தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பிக்பாஸிற்குள் போட்டியாளராக வந்த கழுதை.. உள்ளூர் பிரச்சனை உலக பிரச்சனை ஆனது இப்படித் தான்..

பிக்பாஸிற்குள் போட்டியாளராக வந்த கழுதை.. உள்ளூர் பிரச்சனை உலக பிரச்சனை ஆனது இப்படித் தான்..

Oct 10, 2024, 12:19 PM IST

google News
ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 18ல் கழுதை ஒன்றை பராமரிக்க வேண்டும் என போட்டியாளர்களுக்கு டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதை பீட்டா கண்டித்துள்ளது.
ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 18ல் கழுதை ஒன்றை பராமரிக்க வேண்டும் என போட்டியாளர்களுக்கு டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதை பீட்டா கண்டித்துள்ளது.

ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 18ல் கழுதை ஒன்றை பராமரிக்க வேண்டும் என போட்டியாளர்களுக்கு டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதை பீட்டா கண்டித்துள்ளது.

சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கூடுதல் சுவாரசியத்திற்காக கழுதை ஒன்று, கொண்டு பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளது. இது மக்களிடையே பேசுபொருளான நிலையில், அதுகுறித்து, பீட்டா, சல்மான் கானுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

பீட்டா கடிதம்

அதில், பிக்பாஸ் வீட்டிற்குள் விலங்குகளை அடைத்து வைத்திருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை அளிக்கிறது. அதுமட்டுமின்றி இது வருத்தமளிக்கும் செயல். ஒரு விலங்கை தங்களின் நிகழ்ச்சியின் விளம்பரத்திற்காகவும் அதை காமெடி பொருளாகவும் பயன்படுத்திக் கொள்வது சரியானது அல்ல. இனி பொழுது போக்கிற்காக விலங்குகளை பயன்படுத்துவதை பிக்பாஸ் நிகழ்ச்சி நிறுத்த வேண்டும் என பீட்டா அமைப்பு நடிகர் சல்மான் கானிடம் அறிவுறுத்தியுள்ளது.

ஹிந்தி பிக்பாஸ் சென்ற தமிழ் பிரபலம்

கடந்த ஞாயிற்றுக் கிழமை சல்மான்கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 18வது சீசன் கலர்ஸ் டிவியில் தொடங்கியது. இதில், தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை ஸ்ருதிகா போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இவர், நடிகர் சூர்யாவுடன் ஸ்ரீ படம், ஆல்பம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். அதுமட்டுமின்றி, விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளரும் கூட.

வீட்டிற்கு வந்த கழுதை

பிக்பாஸ் வீட்டில் பரபரப்பான நிகழ்வுகள், சண்டைகள், ஏராளமான பேச்சுகள் என மக்களை ஈர்த்து வந்த நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் களமிறக்கப்பட்ட 19வது போட்டியாளரால் பிக்பாஸ் பிரச்சனை ஒன்றை சந்தித்துள்ளது. அதாவது கதராஜ் எனப் பெயரிடப்பட்ட கழுதை ஒன்றை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தக் கழுதையை அங்குள்ள பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் பராமரிக்க வேண்டும் எனவும் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. பிக்பாஸின் இந்த முடிவுக்கு ஒரு சிலர் ஆதரவாகவும், ஒரு சிலர் எதிராகவும் கருத்து சொல்லி வந்த நிலையில், இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது.

வைரலாகும் சோசியல் மீடியா பதிவு

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் போட்டியாளர்கள் அவர்களது சம்மதத்துடன் வருகின்றனர் அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால், இந்த கழுதையை எந்த சம்மதத்தின் அடிப்படையில் இங்கு கொண்டு , சமூக விலங்கான கழுதையை பிக் பாஸ் வீட்டில் அடைத்து வைப்பது நியாயமில்லை என பலரும் கேள்வி எழுப்பினர்.

பீட்டா கடிதம்

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பீட்டாவின் வழக்கறிஞரான சௌர்யா அகர்வால், பிக்பாஸ் சீசன் 18ன் நிகழ்ச்சி தொகுப்பாளர் சல்மான் கானுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில், பிக்பாஸ் வீட்டில் கழுதை வைத்திருப்பதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அவர்களின் கவலைகள் நியாயமானவை தான். அவற்றை நம்மால் புறக்கணிக்க முடியாது. உங்கள் நிகழ்ச்சியின் சுவாரசியத்திற்காக இந்த விலங்கை நிகழ்ச்சியில் சேர்த்திருப்பது வருத்தமளிக்கிறது.

சல்மான் கான் ஒரு தொகுப்பாளராகவும் பாலிவுட் நட்சத்திரமாகவும் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, 'கழுதையை பீட்டா அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். நிகழ்ச்சியிலிருந்து மீட்கப்பட்ட அந்த கழுதை மற்ற கழுதைகளுடன் ஒரு சரணாலயத்தில் மறுவாழ்வு பெறு எனவும் குறிப்பிட்டிருந்தார்.

ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது, அந்த நிகழ்ச்சியில் விலங்குகளைப் பயன்படுத்துவது ஒரு சிரிக்கும் விஷயம் அல்ல. பொழுதுபோக்கிற்காக விலங்குகளைப் பயன்படுத்துவதை பிக்பாஸ் நிர்வாகம் இத்தோடு நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதையடுத்து பீட்டாவின் இந்தக் கடிதம் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி