தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கோயிலிலும் கிடைக்காத நிம்மதி.. கயலின் கழுத்தை சுற்றும் அடுத்த நெருக்கடி.. கயல் சீரியல் அப்டேட்

கோயிலிலும் கிடைக்காத நிம்மதி.. கயலின் கழுத்தை சுற்றும் அடுத்த நெருக்கடி.. கயல் சீரியல் அப்டேட்

Nov 26, 2024, 07:44 AM IST

google News
சரவண வேலுவின் அப்பா உயிரிழந்ததற்கு கயலின் அப்பா தான் காரணம் என கயலை சுற்றி புதிய பிரச்சனை உருவெடுத்துள்ளது.
சரவண வேலுவின் அப்பா உயிரிழந்ததற்கு கயலின் அப்பா தான் காரணம் என கயலை சுற்றி புதிய பிரச்சனை உருவெடுத்துள்ளது.

சரவண வேலுவின் அப்பா உயிரிழந்ததற்கு கயலின் அப்பா தான் காரணம் என கயலை சுற்றி புதிய பிரச்சனை உருவெடுத்துள்ளது.

திருமணம் முடிந்த கையோடு கயல் தன் சொந்த ஊரில் உள்ள கோயிலுக்கு சென்று பொங்கல் வைக்க குடும்பத்துடன் செல்லும் போது ஒவ்வொரு பிரச்சனையாக வருகிறது.

கயல் குடும்பத்திடம் சண்டையிடும் மக்கள்

கோயிலுக்கு சென்ற கயல் குடும்பத்தை அவரது தந்தை ஊரில் உள்ளவர்களின் பணத்தை ஏமாற்றி சென்றதாகவும், கயல் குடும்பம் உடனடியாக ஊரைவிட்டு வெளியே போக வேண்டும் எனவும் ஊரில் உள்ளவர் சண்டைக்கு வருகின்றனர். இதனால் என்ன செய்வது என அறியாமல் கயல் குடும்பம் தவித்து வந்தது. இந்த சமயத்தில் கயல் குடும்பம் ஊருக்கு வந்ததை அறிந்த சரவண வேலு, பல வருடங்களுக்குப் பின் ஊருக்கு வந்த கயலைப் பார்க்க மிகவும் ஆர்வமாக இருந்தாார்.

சரவண வேலுவின் திட்டம்

ஆனால், கோயிலுக்கு சென்று பார்க்கும் போது தான் தெரிந்தது கயலுக்கு திருமணம் ஆனது. இதனால், ஒரு பக்கம் கோபமடைந்தாலும், முதலில் ஊர் மக்களிடம் இருந்து கயலை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், ஊரார் முன் கயல் குடும்பத்திற்காக பரிந்து பேசினார்.

கயலின் உறுதி

இதையடுத்து, கயல் இன்னும் ஒரு வருடத்தில் என் அப்பா கொடுக்க வேண்டிய பணத்தை கொடுப்பதாகவும் அத்துடன் என் அப்பா எந்த தவறும் செய்யாதவர் என்பதை நிரூபிப்பதே என் வாழ்நாள் லட்சியம் என்றும் கயல் கூறுகிறார்.

வஞ்சத்துடன் பழகும் சரவண வேலு

ஆனால், கயலுக்கு உதவுவது போல் வந்த சரவண வேலு, கயலை எப்படியாவது எழிலிடம் இருந்து பிரிக்க வேண்டும். தான் இத்தனை நாள் காத்திருந்த எழிலை எப்படியாவது அடைய வேண்டும் என்ற வஞ்சத்தில் இருக்கிறான், இதையடுத்து, இன்னும் ஒரே வாரத்திற்குள் கயலிடமிருந்து எழிலை பிரிப்பதாகவும் மனதிற்குள் சவால் விட்டுக் கொள்கிறான்.

சண்டைக்கு வந்த சரவண வேலு அம்மா

சரவண வேலு, கயலையும் எழிலையும் பிரிக்க திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும் சமயத்தில் சரவண வேலுவின் அம்மா கோயிலுக்கு வருகிறாள், அங்கு எழிலுடன் கயல் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்த அவளுக்கு கோவம் வந்தது. இதனால், நேரடியாக எதுவும் கேட்க முடியாத நிலையில், கயலின் அப்பாவும் பெரியப்பாவும் செய்த தவறால் தான் அவரது கணவர் இறந்து போனதாக கயலிடம் சண்டை போடுகிறாள்.

அதிர்ந்து போன கயல்

சரவண வேலுவின் அம்மா கூறியதைக் கேட்ட கயல், அதிர்ந்து போய் நிற்கிறாள். பின், சரவண வேலுவின் அப்பா மரணத்திற்கு எனது அப்பா காரணமில்லை. அதை நான் நிச்சயம் நிரூபிப்பேன் என அவரிடம் கூறியுள்ளார். இதனால், தன் சொந்த ஊரில் இருக்கும் பிரச்சனைகளை எப்படி தீர்க்கப்போகிறேன் எனத் தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்.

பதற்றத்தில் பெரியப்பா

சரவண வேலுவின் அம்மா வந்து கயலிடம் சண்டை போடும் போது, அவரது பெரியப்பாவின் முகம் பயங்கரமாக மாறியது. ஏற்கனவே அவர் கயலிடம் ஒரு உண்மையை சொல்ல வேண்டும் என கூறி வரும் நிலையில், கயல் பழைய விஷயங்களை எதுவும் பேச வேண்டாம் எனக் கூறி தடுத்து வரும் நிலையில், நிச்சயம் சரவண வேலு அப்பா மரணம் விஷயத்தில் இருக்கு தொடர்பு இருக்கும் என இவரது நடவடிக்கையை பார்க்கும் போது தெரிய வருகிறது. இதற்கான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி