இந்த ஒரு சூப்பர் லன்ச் பாக்ஸ் ரெசிபியை மட்டும் செய்து கொடுத்துவிட்டால் போதும்! கொஞ்சமும் மிச்சம் இருக்காது!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  இந்த ஒரு சூப்பர் லன்ச் பாக்ஸ் ரெசிபியை மட்டும் செய்து கொடுத்துவிட்டால் போதும்! கொஞ்சமும் மிச்சம் இருக்காது!

இந்த ஒரு சூப்பர் லன்ச் பாக்ஸ் ரெசிபியை மட்டும் செய்து கொடுத்துவிட்டால் போதும்! கொஞ்சமும் மிச்சம் இருக்காது!

Priyadarshini R HT Tamil
Nov 05, 2024 06:00 AM IST

இந்த ஒரு சூப்பர் லன்ச் பாக்ஸ் ரெசிபியை மட்டும் செய்து கொடுத்துவிட்டால் போதும். குழந்தைகள் கொஞ்சமும் மிச்சம் வைக்க மாட்டார்கள்.

இந்த ஒரு சூப்பர் லன்ச் பாக்ஸ் ரெசிபியை மட்டும் செய்து கொடுத்துவிட்டால் போதும்! கொஞ்சமும் மிச்சம் இருக்காது!
இந்த ஒரு சூப்பர் லன்ச் பாக்ஸ் ரெசிபியை மட்டும் செய்து கொடுத்துவிட்டால் போதும்! கொஞ்சமும் மிச்சம் இருக்காது!

இந்த கோவக்காய் சாதத்தை செய்வது எளிது. கோவக்காயை முதலில் பொரித்து எடுத்து அதை வடித்த சாதத்தில் கலந்துவிடவேண்டியதுதான். தினமும் குழந்தைகளுக்கு ஒரேமாதிரி லன்ச் பாக்ஸ் கொடுத்துவிடாமல் இதுபோன்ற வித்யாசமாகக் கொடுத்துவிடும்போது அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இதற்கு தொட்டுக்கொள்ளவும் நீங்கள் தனியாக எதையும் கொடுத்து அனுப்ப தேவையில்லை. மேலும் இந்த காயை பொரித்துவிட்டு, லன்ச் பாக்ஸ் கொடுத்துவிட்டது போக மிச்சத்தை நீங்கள் எந்த சாப்பாட்டுடன் வேண்டுமானலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இதனால் இது உங்களுக்கு இரு வகைக்கும் உதவக்கூடியது. அதனால் இந்த ரெசிபியை கட்டாயம் முயற்சி செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்

உதிரியாக வடித்த சாதம் – 2 கப்

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

கோவக்காய் – 100 கிராம் (பொடியாக நறுக்கியது)

தேங்காய்த் துருவல் – கால் கப்

மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்

எலுமிச்சைச் சாறு – ஒரு ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

உப்பு – தேவையான அளவு

செய்முறை

கடாயில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ளவேண்டும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும். கோவக்காய், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து காய் வேகும் வரை நன்றாக வதக்கவேண்டும்.

தேவைப்பட்டால், தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம். நன்றாக பச்சை வாசம் போகும் வரை சுருள வதக்கவேண்டும். தேங்காய் துருவல் தூவி வதக்கிவிட்டு, சிறிது நேரத்தில் எலுமிச்சை சாறு கலந்து இறக்கவேண்டும். இந்த கலவையை ஆறிய சாதத்தில் கலந்து இறக்கினால் சூப்பர் சுவையில் கோவக்காய் சாதம் தயார்.

இதற்கு தொட்டுக்கொள்ள அப்பளம், ஊறுகாய் கூட போதுமானது. இதை குழந்தைகளின் லன்ச் பாக்ஸில் வைத்துக்கொடுத்தால் போதும். கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுவிட்டு வருவார்கள்.

இதுபோன்ற எண்ணற்ற வித்யாசமான ரெசிபிக்கள், தகவல்கள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்களை ஹெச்டி. தமிழ் தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற எங்கள் இணைய பக்கத்தில் இணைந்திருங்கள். ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.