Shrutika: 'நீ ஆபாச படம் பார்க்கணும்..' - கணவர் பேச்சை கேட்டு வாந்தியில் முடித்த ஸ்ருதிகா
நடிகை ஸ்ருதிகா சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில் ஆபாச படம் பார்த்து இருப்பது குறித்து ஓபனாக பேசினார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஸ்ருதிகா. இவர் தமிழில் 2002 ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதற்கு பிறகு ஆல்பம், தித்திக்குதே, நளதமயந்தி உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். என்ன தான் அவர் படங்களில் நடித்தாலும் எதுவும் அந்த அளவிற்கு செல்லவில்லை. அதனால் மார்க்கெட்டில் நிலையாக நிற்க முடியவில்லை.
சனிமா தான் கை கொடுக்கவில்லை என்று நினைத்து அர்ஜுன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.
அதற்கு பிறகு ஸ்ருதிகா மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு லைம் லைட்டிற்கு வந்தார். இந்த நிகழ்ச்சி மூலம் ஏகப்பட்ட நபருக்கு இவர் விருப்பமான ஒருவாரக மாறி இருக்கிறார்.
இதனிடையே ஸ்ருதிகா சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில் ஆபாச படம் பார்த்து இருப்பது குறித்து ஓபனாக பேசினார்.
அவர் கூறுகையில், "நான் திருமணம் செய்யும் வரை ஆபாச படங்கள் பார்க்கவே இல்லை. ஆனால் திருமணம் முடிந்த பிறகு என் கணவர் அர்ஜுன் நீ ஆபாச படம் பார்க்க வேண்டும் என சொல்லி, என்னிடம் காண்பித்தார். அதை பார்த்து எனக்கு வாந்தி வந்துவிட்டது.
இதை பார்த்தால் இருக்கும் விருப்பம் எல்லாமே போய்விடும் என நான் சொல்லிவிட்டேன். ஆபாச படம் பார்த்தால் நாம் வைத்து இருக்கும் விருப்பம் எல்லாம் போய்விடும். நல்ல வேளை நான் அதை பார்க்கவில்லை. ஒரு முறையுடன் நான் பார்த்துவிட்டேன். கழுத்தில் முத்தம் கொடுத்தாலே குழந்தை பிறந்துவிடும் என நினைத்தேன்” என்றார்.
நன்றி: கலட்டா
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்