தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  என்ன செஞ்சாலும் குத்தம்.. இப்போ இதுக்கெல்லாம் பழகிட்டேன்- ஆதங்கத்தில் பாலிவுட் நடிகை

என்ன செஞ்சாலும் குத்தம்.. இப்போ இதுக்கெல்லாம் பழகிட்டேன்- ஆதங்கத்தில் பாலிவுட் நடிகை

Oct 18, 2024, 04:10 PM IST

google News
எதிர்மறை விமர்சனங்கள் நம்மை தொந்தரவு செய்யாமல், அதனை எளிதாக கையாள்வது எப்படி என தற்போது அறிந்ததாக பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா கூறியுள்ளார்.
எதிர்மறை விமர்சனங்கள் நம்மை தொந்தரவு செய்யாமல், அதனை எளிதாக கையாள்வது எப்படி என தற்போது அறிந்ததாக பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா கூறியுள்ளார்.

எதிர்மறை விமர்சனங்கள் நம்மை தொந்தரவு செய்யாமல், அதனை எளிதாக கையாள்வது எப்படி என தற்போது அறிந்ததாக பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா கூறியுள்ளார்.

பாலிவுட்டில் பேர் சொல்லும் அளவிற்கு பல படங்களில் நடித்திருந்தாலும், மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் தைய தையா பாடலுக்கு நடனமாடி இந்த அளவில் பிரபலமானவர் தான் மலைக்கா அரோரா. தற்போது 50 வயதைக் கடந்த அவர், தன் வாழ்வில் ஏராளமான எதிர்மறை விமர்சனங்களை சந்தித்ததாகவும், தற்போது அதனை எவ்வாறு கையாள்வது என கற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

மலைக்கா அரோரா காதல், திருமணம், உறவுமுறை போன்ற விஷயங்களுக்காக அதிகளவிலான தாக்குதல்களை சோசியல் மீடியாவில் பெற்றுள்ளார். இந்நிலையில், இதுகுறித்து அவர், குளோபல் ஸ்பா எனும் இதழுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அப்போது பேசிய மலைக்கா தனது தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த வாழ்க்கையின் மீது பல விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது.

விமர்சனங்களை இப்படித் தான் எதிர்கொள்கிறேன்

தனது உறவுகள் மற்றும் வாழ்க்கைத் தேர்வுகள் குறித்த விமர்சனங்களை என்னால் முடிந்த அளவு கடந்து செல்கிறேன். சில சமயங்களில் இந்த விஷயங்கள் எல்லாம் என்னை பெரிதாகத் தொந்தரவு செய்யாது. ஆனால் பெரும்பாலான நேரங்களில் தொடர் விமர்சனங்கள் என்னை பாதிக்கின்றன.

ஆனால், அவற்றைச் சமாளிப்பதற்கான ஒரு வழியையும் நான் கண்டுபிடித்துள்ளேன். எனக்கு பிடித்த விஷயங்களில் நான் மிகவும் பற்று வைத்து அதனை வலுவாக நம்புகிறேன். அதனால், அது சார்ந்து வரும் விமர்சனங்கள் என்னை கீழே இழுக்கவோ, என்னை கட்டுப்படுத்த நினைக்கவோ விடக்கூடாது. இதற்காக நான் என்னை அனைத்திலிருந்தும் தனிமைப்படுத்தவும் விரும்பவில்லை எனக் கூறியிருக்கிறார்.

விமர்சனங்கள் என்பசு வாழ்க்கையின் ஒரு பகுதி. தொடர்ந்து ஏதேதோ விமர்சனங்களும், சோசியல் மீடியாவில் ட்ரோலிங்குகளும் உலாவருவதால் அவை என் வாழ்க்கையின் எந்த முடிவையும் தடுத்து நிறுத்தாது. இதனைக் கண்டுகொள்ளாமல் என் சிந்தனை என்ன சொல்கிறதோ அதன் வழியில் சென்று முன்னேற நினைக்கிறேன் எனக் கூறியிருந்தார்.

மலைக்கா அரோராவின் தனிப்பட்ட வாழ்க்கை

மலைக்கா அரோரா நடிகர் அர்பாஸ் கானை திருமணம் செய்து குடும்பம் நடத்திவந்த நிலையில், அவரை 2017ம் ஆண்டு விவாகரத்து செய்தார். இவர்களுக்கு அர்ஹான் என்ற மகன் உள்ளார். இதையடுத்து, தயாரிப்பாளர் போனி கபூரின் மகனான அர்ஜூன் கபூருடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழத் தொடங்கினார். இதுவே, இவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பலரும் விமர்சிக்க காரணமாக அமைந்தது.

மலைக்கா அரோரா அர்ஜூன் கபூரை விட 12 வயது பெரியவர். நடிகை என்பதால், தன் உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொண்டு, சிறுவயது நபரின் வாழ்க்கையில் விளையாடுகிறார் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

அத்துடன் நில்லாமல், இருவர் குறித்த ஏராளமான வதந்திகளை கூறி வந்தனர். இதனை அர்ஜூன் கபூரும், மலைக்கா அரோராவும் கண்டுகொள்ளாமலே இருந்த நிலையில், திடீரென இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்க விரும்பாத இருவரும் சோசியல் மீடியாவில் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். இதனால், மலைக்கா அரோரா குறித்து மீண்டும் சர்ச்சைகள் சுற்றத் தொடங்கின.

தந்தை மரணம்

இந்நிலையில் தான் மலைக்கா அரோராவின் வளர்ப்புத் தந்தையான அனில் மேத்தா கடந்த செப்டம்பர் 11ம் தேதி மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த மலைக்கா அரோரா, அவர் மிகவும் பாசமான தந்தை. நல்ல நண்பர். எங்களிடம் மிகவும் அர்ப்பணிப்பு மிகுந்தவராக இருந்தார். அவரது இழப்பு எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, எங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மீதான விமர்சனங்களுக்கு சிறிது ஓய்வு அளியுங்கள் எனக் குறப்பிட்டிருந்தார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி