Story of Song : மலேசியா வாசுதேவன் குரலில்.. இசைராஜா இசையில்.. காதில் தேனூறும்.. கோடைக்கால காற்றே பாடல் உருவான கதை!
Oct 15, 2023, 05:45 AM IST
பன்னீர் புஷ்பங்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற கோடைக்கால காற்றே பாடல் உருவான கதை குறித்து காண்போம்
1981ம் ஆண்டு ஜீலை 3ம் தேதி வெளியானது பன்னீர் புஷ்பங்கள் திரைப்படம். இது விடலைப்பருவத்தில் ஏற்படும் காதல் குறித்த திரைப்படம். இந்தப்படத்தை சந்தான பாரதி மற்றும் பி.வாசு ஆகியோர் இணைந்து இயக்கியிருப்பார்கள். பி.வாசுவின் முதல் படம். பிற்காலத்தில் அவர் புகழ்பெற்ற நடிகர் ஆனார். இந்தப்படத்தில் பிரதாப் போத்தன், வெண்ணிற ஆடை மூர்த்தி, சுரேஷ் குமார், ஷாந்தி கிருஷ்ணா (புதுமுகங்கள்) நடித்திருப்பார்கள். இந்தப்படம் வெளியாகி அடுத்தாண்டு மதுர கீதம் என்ற பெயரில் தெலுங்கில் வெளியானது.
பன்னீர் புஷ்பங்கள் திரைப்படம், அரவிந்த் பிரபு மற்றும் உமா இடையே ஏற்படும் பள்ளி பருவ காதலை விளக்கும் திரைப்படம். மேலும் இந்தப்படத்திற்கு பாடல்கள் பெரும் பலம் சேர்த்தன. அவை இன்றும் 80களின் பாடல்களில் முன்னிலையில் உள்ளவை. பாடல்களுக்கு இசையை இளையராஜா அமைத்திருந்தார். பாடல்களை எழுதியவர் கங்கை அமரன்.‘ஆனந்தராகம் கேட்கும் காலம்’ பாடல் உமா ரமணனின் ஷார்ப்பான குரலில் கேட்கும்போதோ நம் மனதில் உற்சாகத்தை விதைத்து செல்லும்.
‘பூந்தளிர் ஆட பாடலை’ எஸ்.பி.பியும், ஜானகியும் பாடியிருப்பார்கள். அந்தப்பாடல் அந்த விடலைப்பருவ ஜோடிகளின் உணர்ச்சிகளை அப்படியே பிரதிபலித்திருக்கும்.
‘வெங்காய சாம்பாரும்’ என்ற பாடல் தீபன் சக்ரவர்த்தி, எஸ்.என். சுரேந்தர் மற்றும் டிகேஎஸ் பாடியிருப்பார்கள். அது ஒரு ஜாலியான பள்ளி மாணவர்கள் பாடும பாடல்கள்.
‘கோடை கால காற்றே’ என்ற பாடல் பிரதாப் போத்தன் கிட்டார் இசைத்துக்கொண்டு பாடுவார். அது அந்த காலத்தில் அவரது மேனரிசமாக இருந்தது. மலேசியா வாசுதேவன் குரலில் பாடல் இன்றளவும் விரும்பும் வகையில் உள்ளது. இந்த பாடல் உருவான கதை குறித்து இதில் காண்போம்.
”கோடைக்கால காற்றே
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே
மனம் தேடும் சுவையோடு
தினம்தோறும் இசைபாடு
அதை கேட்கும் நெஞ்சமே
கோடைகால காற்றே
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே
வானில் போகும் மேகம் இங்கே
யாரைத் தேடுதோ
வாசம் வீசும் பூவின் ராகம்
யாரைப் பாடுதோ
தன் உணர்வுகளை மெல்லிசையாக
நம் உறவுகளை வந்து கூடாதோ
திருநாளும் கூடட்டும்
சுகம் தேடி ஆடட்டும்
இவைகள் இளமாலை பூக்களே
குழு : லலல லல லல லல லல லா
புதுச்சோலை பூக்களே
குழு : லலல லல லல லல லல லா
புதுச்சோலை பூக்களே”
இந்த பாடல் மலேசியா வாசுதேவன் மாஸ்டர் பீஸ் என்றே சொல்லலாம். அமரனின் அழகான வரிகள், இசைஞானியின் மனதை வருடும் இசை, வாசு சாரின் இளமையான மென்மையான குரல், பால் வடியும் முகத்துடன் சுரேஷ் சாந்தி கிருஷ்ணா என்றென்றும் நினைவில்
இருக்கும் அற்புதப் பாடல் கோடை கால காற்றே. இப்பாடல் குளிர்கால காற்றாய் இனிக்கும். மலை பிரதேசத்தை நினைவு படுத்தி நம்மை நேராக அங்கேயே கொண்டு செல்லும்.
அந்த வயலின்,அந்த புல்லாங்குழல் இசையை ராஜா அவர்கள் பயன்படுத்திய அற்புதமாக இருக்கும். நாற்பது வருடங்களுக்கு மேல் கடந்துவிட்டபோதிலும், இன்றும் கூட காதில் தேனூறும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்