தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தோள் மீது கை படா நட்பு..மத்தியஸ்தம் செய்த மரியாதை.. “அப்பா இறக்கும் போது கூட” - பாலு - வாசு நண்பர்களான கதை

தோள் மீது கை படா நட்பு..மத்தியஸ்தம் செய்த மரியாதை.. “அப்பா இறக்கும் போது கூட” - பாலு - வாசு நண்பர்களான கதை

Nov 24, 2024, 08:30 AM IST

google News
அப்பா படுக்கையில் இருந்த போது பாலு சார் அடிக்கடி போனில் அழைத்து. அப்பாவின் நலம் குறித்து விசாரிப்பார்.- பாலு - வாசு நண்பர்களான கதை
அப்பா படுக்கையில் இருந்த போது பாலு சார் அடிக்கடி போனில் அழைத்து. அப்பாவின் நலம் குறித்து விசாரிப்பார்.- பாலு - வாசு நண்பர்களான கதை

அப்பா படுக்கையில் இருந்த போது பாலு சார் அடிக்கடி போனில் அழைத்து. அப்பாவின் நலம் குறித்து விசாரிப்பார்.- பாலு - வாசு நண்பர்களான கதை

பாலசுப்பிரமணியத்திற்கும், மலேசியா வாசுதேவனுக்கும் இடையே இருந்த நட்பு குறித்து மலேசியா வாசுதேவனின் மகள் பிரியதர்ஷினி ரெட்நூல் யூடியூப் சேனலுக்கு பேசி இருந்தார். அந்த பேட்டியை இங்கே பார்க்கலாம்.

 

எஸ்.பி.பி, மலேசிய வாசுதேவன்

இது குறித்து அவர் பேசும் போது, “ உண்மையில் பாலசுப்ரமணியம் சாருக்கும், அப்பாவிற்கும் இடையே ஒரு நல்ல பிரண்ட்ஷிப் இருந்தது. ஆனால், அந்த பிரண்ட்ஷிப் வேறு மாதிரியாக இருந்தது. ஆம், அவர்கள் பிற நண்பர்கள் போல, தினமும் செல்போனில் பேசிக் கொள்ள மாட்டார்கள்; அடிக்கடி சந்தித்து கொள்வது கிடையாது; அவர்களுக்கு இடையே ஒரு விதமான மரியாதை கலந்த நட்பு இருந்தது.  அதாவது, இவர் எந்த அளவு சாதனைகள் புரிந்திருக்கிறார் என்பதை அவரும், அவர் எந்த அளவு சாதனைகளை புரிந்து இருக்கிறார் என்பதை இவரும் மனதில் ஏற்றிக்கொண்டு பழகினார்கள். 

 

மலேசியா வாசுதேவன்

அப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது, பாலு சார் அடிக்கடி போனில் அழைத்து, அப்பாவின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து கேட்பார். அப்பாவின் மீதான அவரது அக்கறை ஆழமாகவே இருந்தது. பாட்டு கச்சேரிகளில் இருவரும் பாடும் பொழுது, அவர்கள் பாடல்கள் பாடுவது போல இருக்காது. இருவரும் சேர்ந்து பேசிக்கொள்வது போலதான் இருக்கும்.

அவர்களும் அதை அப்படித்தான் எடுத்துக் கொண்டு பாடினார்கள். அதற்கு உதாரணமாக மிஸ்டர் பாரத் திரைப்படத்தில் இருந்து வெளியான என்னம்மா கண்ணு பாடலை சொல்லலாம்; மேடையில் கூட அவர்கள் படத்தின் கதாபாத்திரங்களாக மாறி, பாடுவார்கள்.அதனால் தான் என்னமோ அந்த பாடல்கள் அந்த நடிகர்களுக்கு அவ்வளவு பொருத்தமாக இருந்தது என்று நான் நினைக்கிறேன்” என்று பேசினார்.

 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி