வன்முறை எங்க மொழி இல்ல..அசுரன் வைப்..விடுதலை 2 ட்ரெய்லர்! "தத்துவம் இல்லாத தலைவருங்க ரசிகர்கள தான் உருவாக்குவாங்க"
அசுரன் வைப், வன்முறை எங்க மொழி இல்ல, அதையும் எங்களுக்கு பேச தெரியும் போன்ற அனல் பறக்கும் வசனங்கள் இடம்பிடித்திருக்கும் விடுதலை 2 ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. படத்தின் பாடல்களும் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை பெற்ற படம் விடுதலை. இயக்குநர் வெற்றிமாறன் - நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியாகி இருந்த இந்த படம் பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து உருவாகியிருந்தது.
இந்த படம் இரண்டாம் பாகத்துக்கான முன்னோட்டத்துடன் முடிவடைந்த நிலையில், படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பும் கடந்த ஆண்டே தொடங்கியது.
விடுதலை 2 ட்ரெய்லர்
இதைத்தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் விடுதலை 2 படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் விஜய் சேதுபதி தோன்றிய பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்தின் முன் கதையை சொல்லும் விதமாக விடுதலை 2 உருவாகியுள்ளது. அத்துடன் போலீசால் பெருமாள் வாத்தியார் கைது செய்யப்படுவதுபோல் முதல் பாகம் முடிவடைந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் அவர் போலீசிடமிருந்து தப்பித்தாரா இல்லையா என்பதை காட்டும் விதமாகமாக படம் அமைகிறது.
