தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Aishwarya Rajinikanth Talks About Lal Salaam Move Failure

Lal Salaam: ரஜினிகாந்த் ரசிகர்கள் தான் காரணம்.. லால் சலாம் தோல்விக்கு விளக்கம் கொடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

Aarthi Balaji HT Tamil
Mar 09, 2024 09:01 AM IST

Aishwarya Rajinikanth on Lal Salaam: லால் சலாம் ரிலீஸுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு செய்த மாற்றங்கள் தான் படத்தின் ரிசல்ட்டை மாற்றியது. ரஜினியின் இருப்பு முழு ஸ்கிரிப்டையும் டைரக்ட் ஆக மாற்றிவிட்டது என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறினார்.

லால் சலாம்
லால் சலாம்

ட்ரெண்டிங் செய்திகள்

ஜெயிலர் பிளாக் பஸ்டருக்குப் பிறகு ரஜினிகாந்தின் படமாக லால் சலாம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது, ஆனால் அவற்றை சந்திக்க முடியாமல் தோல்வியடைந்தது. காலைக் காட்சியிலேயே எதிர்மறையான பேச்சு வந்ததால் பார்வையாளர்கள் இந்தப் படத்தைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் குறைந்தபட்ச வசூலை கூட வசூலிக்க முடியவில்லை. 

சுமார் ரூ.90 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், உலகம் முழுவதும் ரூ.27 கோடி வசூலித்து, ரூ.15 கோடி மட்டுமே வசூல் செய்தது. லால் சலாம் படம் ரஜினியின் கேரியரில் மிகப்பெரிய பேரிழப்பு. ஆனால் இந்த விபரீதத்திற்கு தனது தந்தை தான் காரணம் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஐஸ்வர்யா மீடியாக்களிடம் கூறியதாவது, “ முதலில் ஒரிஜினல் ஸ்கிரிப்டை யோசித்த போது எனது அப்பா நடித்த மைதீன் கதாபாத்திரம் இரண்டாம் பாதியில் 10 நிமிடம் மட்டுமே வரும். ஆனால் முதல் பாதியில் ரஜினிகாந்த் காணாமல் போனால் அவரது ரசிகர்கள் நிம்மதியிழந்து விடுவார்கள் என்பதால் ரிலீசுக்கு முன்பே எடிட்டிங்கில் சில மாற்றங்களை செய்துள்ளோம். முதல் பாதியிலேயே மைதீன் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். 

முதல் பாதியில் இவருடைய கதாபாத்திரத்தை பார்க்கும் போதெல்லாம், இரண்டாம் பாதி முழுவதும் அவர் இருப்பார் என்று ரசிகர்கள் நினைத்தார்கள். அதை எதிர்பார்த்து அந்த பாத்திரத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். இதனால் கதையே இருட்டடிப்பு ஆகி விட்டது. அவர்கள் மற்ற கதாபாத்திரங்களை புறக்கணித்தனர்.

ரிலீஸுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு செய்த மாற்றங்கள் தான் படத்தின் ரிசல்ட்டை மாற்றியது. ரஜினியின் இருப்பு முழு ஸ்கிரிப்டையும் டைரக்ட் ஆக மாற்றிவிட்டது. ஆனால் இதை கேட்ட ரசிகர்கள் ஒரிஜினல் ரஜினியை இந்தக் கதைக்குள் கொண்டு வர வேண்டுமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். 

படம் எப்படி இருக்கும் என்பது பற்றிய தெளிவான யோசனை இயக்குனருக்கு இருக்க வேண்டும் என்றும், கடைசியில் திரைக்கதை வடிவமைப்பை மாற்றக்கூடாது என்றும் இண்டஸ்ட்ரியில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்” என்றார்.

லால் சலாம் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. மகளை வைத்து இந்தப் படத்தை இயக்க ரஜினி மட்டும் ஒப்புக்கொண்டார் என்பது உண்மைதான். மற்றபடி ரஜினி கெஸ்ட் ரோலில் நடிக்க மாட்டார். 

ஆனால் டிரைலர் மற்றும் டீசர் வெளியான பிறகு இந்தப் படத்தின் கிராஸ் ஒரு ரேஞ்சில் அதிகரித்துள்ளது. இப்படத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஒரு சிறிய கிராமத்தில் இரு மதத்தினருக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டி போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தியது லால் சலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்