தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  விஜய் மாநாடு மழையால் ரத்தாகுமா.. எதில் அக்கறை செலுத்தவேண்டும் விஜய்.. மூத்த பத்திரிகையாளர் பேட்டி

விஜய் மாநாடு மழையால் ரத்தாகுமா.. எதில் அக்கறை செலுத்தவேண்டும் விஜய்.. மூத்த பத்திரிகையாளர் பேட்டி

Marimuthu M HT Tamil

Oct 12, 2024, 02:59 PM IST

google News
விஜய் மாநாடு மழையால் ரத்தாகுமா என்பது குறித்தும் எதில் அக்கறை செலுத்தவேண்டும் விஜய் என்பது குறித்தும் மூத்த பத்திரிகையாளர் பேட்டியளித்துள்ளார்.
விஜய் மாநாடு மழையால் ரத்தாகுமா என்பது குறித்தும் எதில் அக்கறை செலுத்தவேண்டும் விஜய் என்பது குறித்தும் மூத்த பத்திரிகையாளர் பேட்டியளித்துள்ளார்.

விஜய் மாநாடு மழையால் ரத்தாகுமா என்பது குறித்தும் எதில் அக்கறை செலுத்தவேண்டும் விஜய் என்பது குறித்தும் மூத்த பத்திரிகையாளர் பேட்டியளித்துள்ளார்.

விஜய் மாநாடு மழையால் ரத்தாகுமா என்பது குறித்தும், விஜய் எதில் அக்கறை செலுத்தவேண்டும் என்பது குறித்தும் மூத்த பத்திரிகையாளர் பேசியுள்ளார். 

விஜய் கட்சியின் மாநாடு நடக்குமா என்பது குறித்து கிங் 24*7 யூட்யூப் சேனலுக்கு, எழுத்தாளர் மற்றும் மூத்த பத்திரிகையாளர் ராஜகம்பீரம் அளித்த பேட்டியைக் காணலாம். அதில், ‘ வருகிறது அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடக்கப்போகிறது. ஆனால், முதலில் மாநாட்டினை நினைத்த தேதியில் நடத்த முடியாமல், கொடுத்த நிபந்தனைகளை நிறைவேற்றமுடியாமல் தவித்தார், விஜய். பிறகு அறிவித்த மாற்றுத்தேதியை ஆவது விஜய் சரியாக அறிவித்திருக்கலாம். மாற்றுத்தேதி என்பது தீபாவளிக்கு சில நாட்கள் முன்பு வருகிறது. இந்த மாதத்தின் கடைசி இரண்டு வாரங்கள் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வுமையம் சொல்லியிருக்கிறது. தீபாவளியை ஒட்டி ஒரு வாரம் சிறிய அளவிலாவது மழை பெய்யும் என்பது அனைவருக்கும் தெரியும்.

மழைக்காலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கானவர்களை வரவழைக்கப் போகிறார்கள். தென்மாவட்டங்கள் பக்கம் திரும்பிப் பார்த்தால், அக்டோபர் 30ஆம் தேதி தேவர் குரு பூஜை வருகிறது. அக்டோபர் 27ஆம் தேதி மருது பாண்டியர் குரு பூஜை வருகிறது. தென்மாவட்டங்கள் எல்லாமே அல்லோல கல்லோலப்படும்.

குரு பூஜைக்குப் படையெடுக்கும் தேதியில் விஜய்யின் முதல் மாநாடு:

அங்கு பசும்பொன்னுக்கு போகணும் என்பதற்காக சாரை சாரையாய் போய்க்கொண்டு இருப்பார்கள். மிகக்கடுமையான போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படும். தேவையற்ற பிரச்னை வரும். நிறையபேர் கடையை மூடிவிடுவார்கள். இன்னொன்று சாதிரீதியிலான பிரச்னைகள் வர வாய்ப்பு இருக்கும். கிட்டத்தட்ட தென்மாவட்டம் திணறுகிற நேரத்திலும், சின்ன வேலை செய்றவங்க தீபாவளிக்குத் தேவையான பொருட்களை வாங்க கடன் வாங்குவதில் இருப்பாங்க. சின்ன நிறுவனங்கள் தொழிலாளிகளுக்குப் போனஸ் போட அலைந்து கொண்டு இருப்பாங்க. எல்லாபேருக்குமே இந்த மாதம் பணச்சுமை அதிகமாக இருக்கும். எல்லா பேருக்குமே துணி எடுக்கிறதா, பட்டாசு வாங்குறதா வேறு சில வரவு, செலவுகளுக்காகப் போராடிக்கொண்டு இருப்பாங்க.

தல தீபாவளி கொண்டாடுறவங்க, அதுக்கு ஏற்ற பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டுவாங்க. இப்படி எல்லாம் அல்லோலப்படும்போது எந்த அறிவாளி இந்த தேதியை ஃபிக்ஸ் செய்து கொடுத்தான்னு தெரியல.

விஜய் நடிகராக பிரபலமாகி 30 வருடங்கள் ஆகிவிட்டன. அவர் விஜயகாந்த் மாதிரி ஷாட் முடிஞ்சதும் எல்லோருடனும் பேசி சிரிக்கும் ஆள் கிடையாது. ஷாட் முடிஞ்சதும் கேரவன் போய், ஒதுங்கி தனித்தீவாக வாழக்கூடியவர். அப்படிப்பட்ட விஜய்க்கு யதார்த்தம் தெரிய வாய்ப்பு இல்லை.

கனமழையில் சிக்கப்போகும் தமிழக வெற்றிக் கழகத்தினர்:

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டிற்கு வருபவர்கள் கனமழையில் மாட்டப்போறாங்களா, வாகன நெரிசலில் மாட்டப்போறாங்களா, எதில் மாட்டப்போகிறார்களா என்பது குறித்து தெரியவில்லை. விஜய்யை நம்பி பெரும் மக்கள் கூட்டம் இருக்கிறது. நமக்கு அவரை நம்பி வந்துட்டுப்போகிறங்களுக்கு எந்தப் பிரச்னையும் வரக்கூடாது என்பதுதான் நம் நோக்கம்.

மிகத்தவறான ஒரு தேதியில் மாநாட்டை ஏற்பாடு செய்யிறாங்க. அன்றைய தேதியில் மழைபெய்து சிக்கலான சூழல் வந்தது என்றால், எவ்வளவு பொருளாதார இழப்பு ஏற்படும். மாநாடு நடப்பது நல்லது. இந்த தவறான தேதியில் நடப்பதுதான் ஆபத்தானது. விஜய் பெரியார் திடலுக்கும் வருகிறார். பிரம்மமுகூர்த்தத்தில் பந்தக்காலும் நடுகிறார். நாம் குற்றம் காணவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு அந்த தேதியில் லீவு கிடைக்கவில்லையென்றால், அந்த வேலையைவிட்டு வெளியில் வந்துவிடு என்கிறார்,புஸ்ஸி ஆனந்த். அப்படிப்பட்டவர், தமிழக வெற்றிக் கழகத்தின் பாதுகாப்புக்கும் உறுதிசொல்லவேண்டும். எப்படி புஸ்ஸி ஆனந்த் இப்படியெல்லாம் பேசலாம். யார் விஜய்க்கு வழிநடத்துறாங்க அப்படின்னு மர்மமாகவே இருக்கு. சரியான ஆட்களை விஜய் பக்கத்தில் வைச்சுக்கணும். ஒவ்வொரு விஷயத்துக்கும் விஜய் ரியாக்ட் செய்யணும்’’ என முடித்தார், பத்திரிகையாளர் ராஜகம்பீரம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை