தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay Sethupathi: ‘கீர்த்தி ஷெட்டியுடன் ஜோடியாக நடிக்காதது ஏன்?’ - மனம் திறந்த விஜய்சேதுபதி.. ஓ இது தான் காரணமா?

Vijay Sethupathi: ‘கீர்த்தி ஷெட்டியுடன் ஜோடியாக நடிக்காதது ஏன்?’ - மனம் திறந்த விஜய்சேதுபதி.. ஓ இது தான் காரணமா?

Marimuthu M HT Tamil
Jun 11, 2024 12:06 PM IST

Vijay Sethupathi: விஜய் சேதுபதி நடிகை கீர்த்தி ஷெட்டியுடன் ஜோடியாக நடிக்காதது ஏன் என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.

Vijay Sethupathi: ‘கீர்த்தி ஷெட்டியுடன் ஜோடியாக நடிக்காதது ஏன்?’ - மனம் திறந்த விஜய்சேதுபதி.. ஓ இது தான் காரணமா?
Vijay Sethupathi: ‘கீர்த்தி ஷெட்டியுடன் ஜோடியாக நடிக்காதது ஏன்?’ - மனம் திறந்த விஜய்சேதுபதி.. ஓ இது தான் காரணமா?

ட்ரெண்டிங் செய்திகள்

விஜய் சேதுபதி கடந்து வந்த பாதை:

விஜய் சேதுபதி குறுகிய காலத்திற்குள்ளேயே முன்னணி நடிகரானவர். அவர் தேர்வு செய்து நடிக்கும் கதையும், கதாபாத்திரமும் தனித்துவமாக இருக்கும். ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்றில்லாமல், அனைத்துவித கதாபாத்திரங்களையும் ஏற்று நடிப்பவர். அதில் முத்திரையும் பதிப்பவர். அவர் நடிக்கும் எந்தப் படமும் பெரும்பாலும் முதலீட்டுக்கு மோசம் வைக்காது.

எனவே, இவரது கால்ஷீட்டுக்காக கோலிவுட்டே தவம் இருக்கிறது. '’தென்மேற்கு பருவக்காற்று’’ படத்தில் அறிமுகமான விஜய் சேதுபதி பொங்கலை ஒட்டி, தனது தனித்துவமான நடிப்பு மூலம் பாலிவுட் வரை நடிகராகச் சென்றிருக்கிறார். 

உச்ச நடிகர்களான விஜய், கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஷாருக்கான் என முன்னணி நட்சத்திரங்களுக்கு வில்லனாகவும் நடித்து, தனக்குள் இருக்கும் வில்லத்தனமிக்க நடிகனை வெளிப்படுத்தியவர்.

அத்தகைய நடிகர் விஜய்சேதுபதி 50ஆவதாக நடித்து முடித்து இருக்கும் படம், மகாராஜா. இந்தப் படத்தை ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இயக்கியுள்ளார். 

இந்நிலையில் சென்னையில் ‘மகாராஜா’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி அமர்ந்திருந்தார். அப்போது அவரிடம் இளம் கதாநாயகிகளுடன் ஹீரோக்கள் நடிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு விஜய் சேதுபதி ஒரே தலைப்பில் தான், முன்பே கூறிய கருத்துகளை மீண்டும் கூற விரும்பவில்லை எனவும், ஏற்கெனவே இந்த தலைப்பில் உரையாற்றிவிட்டதாகவும் 'தயவுசெய்து அதை விட்டுவிடுங்கள்' என்றும் சொல்லி முடித்தார். 

விஜய்சேதுபதி சொன்னது  என்ன?

இந்த விஷயம் குறித்து விஜய் சேதுபதியிடம் ஒரு பேட்டியில் கேட்டபோது, "நான் ஏற்கனவே இதுகுறித்துப் பேசிவிட்டேன். நான் 2021-ல் உப்பென்னாவில் கீர்த்தி ஷெட்டியுடன் நடித்தேன். பின்னர், ஒரு இயக்குநர் என்னிடம் வந்து கதாநாயகியாக மற்றொரு படத்திற்கு, கீர்த்தி ஷெட்டியையே அணுகலாம் என்று கூறினார். உப்பென்னாவின் க்ளைமாக்ஸ் காட்சியின்போது, என்னை அப்பாவாக கருதும்படி கீர்த்தி ஷெட்டியிடம் கேட்டுக்கொண்டுவிட்டேன். அதனால், நான் மீண்டும் அவருடன் சேர்ந்து நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.

ஒரு படத்தில் ஹீரோவுடன் நடிக்கலாமா வேண்டாமா என்பது குறித்த அதே முடிவு அப்படத்தில் நடிக்கும் நடிகையிடமும் உள்ளது. அவர் என்னுடன் நடிக்க விரும்பவில்லை என்று என்னிடம் சொல்லியிருந்தால் என்ன செய்வது, ஏனென்றால் ‘இந்த நபர் என்னை அப்பாவாக கருதச் சொன்னார்’ எனச் சொன்னால் என்ன செய்வது. அவளால் வேண்டாம் என்றும் சொல்ல முடியும். இந்த கேள்விக்கு நான் முன்பே பதில் அளித்துள்ளேன். தயவு செய்து அதை விட்டுவிடுங்கள்"என்றார்.

அதே பத்திரிகையாளர் சந்திப்பில், விஜய் சேதுபதி, நடிகர் பவன் கல்யாணை பாராட்டினார், மேலும் அவர் திரைப்படங்களில் மட்டுமல்ல என்றும்; நேரிலும் பவன் கல்யாண் ஒரு மாஸ் ஹீரோ என்றும் கூறினார்.

பவன் கல்யாணுக்கு வாழ்த்து கூறிய விஜய்சேதுபதி:

தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி சமீபத்தில் ஆந்திராவில் சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல்களில் தெலுங்கு தேசம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட 21 சட்டமன்ற இடங்களிலும், இரண்டு மக்களவைத் தொகுதிகளிலும் வென்றதன் மூலம் 100 விழுக்காடு வெற்றியை அடைந்தது.

இதற்கிடையில், விஜய் சேதுபதி, தனது 50ஆவது படமான மகாராஜா வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் அனுராக் காஷ்யப்பும் நடித்துள்ளார். இப்படம் ஜூன் 14-ம் தேதி வெளியாகவுள்ளது.

 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்