தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சைமா விருதுக்கு நான்கு தமிழ் படங்கள் பரிந்துரை

சைமா விருதுக்கு நான்கு தமிழ் படங்கள் பரிந்துரை

Aarthi V HT Tamil

Aug 17, 2022, 02:55 PM IST

2021 ஆம் ஆண்டில் வெளியான 4 தமிழ் படங்கள் சைமாவில் சிறந்த படங்கள் என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் வெளியான 4 தமிழ் படங்கள் சைமாவில் சிறந்த படங்கள் என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் வெளியான 4 தமிழ் படங்கள் சைமாவில் சிறந்த படங்கள் என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளுக்கான (SIIMA) பரிந்துரைகள்வருடம் தோறும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டுக்காக சைமா விருது புதன்கிழமை அறிவிக்கப்பட்டன.

ட்ரெண்டிங் செய்திகள்

Yugendran on Vijay: அய்யய்யோ.. என்ன இப்படி சொல்லிட்டார்; விஜய்க்கு தெரிஞ்சா என்ன ஆகும்? - கோட் சீக்ரெட்டை உடைத்த யூகே!

19 வயசுல சினிமாவில் வந்து உச்சத்தில் பறக்கும் நடிகைகள்.. இவங்களோட சம்பளம் எல்லாம் இப்ப வேற லெவல்!

Karthigai Deebam: ‘கல்யாணம் ஆன புதுசுல நானும்..’ முருங்கை ஐட்டமாக வாங்கிய தீபா; கா., தீபம் எபிசோடில் கலகல!

Malavika Manoj Rioraj: ‘உருகி உருகி போனதடி’ - மீண்டும் இணையும் ‘ஜோ' ஜோடி! - டைரக்டர் யாரு தெரியுமா?

இந்த விருது விழாவில் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டின் சைமா விருதுகள் ஹைதராபாத்தில் நடைப்பெற்றது. அத்துடன் துபாய், சிங்கப்பூர், மலேசியா போன்ற சர்வதேச நாடுகளில் நடைப்பெறுவது வழக்கம்.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான சைமா விருது அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ் மொழியை சேர்ந்த 4 படங்கள், சிறந்த படங்கள் 2021 என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மாரி செல்வராஜின் கர்ணன், நெல்சனின் டாக்டர், லோகேஷ் கனகராஜின் மாஸ்டர், ஏ. எல். விஜயின் தலைவி ஆகிய 4 படங்கள் தேர்வாகியுள்ளது.

இந்த 4 படங்களில் எந்த படங்கள் வெற்றிப் பெறுகிறது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

2022 ஆம் ஆண்டு சைமா விருது பெங்களுருவில் அடுத்த மாதம் 10 மற்றும் 11 ஆம் தேதி நடைபெறுகிறது.

மேலும் கர்ணன் படம் 10 பிரிவுகளிலும், டாக்டர் 9 பிரிவுகளிலும், மாஸ்டர் 7 பிரிவுகளிலும், தலைவி 7 பிரிவுகளின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.