பிரபல நடிகர் தேங்காய் சீனிவாசன் பிறந்தநாள் இன்று! - ‘தேங்காய்’ பட்டம் கொடுத்தது யார் தெரியுமா? எப்படி வந்தது?
Oct 21, 2024, 06:30 AM IST
பிரபல நடிகராக வலம் வந்த தேங்காய் சீனிவாசனின் பிறந்தநாள் இன்று!
தேங்காய் சீனிவாசன், தூத்துக்குடி மாவட்டம் 1937ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ம் தேதி ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தவர். இவரது தந்தையான ராஜவேலு முதலியாரும் ஒரு நடிகர்தான். நடிப்பில் தான் அடைய வேண்டும் என்று நினைத்த இலக்குகளை மகன் சீனிவாசன் மூலம் சாத்தியப்படுத்தினார்.
நாகேஷிற்கு பிறகு ரயில்வேத்துறையிலிருந்து வந்த மற்றொரு நடிகர் தேங்காய் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம், சென்னை ஐசிஎஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் ஊழியராக சேர்ந்த தேங்காய் சீனிவாசன், அங்கிருந்த ரயில்வே நாடகக் குழுவில் இணைந்து நாடகங்களை நடத்தினார். கே.கண்ணனின் நாடகக் குழுவில் இணைந்தது தேங்காய் சீனிவாசனின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது.
திருப்புமுனை கொடுத்த கல்மனம்
கண்ணன் அரங்கேற்றிய கல்மனம் நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக வந்து செய்த நகைச்சுவை பெரும் வரவேற்பை பெற்றது. இதனை பார்த்த பிரபல நடிகராக வலம் வந்த தங்கவேலு சீனிவாசனுக்கு தேங்காய் சீனிவாசன் என்ற பட்டத்தைக்கொடுத்தார். தேங்காய் சீனிவாசன் சிஎம்வி ராமன் இயக்கிய ஒரு விரல் என்ற படத்தில் அறிமுகமானார்.
முன்பாக, இரவும் பகலும் படத்தில்தான் அறிமுகமாக இருந்தார் ஸ்ரீனிவாசன். ஆனால் அந்தப்படத்தில் அறிமுகமான ஜெய்சங்கரும் புதுமுகம், இவரும் புதுமுகம் என்பதால், தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசன் படத்தில் இருந்து தூக்கி விட்டார். இதனால் ஜெய்சங்கரின் அனுதாபத்தை பெற்று பின்னாளில் அவரின் நெருக்கமான நண்பனாக மாறினார்.
வல்லவன் ஒருவன்
1965ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான ஜெய்சங்கரும், தேங்காய் சீனிவானும், 1966ம் ஆண்டு வல்லவன் ஒருவன் படத்தில் இணைந்து நடித்தனர். தொடர்ந்து ஜெய்சங்கரின் பல படங்களில் தேங்காய் ஸ்ரீவாசன் இருந்தார். பாலசந்தரின் எதிர்நீச்சல் திரைப்படம் தேங்காய் ஸ்ரீனிவாசனுக்கு பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. 1972ம் ஆண்டு வெளிவந்த காசேதான் கடவுளடா படமும் அவரது வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. 1980 களில் பிசியான நடிகராக வலம் வர தொடங்கிய தேங்காய் ஸ்ரீனிவாசன் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என முன்னணி ஹீரோக்களின் படத்தில் இடம் பெற்றார்.
மொத்தம் 965 படங்களில் நடித்துள்ள தேங்காய் சீனிவாசன், அந்த காமெடியனாக, குணச்சித்திர நடிகராக, ஹீரோவாக, வில்லனாக என அனைத்து ஏரியாக்களிலும் தன்னை நிரூபித்தார்.
தன்னுடைய உறவினரின் ஈமச் சடங்கிற்காக பெங்களூருவிற்குச் சென்றபோது, மூளை குருதிப்பெருக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தேங்காய் சீனிவாசன். ஆனால், சிகிச்சைப் பலனின்றி, 1987-ம் ஆண்டு நவம்பர் 9-ம் நாள் உயிரிழந்தார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்