பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப் போவது யார்? இவர் தான் போவார் என போட்டியாளர்கள் சொல்வது ஏன்?
Bigg Boss Tamil 8 : விஜய் டிவி தற்போது 4ஆம் நாளின் முதல் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. அதில் ரவீந்தர் அறிக்கையை வாசிக்கிறார். அதில் பிக் பாஸ் சீசன் 8-ல் மக்கள் இந்த வீட்டை விட்டு வெளியேற்றப் போவது யார் என வாசிக்கிறார்.

விஜய் டிவியின் பிரதான நிகழ்ச்சியான பிக்பாஸ் 8 மூன்று தினங்களுக்கு முன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த முறை “ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு” என நடிகர் விஜய் சேதுபதி தொகுத்த வழங்குகிறார். மூன்று தினங்களுக்கு முன் இந்த சீசன் கோலாகலமாக தொடங்கியது. இதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் 24 மணி நேரத்தில் சாச்சனா முதல் போட்டியாளராக எலிமெண்ட் செய்யப்பட்டார்.
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு 3 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், அதிகளவு சண்டை நடந்துள்ளது. பெண்கள் அவர்கள் அணிக்குள்ளும், ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் சண்டையிட்ட நிலையில், இன்று மிகவும் அமைதியாகவும் ஒற்றுமையுடனும் இருந்த ஆண்கள் அணி 2ஆக பிளவுபட்டுள்ளது.
4ஆம் நாளின் முதல் ப்ரோமோ
விஜய் டிவி தற்போது 4ஆம் நாளின் முதல் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. அதில், இந்த பிரமோ-வில் முதலில் ரவீந்தர் அறிக்கையை வாசிக்கிறார். அதில் பிக் பாஸ் சீசன் 8-ல் மக்கள் இந்த வீட்டை விட்டு வெளியேற்றப் போவது யார் என வாசிக்கிறார். பின்னர் இதற்கு விஷால் பெண்கள் அணியில் இருந்து ஒருத்தர் போவார்கள் என்று தான் நான் நினைக்கிறேன் என கூறுகிறார்.