ரஜினிகாந்திடம் வாழ்த்து பெற்ற அன்புமணி மகள்! இணையத்தில் வைரலாகும் போட்டோ!
Dec 10, 2024, 02:58 PM IST
பாமக கட்சியின் தலைவரான அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா திரைத்துறையில் தயாரிப்பாளராக அறிமுகமாகி உள்ளார். இவரது முதல் படமான அலங்கு படத்தின் ட்ரைலரை பார்த்த ரஜினிகாந்த் படக்குழுவினரை சந்தித்து பாராட்டியுள்ளார்.
பாமக கட்சியின் தலைவரான அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா திரைத்துறையில் தயாரிப்பாளராக அறிமுகமாகி உள்ளார். இவரது முதல் படமான அலங்கு படத்தின் ட்ரைலரை பார்த்த ரஜினிகாந்த் படக்குழுவினரை சந்தித்து பாராட்டியுள்ளார். இது குறித்தான போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் ஒரு பெரிய அடையாளமாக திகழும் ரஜினிகாந்திடம் வாழ்த்து வாங்கியதை தொடர்ந்து இப்படம் இந்த மாதம் 27 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டின் முக்கியமான அரசியல் கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் இருந்து வருகிறார். இந்த கட்சியை நிறுவியது இவரின் தந்தை ராமதாஸ் ஆவார். இவர்கள் இருவரும் மருத்துவர் ஆவர். ஆனால் இவர்களது குடும்பத்தில் இருந்து வந்த சங்கமித்ரா புதுவிதமாக திரைத்துறையில் அறிமுகமாகி இருப்பது எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இயக்குனர் எஸ்.பி.சக்திவேல்
தமிழில் உறுமீன், பயணிகள் கவனிக்கவும் போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் எஸ் பி சக்திவேல். இவரது முந்தைய படங்கள் அனைத்தும், மிகவும் வித்தியாசமான கதைக்களத்திலும் வரலாற்று பின்னணி கொண்ட கற்பனை கதை அம்சத்துடனும் இருப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது இவர் இயக்கியுள்ள படம் அலங்கு, இப்படம் முழுக்க முழுக்க நாய் மற்றும் மனிதனுக்கு இடையே உள்ள தொடர்பை குறிப்பிடுவதாக அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் குணாநிதி நடித்துள்ளார். மேலும் இவருடன் செம்பல் வினோத், காளி வெங்கட், சரத் அப்பணி மற்றும் ஸ்ரீலேகா உட்பட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் குறிப்பாக முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு நாய் ஒன்று நடித்திருக்கிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அஜீஸ் இசையமைத்துள்ளார். நாய்க்கும் மனிதனுக்கும் உள்ள அன்பு பகையாக மாறி அது எந்த திசையை நோக்கி நகர்கிறது என்பது குறித்தான திரைக்கதை படத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா தயாரித்துள்ளார் இப்படத்தின் டிரைலரை பார்த்த ரஜினிகாந்த் அவரை பாராட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மகிழ்ச்சியில் படக்குழுவினர்
படக்குழுவினர் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தினை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பின்போது, அலங்கு படத்தின் ட்ரைலரை ரஜினிகாந்த் பார்த்துள்ளார். அலங்கு படத்தின் ட்ரைலரைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினரை படம் சிறப்பாக வந்துள்ளதாக பாராட்டியுள்ளார். மேலும் இப்படம் வரும் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதால், படக்குழுவினருக்கு படம் வெற்றி பெற தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
படக்குழுவினர் ரஜினிகாந்த் பிறந்தநாள் கொண்டாட உள்ள நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தத்தாக கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பின்போது சங்கமித்ரா சௌமியா அன்புமணி, படத்தின் நடிகர்கள் குணநிதி, படத்தின் இயக்குநர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். படத்தின் ட்ரைலர் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் ஏற்கனவே படக்குழு தரப்பில் வெளியிடப்பட்ட பாடல் இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டாரே படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்தான போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு உள்ளது.
டாபிக்ஸ்