Priyanka Mohan: உன்னைவிட சின்னப் பொன்னு.. அவங்ககிட்ட இருந்து கத்துக்கோங்க.. விமர்சனத்திற்கு உள்ளான நடிகை
Sep 29, 2024, 10:09 AM IST
Priyanka Mohan: செல்ஃபி எடுக்க வந்தவரிடம் முகத்தை கோவமாக காண்பித்ததாகக் கூறி நடிகை பிரியங்கா மோகனை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனால், உணமையில் என்ன நடந்தது என்பதை நடிகை பிரியங்கா மோகன் விளக்கியுள்ளார்.
இயக்குநர் நெல்சன்- நடிகர் சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளியான டாக்டர் படம் மூலம் தழிழ் மொழி ரசிகர்களிடம் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். தமிழில் தனது முதல் படத்தில் வெளிப்படுத்திய எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
செல்ஃபியால் வந்த வினை
இதையடுத்து அவருக்கு, தமிழில் மார்க்கெட் அதிகரிக்க அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகினார். இதனால், தற்போது அவர் சென்னையிலேயே வீடு எடுத்து வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றபோது, அவரிடம் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க அனுமதி கேட்டுள்ளார்.
ஆனால், பிரியங்கா மோகன் அந்த நபரை கோபமாக பார்த்ததுடன், செல்ஃபி எடுக்கவும் மறுத்துள்ளார். பின் அந்த நபரை கண்டித்து விட்டு சிரித்தவாறு முகத்தை வைத்துக் கொண்டு செல்ஃபியையும் எடுத்துளளார். பின் போட்டோ எடுத்து முடித்தவுடன் மீண்டும் முகத்தை கோபமாக வைத்துள்ளார்.
தொடரும் ட்ரோல்கள்
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இவரை நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர். இவருக்கு பொது வெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனத் தெரியவில்லை.
ரசிகர்களை மதிக்கத் தெரியவில்லை என பல்வேறு விதமாக திட்டி வருகின்றனர்.
அதில் ஒருவர், பிரியங்கா மோகன் ரசிகர்களை கண்ணியமாக நடத்தி இருக்கக்கூட வேண்டாம். ஆனால், அவருக்கு பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவு இருக்க வேண்டும் என காட்டமாக கூறியிருந்தார்.
மற்றொருவரோ, பிரியங்கா மோகன் செல்பி கேட்டுக் கொண்டிருந்த பொதுமக்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். அவரிடம் திறமையும் இல்லை பண்பாடும் இல்லை. பொது நிகழ்ச்சிகளில் பார்வையாளர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை நடிகை கீர்த்தி ஷெட்டியிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள், அவர் உங்களை விட வயதில் மிகவும் சிறியவர் தான் எனக் கூறியதுடன் மட்டுமல்லாமல், பண்பாடற்ற பெண் சமுதாயத்திற்கு அவமானம் எனவும் திட்டியுள்ளார்.
மற்ற ஒருவரோ, சில நடிகைகளுக்கு நடிக்க வராது, ஆனால் ஆட வரும். சிலருக்கு ஆட வராது ஆனால் நடிக்க வரும். இவருக்கு ஒன்றுமே வராது என தாக்கியுள்ளார்.
ட்ரோலுக்கு நடுவில் வரும் ஆதரவு குரல்கள்
இது ஒருபுறம் இருக்க, சிலர் பிரியங்கா மோகனுக்கு ஆதரவான கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். பொது நிகழ்ச்சியில் பங்கேற்கும் நபர்களுக்கு தனியுரிமை முக்கியம். அவர்களுக்கு பாதுகாப்பு மிக அவசியம் எனக் கூறி வருகின்றனர்.
ஒரு நடிகை என்னால் செல்ஃபிக்கு போஸ் கொடுக்க முடியாது என சொல்வது எந்த வகையில் தவறு? அவருக்கும் தனிப்பட்ட சில விருப்பங்கள் உள்ளது. அதனை அனைவரும் மதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
மேலும், பிரியங்கா மோகன் மறுப்பு தெரிவித்திருந்தாலும் அவர் செல்ஃபி கேட்ட நபருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஆனால், நடிகையாக இருந்தாலும் பிரியங்காவிற்கு என சில உணர்வுகள் உள்ளது. மேலும், அதை நாமும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என சிலர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மற்றொரு நபர், உண்மை என்னவென்றால், நம் நாடு பெண்களுக்கு மிகவும் ஆபத்தானது மற்றும் நெரிசலான இடங்களில் 10 மடங்கு ஆபத்தானது. இந்த நடிகைகள் ஜாக்கிரதையாக இருப்பதை நான் குறை சொல்ல மாட்டேன் எனக் கூறியுள்ளார்.
விளக்கிய நடிகை
இப்படி மாறி மாறி பலரும் பிரியங்கா மோகனின் இந்த செயலுக்கு கருத்து கூறி வரும் நிலையில், இதுகுறித்து பேசிய அவர், செல்பி எடுத்துக் கொண்ட நபர் பல நாட்கள் தன்னை பின்தொடர்ந்து வந்துள்ளார். இவர் அந்த நபர் தன்னை பீனிக்ஸ் மாலில் இருந்து தனது வீட்டிற்கு முன்னதாகவே பின்தொடர்ந்து வந்ததாக கூறியுள்ளார். இதனால், நடிகர்களின் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதன் அவசியம் எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக அவர் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது, அவரை காரிலிருந்து கூட இறங்கவிடாமல் பலரும் வழிமறித்து செல்ஃபி கேட்டதால் அவர் எரிச்சலடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
நடிகை கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் வந்திருந்தாலும், தமிழ், தெலுங்கு மொழி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது ஜெயம்ரவியுடன் இவர் நடத்துள்ள பிரதர் திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.