனந்தி வீட்டை தூய்மையாக மாற்றி, சாம்பிராணி எல்லாம் போட்டு அன்புவை அசத்தியுள்ளார், இந்த நிலையில் தான் வெளியூர் சென்றிருந்த அன்புவின் அம்மாவும் தங்கையும் வீட்டிற்கு வந்து அன்புவிற்கும் ஆனந்திக்கும் ஷாக் கொடுத்தனர்.
அன்பை நினைத்து ஆச்சரியப்படும் ஆனந்தி
இனி என்ன நடக்கப் போகிறது என்பதை ப்ரோமோவாக சன் டிவி வெளியிட்டுள்ளது. அதில், ஆனந்தி வீட்டில் இருப்பதை மறைக்க அன்பு முயற்சி செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், வீட்டில் அவர் தங்கையுடன் வம்பு இழுத்து சண்டை போட்டு விளையாடுவதை பார்த்து ஆனந்தி பூரிக்கிறார். அன்புவிற்குள் இப்படி ஒரு முகம் இருப்பதைப் பார்த்து ஆச்சரியமும் படுகிறார்.
தடுமாறும் அன்பு
தான் விரும்பும் காதலி தன்னுடைய வீட்டில், அதுவும் தன்னுடயை அறையில் இருப்பதைக் கண்டு சந்தோஷமடையும் அன்புவிற்கு ஆனந்தியை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், விட்டு விலகவும் முடியாமல் தவித்து வரகிறார். ஆனந்தி- மகேஷ் காதலுக்கு காவலாக இருக்க அன்பு செய்து கொடுத்த சத்தியத்தை ஆனந்தி தன் அருகில் இருக்கும் சமயத்தில் மீறி விடுவேனோ என்ற பயம் அன்பு மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆனால், மகேஷோ, அன்பு எங்களுடன் இருக்கும் வரை என்னையும் ஆனந்தியையும் பிரிக்க யாராலும் முடியாது என கர்வமாக கூறி வருகிறார். நிலைமை இப்படி இருக்க ஆனந்தி மனதிலும் அன்புவிற்கான மரியாதை கூடிக் கொண்டே செல்கிறது. எப்படி ஒரு மனிதரால் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்மிடம் பழக முடிகிறது என்ற கேள்வி ஆனந்தி மனதிற்கு எழுந்து அன்புவை பாரட்டுகிறது.
அன்புவாக மாறும் ஆனந்தி
இந்நிலையில், ஆனந்தியை தனது அம்மா மற்றும் தங்கையின் கண்களில் சிக்காமல் எப்படி வெளியே அனுப்பலாம் என அன்பு யோசித்து வருகிறார். அந்த சமயத்தில் வேறு வழி இல்லாமல் ஆனந்தியை அன்புவின் உடைகளை அணிந்து கொள்ள சொல்கிறார். அதற்கு சம்மதித்த ஆனந்தி, தான் யார் என்பதா மறைக்க தலையில் தொப்பியுடன் வெளியே வருகிறார்.
சிக்குவாரா ஆனந்தி?
இதனை அறையின் உள்ளே இருந்தவாறு அன்பு பாரத்துக் கொண்டுள்ளார். இந்த சமயத்தில் அன்புவின் அம்மா ஆனந்தி தான் அன்பு என நினைத்து அவரை கூப்பிடுகிறார்.
இனி சிங்கப்பெண்ணே சீரியலில் என்ன நடக்கும்? ஆனந்தியும் அன்புவும் அவரது அம்மாவிடம் சிக்குவார்களா? என்பதை இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.
டாபிக்ஸ்