Tamil News  /  Entertainment  /  Priyanka Mohan Priyanka Mohan Has Raised Questions About Womens Safety

Priyanka Mohan : பெண்கள் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ள பிரியங்கா மோகன்!

Priyadarshini R HT Tamil
Jan 06, 2024 05:30 PM IST

Priyanka Mohan : பெண்கள் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ள பிரியங்கா மோகன்!

Priyanka Mohan : பெண்கள் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ள பிரியங்கா மோகன்!
Priyanka Mohan : பெண்கள் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ள பிரியங்கா மோகன்!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படம் ரலீஸ் ஆகிறது. இந்தப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் படத்தில் ஆக்சன் காட்சிகளில் கலக்கியுள்ளார்.

இந்நிலையில், அண்மையில் இந்தப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்நிகழ்ச்சிக்கு தனுஷ் தலைமை வகித்தார். அதில் பிரியங்கா மோகனும் கலந்துகொண்டார்.

தொடர்ந்து அந்த படத்தின் புரமோஷனுக்காக யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார். சமீபத்தில் பிரியங்கா மோகன் அளித்த பேட்டியில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசியுள்ளார்.

இந்நிலையில் அந்த பிரமாண்ட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளினி ஜஸ்வர்யாவுக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த செய்தி பெரும் பரபரப்பை அண்மையில் கிளப்பியது. அவர் அந்த நிகழ்ச்சியிலே அந்த இளைஞரை பிடித்து கண்டித்திருந்தார். இந்நிலையில் அவர் பெண்கள் பாதுகாப்பு குறித்து மேலும் பேசுகையில்,

அந்தப்படத்தில் தான் துப்பாக்கி ஏந்தி ஆக்சன் காட்சிகளில் நடித்தது குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். துப்பாக்கி பிடிக்க தான் கற்றுக்கொண்ட அனுபவங்களையும் கூறினார்.

அப்போது பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அனைவரும் மனித உயிர்கள்தான். ஆண், பெண் இருவருக்கும் சம பாதுகாப்பு வேண்டும். உங்கள் அம்மா, தங்கச்சிக்கு இந்த நிலை ஏற்பட்டால், சும்மா விடுவீர்களா? நீங்கள் மட்டும் மற்றொரு பெண்ணுக்கு எப்படி தீங்கிழைக்கலாம் என கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரியங்கா மோகன் நடித்த டிக்டாக் படத்தில் அவர் நடித்த சில காட்சிகளை காணவில்லை என்ற சர்ச்சை கடந்த ஆண்டு எழுந்தது. இந்நிலையில் அவர் நடித்த கேப்டன் மில்லர் படம் வெளியாகவுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.