தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஒரு காலத்தில் எனக்கு அக்கா.. இப்போது அண்ணி.. மேடையில் சமந்தாவை வைத்து கலாய்த்த ராணா

ஒரு காலத்தில் எனக்கு அக்கா.. இப்போது அண்ணி.. மேடையில் சமந்தாவை வைத்து கலாய்த்த ராணா

Marimuthu M HT Tamil

Nov 06, 2024, 02:44 PM IST

google News
ஒரு காலத்தில் எனக்கு அக்கா.. இப்போது அண்ணி.. மேடையில் சமந்தாவை வைத்து கலாய்த்த ராணாவின் செயல் வைரல் ஆகியுள்ளது.
ஒரு காலத்தில் எனக்கு அக்கா.. இப்போது அண்ணி.. மேடையில் சமந்தாவை வைத்து கலாய்த்த ராணாவின் செயல் வைரல் ஆகியுள்ளது.

ஒரு காலத்தில் எனக்கு அக்கா.. இப்போது அண்ணி.. மேடையில் சமந்தாவை வைத்து கலாய்த்த ராணாவின் செயல் வைரல் ஆகியுள்ளது.

ஒருகாலத்தில் எனது அக்காவாக இருந்து தற்போது அண்ணி ஆக மாறியிருக்கீங்க என நடிகை சமந்தாவை ராணா கலாய்த்த வீடியோ வைரல் ஆகியிருக்கிறது. 

நடிகை சமந்தா - ராணா இடையே நடந்த வேடிக்கையான உரையாடலின் வீடியோ கிளிப் வைரலாகி வருகிறது. ஐஐஎஃப்ஏ உத்சவ் விருதுகள் வழங்கும் விழாவின் ஒரு பகுதியாக நடிகை சமந்தா ஆண்டின் சிறந்த பெண் என்ற விருதை வென்றார். விழாவில் அவர் உணர்ச்சி வசப்பட்டு உரையாற்ற முயன்றபோது, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ராணா டகுபதி மற்றும் தேஜா சஜ்ஜா ஆகியோர் சில ஜோக்குகளை கூறி அவரை சிரிக்க வைக்க முயன்றனர். அது ஒர்க் அவுட்டும் ஆனது. இதனால் அரங்கமே சிரிப்பலையில் மிதந்தது. 

ஐஐஎஃப்ஏ விருது வாங்கிய சமந்தாவிடம் அப்படி போகக்கூடாது சமந்தா என வம்பிழுத்தார், நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ராணா டகுபதி.

உடனே மைக் இருக்கும் இடத்திற்குச் சென்ற சமந்தா, ‘’நான் ஒரு எமோஷனலான உரையை நிகழ்த்த இருக்கிறேன். நீங்கள் என்ன வைச்சு காமெடி பண்ணக்கூடாது’’ என்றார்.

அக்காவாக இருந்து அண்ணி: சமந்தாவை கலாய்த்த ராணா

அதற்குப் பதிலளித்த ராணா, ‘’இல்லை. இல்லை. எமோஷனலாகவே பேசுவதாகவே நினைக்கிறேன். சமந்தா எப்படி டோலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரைக்குப் போயிருக்கீங்க. ஒருகாலத்தில் எனது அக்காவாக இருந்து அண்ணி ஆக மாறியிருக்கீங்க’’ எனக் கேட்கிறார்.

அதற்குப் பதிலளித்த சமந்தா, ‘செல்ஃப் ட்ரோலிங்கா’ என்கிறார். உடனே ராணா, ‘தெரிஞ்சுமா கேட்கிறீங்க’ எனப் பதிலளிக்கிறார். 

மேலும், ’நீங்களே செல்ஃப் ட்ரோல் செய்யிறீங்களே’ என சமந்தா கேட்கிறார். ’செல்ஃப் ட்ரோல் செய்றதுக்குக் காரணம் என்னை யாரும் வைச்சு செல்ஃப் ட்ரோல் செய்யல. அதனால் செய்தேன்’ எனப் பதிலளிக்கிறார், ராணா.

உடனே சிரித்துக்கொண்டே சமந்தா, ’எனக்குக்கூட அப்படி தான்’ எனப்பதிலளிக்கிறார்.

’நான் செய்யிற படம் நரசிம்ம நாயுடு மாதிரி இருக்கணும்; ராணா நாயுடு மாதிரி இருக்கக்கூடாது இல்லையா’ என்கிறார், சமந்தா.

உடனே, ‘அது சினிமா இல்லை அக்கா ஒரு ஷோ, அதில் எதை வேண்டுமென்றாலும் செய்யலாம் என உங்கள் குடும்பத்தைப் பார்த்துத்தான் கற்றுக்கொண்டேன்’ எனப் பதிலடி கொடுக்கிறார், ராணா.

அப்போது மற்றொரு தொகுப்பாளர் தேஜா இடைமறிக்கிறார், உடனே ’உனக்குப் பேச தெரியுமா’ என நக்கலடிக்கிறார், சமந்தா. அப்போது அவர் ’எனக்கு ஒரு வசனம் கொடுத்திருக்காங்க’ எனச் சொல்கிறார். இதனால் அரங்கமே சிரிக்கிறது.

டோலிவுட்டில் இருக்கும்போது சமந்தா ரூத் பிரபுன்னு சொன்னாங்க. இப்போது சமந்தா ரூட் பிரபுன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க’ எனச் சொல்லி கலாய்க்கிறார், தேஜா. உடனே இப்போது ரூத் லெஸ் பிரபு(இரக்கமற்ற) ஆகிவிட்டார் என்கிறார், ராணா. மீண்டும் சிரிப்பலை பரவுகிறது. 

காமெடி சாம் என்ன ஆனது என ராணா சமந்தாவிடம் கேட்க, ’இல்லை காமெடி சாம் இல்லை, காண்ட்ரவெர்ஷியல் சாம் தான்’எனச் சொல்லி சிரிக்கிறார்.

உடனே தங்களது தொகுப்பாளர் பணி எப்படி இருக்கிறது என தேஜா கேட்கிறார். கொஞ்சம் நல்லவிதமாக சொல்லுங்க என்கிறார், தேஜா. 

உடனே ரொம்ப ஆவரேஜாக இருக்கிறது என சிரித்துக்கொண்ட சொன்ன சமந்தாவை, சரி கிளம்பு என கிண்டலடிக்கிறார், ராணா. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமந்தா மற்றும் ராணா ஆகியோருக்கு இடையில் இருக்கும் உறவு:

 ராணாவின் அத்தை (விக்டரி வெங்கடேஷின் சகோதரி) லட்சுமி மற்றும் நாகார்ஜூனாவின் மகன் தான் நாக சைதன்யா. இதன்மூலம், நாக சைதன்யாவுக்கு ராணா மைத்துனரானார். இதனால், சமந்தா அவரது அக்கா முறையில் இருந்தார்.

இந்த ஜோடி 2017ஆம் ஆண்டில் திருமணம் செய்து 2021-ல் பிரிந்தது. அதைத் தொடர்ந்து நாக சைதன்யாவுக்கும், சோபிதா துலிபலாவுக்கும் இடையே திருமணம் நடைபெற உள்ளது. ராணாவும் சமந்தாவும் 2016ஆம் ஆண்டு வெளியான பெங்களூர் டேஸ் படத்தில் இணைந்து ஒன்றாக நடித்துள்ளனர். அதுதான் இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் ஆகும்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி