தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ரஜினி- கமல் ஆகியோரை கமர்சியல் கிங்காக மாற்றியவர்.. தமிழ் சினிமாவின் கலை சிற்பி எஸ்பி முத்துராமன் பிறந்தநாள் இன்று!

ரஜினி- கமல் ஆகியோரை கமர்சியல் கிங்காக மாற்றியவர்.. தமிழ் சினிமாவின் கலை சிற்பி எஸ்பி முத்துராமன் பிறந்தநாள் இன்று!

Divya Sekar HT Tamil

Apr 07, 2024, 07:52 AM IST

google News
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியது இயக்குனர் கே பாலச்சந்தர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மக்கள் மத்தியில் சூப்பர் ஸ்டார் என்றால் மாஸ், ஸ்டைல் என பதிய வைத்தது எஸ் பி முத்துராமன் தான்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியது இயக்குனர் கே பாலச்சந்தர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மக்கள் மத்தியில் சூப்பர் ஸ்டார் என்றால் மாஸ், ஸ்டைல் என பதிய வைத்தது எஸ் பி முத்துராமன் தான்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியது இயக்குனர் கே பாலச்சந்தர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மக்கள் மத்தியில் சூப்பர் ஸ்டார் என்றால் மாஸ், ஸ்டைல் என பதிய வைத்தது எஸ் பி முத்துராமன் தான்.

இயக்குனர் எஸ் பி முத்துராமன் தனது சினிமா பயணத்தை பாடல் ஆசிரியர் கண்ணதாசன் உதவியாளராக இருந்து தொடங்கினார். 1970, 80 காலகட்டத்தில் எஸ் பி முத்துராமன் கமர்சியல் இயக்குனராக வளம் வந்தார். இவர் முன்னணி இயக்குனராக இருந்த பீம்சிங், ஏசி திரிலோகசந்தர், கிருஷ்ணன் பஞ்சு ஆகிய முன்னணி இயக்குனர்களுடன் உதவியாளராக இருந்து தனது பயணத்தை தொடங்க ஆரம்பித்தார் எஸ்பி முத்துராமன்.

இதனைத் தொடர்ந்து எஸ் பி முத்துராமன் ஏவிஎம் நிறுவனத்தில் உதவியாளராக சேர்ந்தார்.பின்னர் காலப்போக்கில் அந்த நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குனர் என்ற பெயரை பெற்றார்.. ஏவிஎம்மில் தயாரிக்கப்படும் படம் என்றாலே அதில் பெரும்பாலும் முத்துராமன் தான் இயக்குனராக இருப்பார். அங்கு வரும் பெரும்பாலான படங்களை எஸ்.பி. முத்துராமன் தான் இயக்குவார். இவர் டைரக்ஷன் பணியை மட்டுமே திறம்பட செய்து வந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியது இயக்குனர்  கே பாலச்சந்தர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மக்கள் மத்தியில் சூப்பர் ஸ்டார் என்றால் மாஸ், ஸ்டைல் என மக்கள் மனதில் பதிய வைத்தது எஸ் பி முத்துராமன் தான்.

எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்த படங்கள் அனைத்திலும் ரஜினி மாறுபட்ட கதாபாத்திரத்திலும், மாறுபட்ட ஸ்டைலிலும் காட்டி ரசிகர்களுக்கு விருந்து அளித்திருப்பார் எஸ் பி முத்துராமன். இவர் பள்ளி பருவத்திலேயே சினிமா மீது ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அழைத்த பேட்டியிலும் கூறியிருப்பார்..

 அந்த பேட்டியில்,” எனக்கு சினிமா மீது ஆர்வம் வர காரணம் கலைஞர் வசனம் எழுதி சிவாஜி நடிப்பில் வெளியான பராசக்தி திரைப்படம் தான். இந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்றே சொல்ல முடியாது. இந்த படத்தை பார்க்கும் போதெல்லாம் சினிமாவில் போய் சேர வேண்டும், நானும் சினிமாக்காரன் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. அந்த எண்ணம் இறந்ததால் தான் நான் உடை, உணவு, கஷ்டம் எது வந்தாலும் இதை நோக்கமாகக் கொண்டே வேலை செய்து வந்து கடைசியில் இயக்குனராக உருவெடுத்தேன். இப்போது வெற்றி இயக்குனராக இருக்கிறேன்” என கூறியிருப்பார்.

அப்படி எஸ்டி முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான சில படங்கள் இதோ,

என்கேயோ கேட்ட குரல்

நெற்றிக்கண்

ரணுவ வீரன்

முரட்டுகாளை

போக்கிரிராஜா

புதுக்கவிதை

பாயும் புலி

நல்லவனுக்கு நல்லவன்

தர்மத்தின் தலைவன்

ராஜா சின்னரோஜா

எஸ் பி முத்துராமனுக்கு இருக்கும் ஒரு சிறப்பான விஷயம் என்னவென்றால் இவர் இயக்கும் படம் அனைத்து வயதினருக்கும் ஏற்றார் போலும், ஜனரஞ்சக படத்துக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் ஓவராக கொடுக்காமல் அனைவரும் பார்க்கும் விதமாகவும் கொடுப்பார். அந்த விஷயத்தில் இவர் கில்லாடி என்றே சொல்லலாம்.

அதேபோல தயாரிப்பாளர்களுக்கு முத்துராமன் படம் எடுத்தால் கண்டிப்பாக ஹீட் அடிக்கும் என்ற நம்பிக்கையை இவர் ஏற்படுத்தியுள்ளார். மினிமம் கேரன்டி என்று இல்லாமல் உறுதியான ஹிட்டை பெரும்பாலும் கொடுத்து வந்துள்ளார் எஸ் பி முத்துராமன்.

இவர் ரஜினிகாந்தை வைத்து 25க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். அதேபோல ரஜினியை வைத்து அதிக படங்கள் இயக்கிய இயக்குனர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. இவர் கடைசியாக ரஜினியை வைத்து எடுத்த படம் பாண்டியன். இந்த படமும் செம ஹிட் ஆனது இந்த படத்துக்கு பிறகு இவர் தொட்டில் குழந்தை என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தை இயக்கியதுக்கு பிறகு இவர் இயக்குவதில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டார்.

இவர் கமலுக்கும் பல்வேறு சூப்பர் ஹிட் மூவிகளை கொடுத்துள்ளார். இவர் சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது தமிழக அரசின் விருது ஆகிய பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 65 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்றவர், தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் 75க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர், தற்போது இருக்கும் இளம் இயக்குனர்களுக்கு வழிகாட்டியாக இருப்பவர், தமிழ் சினிமாவின் கலைச் சிற்பி எஸ்பி முத்துராமன் பிறந்தநாள் இன்று. இன்றைய தினம் அவருக்கு வாழ்த்துக்கள் கூறுவோம்.

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி