17 படங்களில் கிருஷ்ணர் வேடம்..கடவுளாக பாவிக்கப்பட்டவர்! ராமனாகவும், ராவணனாகவும் நடித்த ஒரே நடிகர் பற்றி தெரியுமா?
Oct 12, 2024, 09:54 PM IST
கிருஷ்ணர் வேடத்தில் 17 படங்களில் என்.டி.ராமாராவ் நடித்துள்ளார். இதுவொரு சாதனையாகவே அமைந்துள்ளது. அத்துடன் ராமராகவும், ராவணனாகவும் நடித்த ஒரே நடிகர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.
நாடு முழுவதும் தசரா கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீமைக்கு எதிரான நன்மையின் அடையாளத்தின் வெற்றியாக இந்த நாள் அமைந்துள்ளது. இந்து மரபின்படி, இலங்கை சேர்ந்த அசுரகுல மன்னன் ராவணன் மீது ராமர் தனது வெற்றியைப் பதிவு செய்ததை குறிப்பதாக உள்ளது. ராமயணத்தின் மையக்கதையாக இருக்கும் இந்த நிகழ்வு பல் இந்திய மொழிகளில் சினிமாக்கள் வெளியாகியுள்ளன.
ராமாயண கதையில் ராமர், ராவணன் கதாபாத்திரங்களில் தோன்றும் நடிகர்கள் தங்களது தனித்துவமான நடிப்பால் பார்வையாளர்கள் மனதை கவர்ந்திருப்பார்கள். ராமர் ஹீரோவாகவும், ராவணன் வில்லனாகவும் காட்டப்படும் இந்த கதையில் ராமன் மற்றும் ராவணனாக நடித்த ஒரே நடிகர் என்ற பெருமை பெற்றவராக உள்ளார் தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரான மறைந்த என்.டி.ராமராவ்.
கடவுள் வேடங்களில் அவதரித்த என்டிஆர்
என்டிஆர் என மக்களால் கொண்டாடப்பட்ட என்.டி. ராமாராவ், திரையில் கடவுள்களின் அவதாரத்தில் தோன்றும் நடிகர்களில் முக்கியமானவராக இருந்துள்ளார். இந்த கால ஜெனரேஷன் ரசிகர்களுக்கு ஜூனியர் என்டிஆர் பற்றி தெரிந்து அளவு என்டிஆர் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
ஒரு மாஸ் மசாலா ஹீரோவாக தெலுங்கு சினிமாவில் கோலோச்சிய என்டிஆர், கிருஷ்ணர் அவதாரத்தில் மட்டும் 17 படங்களில் நடித்துள்ளார். முதல் முறையாக 1963இல் வெளியான லவ குசா படத்தில் கிருஷ்ணராக நடித்த என்டிஆர் அதன் பிறகு பல படங்களில் இந்த வேடத்தில் நடித்துள்ளார்.
கிருஷ்ணராக நடிப்பதற்கு முன்னரே 1958இல் வெளியான பூக்கைலாஸ் என்ற படத்தில் அவர் ராவணனாக நடித்திருந்தார். இந்த படம் அந்த காலகட்டத்தில் பெரிய கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால் அதன் பிறகு 1961இல் வெளியான சீதாராம கல்யாணம் படத்தில் மீண்டும் ராவணனாக தோன்றியிருப்பார். படத்தில் என்டிஆர் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. இந்த படம் தெலுங்கு சினிமாவில் இன்றளவும் கல்ட் கிளாசிக்காக இருந்து வருகிறது.
1960 முதல் 70 வரை கலாகட்டத்தில் தெலுங்கில் வெளியான புராண கதைகள் கொண்ட படங்களில் தோன்று கடவுளாகவே ரசிகர்களால் பாவிக்கப்பட்டார். அதன் பிறகு தனது ஹீரோ அந்தஸ்தை வெளிப்படுத்தும் விதமாக ராபின் ஹூட் போன்ற ஹீரோயிசம் பொருந்திய வேடங்களில் நடிக்க தொடங்கினார்.
கடவுள் வேடங்களினால் என்டிஆர் பெற்ற அந்தஸ்து
1960களில் தொடர்ச்சியாக புராண கதைகளில் தெய்வீகம் பொருந்திய வேடங்களில் நடித்து வந்தார் என்டிஆர். ராமராக, சிவனாக, கிருஷ்ணராக, விஷ்ணுவாக திரையில் தோன்றிய அவரை தெய்வமாகவே மக்கள் பாவித்தனர். ஹைதராபாத்தில் இருந்த என்டிஆரின் வீட்டை ரசிகர்கள் புனித தலமாக கருதி அங்கு செல்வதை வழக்கமாக்கி இருந்தனர்.
1970களில் ஆந்திராவில் பல்வேறு பகுதிகளில் என்டிஆர் பெயரில் கோயில்களும் கட்டப்பட்டு அதில் அவரது ராமர் மற்றும் கிருஷ்ணர் அவதாரங்கள் நிறுவப்பட்டு வழிபடப்பட்டன.
சினிமாவுக்கு பின் என்டிஆர் வாழ்க்கை பயணம்
1982இல், என்டிஆர் சினிமா படங்களில் நடிப்பதில் இருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய அடுத்த ஆண்டிலேயே ஆந்திர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் அவரது கட்சி வெற்றி பெற்று, என்டிஆர் மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார்.
1995 வரை அவர் தொடர்ச்சியாக மூன்று முறை முதலமைச்சராக பதவி வகித்தார். நடிகர், அரசியல்வாதி திகழ்ந்த அவர் 1996இல் தனது 72 வயதில் இறந்தார்.
டாபிக்ஸ்