Malaika Arora: அர்ஜுன் கபூருடனான உறவை உறுதி செய்த மலைக்கா அரோரா
நடிகை மலைக்கா அரோரா, அர்ஜுன் கபூரின் காதலுக்கு பச்சை கொடி காட்டியுள்ளார்.
பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா, சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை 1998 ஆம் திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2017 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்தனர்.
அதன்பிறகு அவர் பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூருடன் டேட்டிங் செய்து வருகிறார். கடந்த ஆறு வருடங்களாக இவர்கள் இருவரும் பல இடங்களில் காணப்படுகின்றனர். இந்த ஆண்டு இவர்கள் திருமணம் செய்யப் போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் அர்ஜுன் மலைகாவை திருமணம் செய்து கொள்ள முன்வந்துள்லார். அவரும் இதற்கு ஓகே சொன்னார்.
இதை மலாய்கா தான் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் தெரிவித்தார். நான் ஆம் என்று சொன்னேன் என்று கூறி காதல் எமோஜிகளுடன் வெட்கப்படும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பொது மக்கள் முதல் பிரபலங்கள் வரை மலைக்காவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் எதிர்மறையான கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
மலாக்காவுக்கு, அர்ஹான் கான் என்ற 19 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அர்பாஸுடனான விவாகரத்துக்குப் பிறகு அர்ஹான் அவருடன் இருக்கிறார்.
அர்ஜுன் கபூருக்கு 37 வயது, மலைக்காவுக்கு 49 வயது. சுமார் 12 வயது குறைவான ஒருவரை திருமணம் செய்ய போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்