முதலிரவில் சபதம் போடும் கயல்.. என்ன சொல்வது என புரியாமல் கலங்கும் எழில்.. கயல் இன்றைய எபிசோட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  முதலிரவில் சபதம் போடும் கயல்.. என்ன சொல்வது என புரியாமல் கலங்கும் எழில்.. கயல் இன்றைய எபிசோட்

முதலிரவில் சபதம் போடும் கயல்.. என்ன சொல்வது என புரியாமல் கலங்கும் எழில்.. கயல் இன்றைய எபிசோட்

Malavica Natarajan HT Tamil
Nov 06, 2024 08:12 AM IST

தன் அப்பா எந்த தவறும் செய்யவில்லை என்பதை நிச்சயம் நிரூபித்தே காட்டுவேன் என கயல் தன் முதலிரவில் சபதம் போட்டதால் அதற்கு என்ன சொல்வது எனத் தெரியாமல் எழில் தவித்து நிற்கிறார்.

முதலிரவில் சபதம் போடும் கயல்.. என்ன சொல்வது என புரியாமல் கலங்கும் எழில்.. கயல் இன்றைய எபிசோட்
முதலிரவில் சபதம் போடும் கயல்.. என்ன சொல்வது என புரியாமல் கலங்கும் எழில்.. கயல் இன்றைய எபிசோட்

திட்டங்களை தவிடு பொடி ஆக்கும் கயல்

தன் மகன் எழிலை, கயல் திருமணம் செய்து கொண்டது பிடிக்காத சிவசங்கரி அவர்கள் இருவரையும் பிரிக்க பல திட்டங்களைத் தீட்டி வருகிறார். இவை எதுவும் கயலிடம் செல்லாததால், தீபாவளி சமயத்தில் மூக்கறுந்து நின்றார். இதையடுத்து, கயல் அவரது அத்தை சிவசங்கரியை வீட்டிலிருந்து கிளம்புமாறு கூறினார்.

முதலிரவில் வெட்கப்பட்ட கயல்

இந்த பிரச்சனைகல் எல்லாம் ஓய்ந்த நிலையில், ஒரு வழியாக கயலுக்கும் எழிலுக்கும் முதலிரவு ஏற்பாடுகள் நடந்தது. முதலிரவு அறைக்குள் சென்ற கயல் வெட்கத்தில் தலை குணிந்தே நின்றார்.

இதைப் பார்த்த எழில், பாரதி கண்ட புதுமைப் பெண் எங்கே எனக் கேட்க, நான் புதுமைப் பெண் இல்லை. கல்யாணம் ஆன புதுப் பெண் என பவ்யமாக பேசுகிறார். அத்துடன், தான் கொண்டு வந்த பாலை எழிலுக்கு தந்து, இத்தனை நாள் இல்லாத வகையில், எழிலை மிக மரியாதையோடு நடத்துகிறார்.

சபதம் ஏற்ற கயல்

இந்நிலையில், கயல் சீரியலில் இன்று நடக்கவுள்ள காட்சிகள் குறித்து சன் டிவி ப்ரோமோ வீடியோ வெளியிட்டுள்ளது. அதில், கயல் தன் அப்பாவை நினைத்து மிகவும் கலங்கி இருக்கிறார். அவர் எந்த தவறும் செய்யாதவர் என்பதை நிச்சயம் நிரூபிப்பதாக கூறி சபதமும் ஏற்கிறார்.

இதனால், இப்படி உணர்ச்சி வசப்பட்டு நிற்கும் கயலுக்கு எப்படி ஆறுதல் சொல்வது, கயலை மீண்டும் எப்படி இயல்பான மன நிலைக்கு கொண்டு வருவது என எழில் யோசித்து வருகிறார்.

கத்திக்குத்து பட்ட மூர்த்தி

மூர்த்தி கத்திக்குத்துடன் சிகிச்சை பெற்று வருவதயும், அவர் கயல் பெயரையும் அவரது மனைவி தனம் பெயரையும் தொடர்ந்து கூறிக்கொண்டே இருப்பதையும் அறிந்த கயல் இதுகுறித்து வீட்டில் உள்ளவர்களிடம் கூறினார்

தீபாவளி சீர்

வீட்டில் உள்ளவர்கள் மூர்த்திக்காக துடித்துவந்த நிலையில், புதிய பிரச்சனை ஒன்றை இழுத்துவிட்டிருந்தார் எழலின் அம்மா சிவசங்கரி. அப்போது தான், எழில் தனக்கு தீபாவளி சீராக நகைகள் போட வேண்டும் என கூறியதாக, சிவசங்கரி, மூர்த்தியிடம் நேரடியாக கூறியுள்ளார். இதைக் கேட்ட மூர்த்தி, செய்வது அறியாது நடந்தவற்றை அவரது மனைவி தனத்திடம் கூறியுள்ளார்.

இது கயலுக்கு தெரியவர வீட்டில் ஒரு பிரச்சனையே நடந்து முடிகிறது. பிரச்சனையை தூண்டி விட்ட சிவசங்கரி, தான் அப்படி கூறவில்லை என சபையோர் முன் கூறியதால், வீட்டில் தேவையற்ற சண்டை வேண்டாம் என நினைத்து மூர்த்தி தன் மீது பழியை சுமத்திக் கொண்டார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.