தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அலற வைக்கும் சிவகார்த்திகேயனின் அமரன்.. ஈடு கொடுத்து டஃப் கொடுத்தாரா துல்கர் - லக்கி பாஸ்கர் வசூல் எவ்வளவு?

அலற வைக்கும் சிவகார்த்திகேயனின் அமரன்.. ஈடு கொடுத்து டஃப் கொடுத்தாரா துல்கர் - லக்கி பாஸ்கர் வசூல் எவ்வளவு?

Nov 10, 2024, 01:33 PM IST

google News
அமரன் திரைப்படத்திற்கு டஃப் கொடுத்து இருக்கிறதா துல்கரின் லக்கி பாஸ்கர் என்பதை இங்கே பார்க்கலாம்.
அமரன் திரைப்படத்திற்கு டஃப் கொடுத்து இருக்கிறதா துல்கரின் லக்கி பாஸ்கர் என்பதை இங்கே பார்க்கலாம்.

அமரன் திரைப்படத்திற்கு டஃப் கொடுத்து இருக்கிறதா துல்கரின் லக்கி பாஸ்கர் என்பதை இங்கே பார்க்கலாம்.

தனுஷ் வாத்தி படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி பொருளாதார குற்றப் பின்னணியை மையமாக வைத்து இயக்கிய படம் லக்கி பாஸ்கர். இந்தப் படத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, ராம்கி, சச்சின் கடேக்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லக்கி பாஸ்கர் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப்படத்தின் வசூல் விபரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

பாக்ஸ் ஆபீஸ் தகவல்களை வெளியிடும் Sacnilk தளம் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் பார்க்கும் போது, லக்கி பாஸ்கர்’ திரைப்படம் இந்தியாவில் மட்டும் கடந்த 10 நாட்களில் 48.60 கோடி வசூல் செய்திருக்கிறது. நேற்று மட்டும் இந்தியாவில் லக்கி பாஸ்கர் திரைப்படம் 4.75 கோடி வசூல் செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் இந்தப்படத்தை 54.42 சதவீத மக்கள் பார்த்து இருக்கிறார்கள். உலகளவில் இந்தப்படம் 75 கோடியை தாண்டி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த அளவிலான வசூலில் லக்கி பாஸ்கர் சீராக செல்லும் போது, அடுத்த 7 நாட்களில் 100 கோடி ரூபாயை வசூலிக்கும் என்று சொல்லப்படுகிறது.

லக்கி பாஸ்கர் படத்தின் கதை

தனியார் வங்கியில் பணி புரியும் துல்கர் சல்மான் அவரது குடும்ப வறுமையின் காரணமாக ப்ரோமோஷன்காக காத்துக் கொண்டிருக்கிறார். இருப்பினும் ஊழியர்களின் அரசியலால் அந்த ப்ரோமோஷன் வேறு ஒரு நபருக்கு கிடைக்கிறது. இதன் காரணமாக வங்கியில் இருந்து பணத்தை திருடி வெளியில் ராம்கியுடன் இணைந்து தொழில் செய்கிறார்.

இந்த தொழிலில் பெறும் தொடர் லாபத்தால் மீண்டும் வங்கியில் திருடுகிறார். திருடிய பணத்தை திருப்பி அங்கேயே வைத்து விடுகிறார். ஒரு நாளில் இது தவறான உணரும் துல்கர் சல்மான் திருடுவதை நிறுத்தி விடுகிறாரா? இல்லை தொடர்கிறாரா? என்பதே மீதி கதை முழுக்க முழுக்க குற்ற பின்னணியை கொண்டு இந்த கதை உருவாகியுள்ளது. சுவாரசியமான திரைக்கதை நேர்த்தியான நடிப்பு சரியான வசனங்கள் என படம் அனைத்து துறைகளிலும் வெளுத்து வாங்குகிறது.

அப்பாவுக்கு ஏற்ற மகன்

துல்கர் சல்மான் மலையாள ஹீரோ மெகா ஸ்டார் மம்முட்டியின் மகனாக சினிமாவில் அடியெடுத்து வைத்தாலும், தனது அழகான தோற்றத்தாலும், அப்பாவுக்கு ஏற்ற மகனாக நடித்தும் தனக்கென தனி ரசிகர்களை சம்பாதித்து வருகிறார். அதன் பிறகு தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவிலும் மெல்ல மெல்ல கால் பதித்திருக்கிறார். இப்போது தெலுங்கு இளைஞர்கள் மத்தியில் டோலிவுட் ஹீரோவுக்கு இருக்கும் அதே க்ரேஸ் துல்கருக்கும் இருக்கிறது.

டோலிவுட் லக்கி ஹீரோவான துல்கர் சல்மான்

டோலிவுட்டில் துல்கரின் நான்காவது வெற்றிப் படமாக லக்கி பாஸ்கர் அமைந்துள்ளது. முதலாவதாக நாக் அஸ்வின் இயக்கிய மகாநடி படத்தின் மூலம் துல்கர் தெலுங்கு சினிமாவிற்குள் அடி எடுத்து வைத்தார். நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான இதில், துல்கர் சல்மான் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றதுடன் தேசிய விருதையும் தட்டிச் சென்றது.

அதன்பிறகு சீதாராமம் படத்தில் நடித்த அவர், நடிகை மிருணாள் தாக்கூருடன் இணைந்து ரசிகர்களைக் கவரும் மேஜிக் செய்திருப்பார். இதனைத் தொடர்ந்து, கல்கி கி.பி 2898 படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருப்பார். இந்தப் படம் இந்திய அளவில் அதிக வெற்றியைப் பெற்ற நிலையில், துல்கர் ஒரு அதிர்ஷ்டசாலி என தெலுங்கு திரையுலகத்தினர் மத்தியில் நிரூபித்திருக்கிறார்.

இதனுடன் வெளியான அமரன் திரைப்படம் பிரமாண்ட வெற்றியைப் பெற்றிருக்கும் நிலையில், இதர திரைப்படங்களான பிரதர் மற்றும் பிளடி பக்கர் படுதோல்வி அடைந்திருக்கிறது.

அமரன் திரைப்படம் வெளியாகி 10 நாட்கள் நிறைவடைந்த நிலையில், இந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் நேற்று ரூ. 11.75 கோடி ரூபாய் வசூலைப் பெற்று, இதுவரை மொத்தமாக ரூ. 110.6 கோடி வசூலைப் பெற்றுள்ளது.

இந்திய அளவில் பார்க்கும் போது படம் 10 நாட்களில் 136.75 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது. மேலும், உலகளவில் 197.5 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளதாக sacnilk.com இணையதளம் கூறியுள்ளது. இதன் மூலம் வார நாட்களிலும் அமரன் படம் நல்ல வசூலைப் பெற்றுள்ளது தெரிய வருகிறது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி