லக்கி பாஸ்கர் கலெக்ஷனால் ஏறும் மார்க்கெட்.. டோலிவுட்டிலும் வெற்றிக் கொடி நாட்டிய துல்கர் சல்மான்!
பொருளாதார குற்றப் பின்னணி கதையைக் கொண்ட துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் திரைப்படம் மக்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல இமேஜைப் பெற்று வருவதால் படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

வாத்தி படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி பொருளாதார குற்றப் பின்னணியை மையமாக வைத்து இயக்கிய படம் லக்கி பாஸ்கர். இந்தப் படத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, ராம்கி, சச்சின் கடேக்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லக்கி பாஸ்கர் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.
பாக்ஸ் ஆபிஸ் வசூல்
அதன்படி, வெங்கி அட்லூரி இயக்கிய லக்கி பாஸ்கர் படம், முதல் நாளில் ரூ. 7.50 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் படம் வெளியாகி 3 நாட்கள் நிறைவடைந்த நிலையில், தெலுங்கில் 14.2 கோடி ரூபாயும், தமிழில் 1.82 கோடி ரூபாயும், இந்திய அளவில் 21.59 கோடி ரூபாயும், உலகளவில் 22.25 கோடி ரூபாய் வசூலும் பெற்றுள்ளதாக sacnilk.com இணையதளம் தெரிவித்துள்ளது.
அப்பாவுக்கு ஏற்ற மகன்
துல்கர் சல்மான் மலையாள ஹீரோ மெகா ஸ்டார் மம்முட்டியின் மகனாக சினிமாவில் அடியெடுத்து வைத்தாலும், தனது அழகான தோற்றத்தாலும், அப்பாவுக்கு ஏற்ற மகனாக நடித்தும் தனக்கென தனி ரசிகர்களை சம்பாதித்து வருகிறார். அதன் பிறகு தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவிலும் மெல்ல மெல்ல கால் பதித்திருக்கிறார். இப்போது தெலுங்கு இளைஞர்கள் மத்தியில் டோலிவுட் ஹீரோவுக்கு இருக்கும் அதே க்ரேஸ் துல்கருக்கும் இருக்கிறது.