தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thunivu: டிச.9ல் ‘சில்லா சில்லா’ பாடல் ரிலீஸ்: ஒரு வழியாக அறிவித்த போனிகபூர்!

Thunivu: டிச.9ல் ‘சில்லா சில்லா’ பாடல் ரிலீஸ்: ஒரு வழியாக அறிவித்த போனிகபூர்!

Dec 05, 2022, 07:20 PM IST

Thunivu ChillaChilla Song: பொங்கல் ரேஸில், நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்துடன் துணிவு நேருக்கு நேர் மோதவிருக்கும் நிலையில், வாரிசு படத்திலிருந்து இரு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்குனர் எச்.வினோத்-அஜித் கூட்டணியில் பொங்கல் ரிலீஸாக வரவிருக்கிறது துணிவு திரைப்படம். மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவரான போனி கபூர் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் துணிவு படம் குறித்த போஸ்டர்கள் அடுத்தடுத்து வந்த நிலையில், அந்த படத்தில் இடம் பெற்றிருந்ததாக கூறப்பட்ட சில்லா சில்லா என்கிற பாடல், எப்போது வரும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

ஆனால், தயாரிப்பாளர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வராமல் இருந்தது. இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் பாடலாசிரியர் ஆகியோரிடம் எல்லாம் ‘சில்லா சில்லா’ பாடல் குறித்த அப்டேட்டுகளை ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் தான், டிசம்பர் 9 ம் தேதி சில்லா சில்லா பாடல் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் முறைப்படி அறிவித்துள்ளார். தயாரிப்பாளரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து , இசையமைப்பாளர் ஜிப்ரான் உள்ளிட்டோர் அந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர்.

பொங்கல் ரேஸில், நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்துடன் துணிவு நேருக்கு நேர் மோதவிருக்கும் நிலையில், வாரிசு படத்திலிருந்து இரு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தான், துணிவு படத்தின் முதல் சிங்கள் எப்போது வரும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, ஒரு வழியாக பாடல் அப்டேட்டை தந்துள்ளார் போனிகபூர். இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.