அந்த அப்பாவி நடிகையா இப்படி ஆகிட்டாங்க! வெகுளியாக இருந்தவருக்கா இந்த நிலை! குமுறும் 90'ஸ் கிட்ஸ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அந்த அப்பாவி நடிகையா இப்படி ஆகிட்டாங்க! வெகுளியாக இருந்தவருக்கா இந்த நிலை! குமுறும் 90'ஸ் கிட்ஸ்

அந்த அப்பாவி நடிகையா இப்படி ஆகிட்டாங்க! வெகுளியாக இருந்தவருக்கா இந்த நிலை! குமுறும் 90'ஸ் கிட்ஸ்

Malavica Natarajan HT Tamil
Oct 22, 2024 03:31 PM IST

அப்பாவி தயிர் சாதமாக நடித்து மக்கள் மனதில் இடம் பெற்ற நடிகை பிரியங்காவா இப்படி அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார் என 90'ஸ் கிட்ஸ்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளனர்.

அந்த அப்பாவி நடிகையா இப்படி ஆகிட்டாங்க! வெகுளியாக இருந்தவருக்கா இந்த நிலை! குமுறும் 90'ஸ் கிட்ஸ்
அந்த அப்பாவி நடிகையா இப்படி ஆகிட்டாங்க! வெகுளியாக இருந்தவருக்கா இந்த நிலை! குமுறும் 90'ஸ் கிட்ஸ்

மக்களை கவரும் நடிப்பு

தனது வெகுளியான நடிப்பால், அஜித்தை மட்டுமல்ல நம்மையும் அவர் வசம் இழுத்திருப்பார். இந்தப் படத்தில் உள்ள இவரது பெரும்பாலான சீன்கள் பலருக்கும் ஆல் டைம் பேவரைட் தான்.

அஜித் எழுதிய புத்தகத்தின் வரிகளில் பிடித்தமானவற்றை கூறுவது, அஜித் கொடுத்த முத்தத்தால் காய்ச்சலில் அவதிபடுவது, சுவிங்கத்தை வாயிலிருந்து எடுப்பது போன்ற சீன்கள் இவரை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது.

பேச்சால் மயக்கிய நடிகை

அதே சமயம், பிரியங்காநடிகர் விக்ரமுடன் நடித்த காதல் சடுகுடு படமும் மிகப் பெரிய அளவில் பிரியங்காவை ரசிகர்களுடன் இணைத்து வைத்தது. இந்தப் படத்தில் தன்னைப் பற்றி பெருமையாகவும், தன்னை ஒரு இளைஞன் சுற்றி சுற்றி வருவதாகவும் நண்பர்களிடமும், உறவுக்கார பெண்ணிடமும் கூறி மக்களை கவர்ந்திருப்பார் பிரியங்கா.

இந்தப் படங்களின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்திருந்தாலும் இவர் நடித்த முதல் தமிழ் படம் நடிகர் விஜயகாந்த்தின் ராஜ்ஜியம் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படங்களைத் தொடர்ந்து அவர், ஜனனம், ஐஸ் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.

பெங்காலி பொன்னு

கொல்கத்தாவை பூர்வீகமாக கொண்ட இவர், முதலில் பெங்காலி திரைப்படத்தில் நடித்ததன் மூலமாகத் தான் சினிமா துறையில் அறிமுகமானார். பின் மெல்ல மெல்ல பாலிவுட்டிற்கு வந்த அவர், ஒடியா, தமிழ், கன்னட படங்களில் நடித்து வந்தார்.

திருமணம்

பின் அவர் கன்னட திரைப்பட நடிகரான உபேந்திராவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர், திருமண வாழ்க்கையைத் தொடர்ந்து அதிகம் படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்த இவர், பின்நாளில் கன்னடம் மற்றும் பெங்காலி மொழி படங்களில் மட்டும் நடித்து வந்தார்.

இதன் மூலம் இவர் சுமார் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர், கன்னட மொழியில் போலீஸ் அதிகாரியாக மிரட்டியும் உள்ளார்.

போலீஸ் அதிகாரியாக என்ட்ரி

இந்த சமயத்தில் தான் பிரியங்கா உபேந்திரா உக்ராவதாரம் எனும் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக சென்னை வந்துள்ளார். இவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை வந்திருந்தாலும் தமிழ் மொழியை மறக்கவில்லை.

மக்கள் மனதில் இருக்கிறேன்

நிகழ்ச்சியில் பேசிய அவர், எனக்கு தமிழ் மொழியும், தமிழ் மக்களும் மிகவும் பிடிக்கும். இத்தனை ஆண்டுகள் கடந்திருந்தாலும் என்னை இன்றும் தயிர் சாதம் என நினைவு வைத்து அழைப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. அந்த அளவு ரசிகர்களின் மனதில் நான் இருக்கிறேன். இந்தப் படத்தில் ஒரு ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். போலீஸ் அதிகாரியாக நான் நடித்துள்ள படம் நவம்பர் 1ம் தேதி வெளியாகிறது. அனைவரும் எனக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் எனப் பேசியிருந்தார்.

மண்டைக்குள் ஓடிக் கொண்டிருக்கும் நடிகை

ராஜா, காதல் சடுகுடு படங்களில் மிகவும் வசீகரிக்கும் தோன்றத்தில் காணப்பட்ட இவர், தற்போது மொத்தமும் ஆளே மாறிப் போய் இருக்கிறார். இப்படி இவரைப் பார்த்த ரசிகர்கள் இவருக்கு என்ன நடந்தது? உடலில் ஏதேனும் பிரச்சனையா? அல்லது முகத்தை அழகுபடுத்த நினைத்து இப்படி ஆகிவிட்டாரா என பல கேள்விகளைக் கேட்ட வண்ணமாக இருக்கின்றனர். இதனால், கடந்த 2 நாட்களாக இவர் தான் 90'ஸ் கிட்களின் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருக்கிறார்.,

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.