சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து விவகாரம்.. ’தயவு செஞ்சு வேற மாதிரி எடுத்துக்காதீங்க’ .. அமைச்சர் சுரேகா வருத்தம்!
Oct 03, 2024, 09:23 AM IST
Konda Surekha : சமந்தா ருத் பிரபு, நாக சைதன்யாவின் விவாகரத்தின் பின்னணியில் பி.ஆர்.எஸ் தலைவர் கே.டி.ராமராவ் இருப்பதாக விமர்சனம் எழுந்ததை அடுத்து, கொண்டா சுரேகா தனது அறிக்கையை திரும்பப் பெற்றார்.
நாக சைதன்யாவிடமிருந்து சமந்தா ரூத் பிரபு விவாகரத்து பெற்றது தொடர்பாக தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா சமீபத்தில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்தை திரும்பப் பெற்றுள்ளார்.
புதிய தகவல் ஒன்றை கூறியுள்ளார் தெலங்கானா அமைச்சர் சுரேகா. இவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சமந்தா, நாக சைதன்யாவை பிரிந்து சென்றதற்கு காரணமே முன்னாள் அமைச்சர் கேடிஆர் தான். அந்த அமைச்சரால் சமந்தா மட்டுமல்ல, பல நடிகைகளும் சினிமா கலைஞர்களும் சினிமாவை விட்டு விலகி காணமலே போயுள்ளனர் எனக் கூறி மக்களிடம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.
சமந்தா குறித்து சுரேகா வெளியிட்ட அறிக்கையை திரும்பப் பெற்றார்
இந்நிலையில் அமைச்சர் சுரேகா கூறிய கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தற்போது சமந்தா குறித்து சுரேகா வெளியிட்ட அறிக்கையை திரும்பப் பெற்றார் சுரேகா. அவர் தனது பதிவில், "ஒரு தலைவர் பெண்களை எப்படி இழிவுபடுத்துகிறார் என்பதை சுட்டிக்காட்டுவது மட்டுமே எனது நோக்கமே தவிர, உங்கள் உணர்வுகளை புண்படுத்த அல்ல சமந்தா. நீங்களே அதிவேகமாக வளர்ந்த விதம் நான் வியக்கும் மற்றும் ஆசைப்படும் ஒன்று. எனது வார்த்தைகளால் நீங்களோ அல்லது உங்கள் ரசிகர்களோ புண்பட்டிருந்தால், நான் நிபந்தனையின்றி அவற்றை திரும்பப் பெறுகிறேன். தயவு செஞ்சு வேற மாதிரி எடுத்துக்காதீங்க."
சமந்தா பதிலடி
சமந்தா அவர் வெளியீட்டு இருக்கும் பதிவில், " எனது விவாகரத்து தனிப்பட்ட விஷயம், அதைப் பற்றி ஊகங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒரு பெண்ணாக இருப்பதற்கும், போராடுவதற்கும் நிறைய தைரியமும், வலிமையும் தேவை. இந்தப் பயணம் என்னை எப்படி மாற்றியது என்பதில் நான் பெருமைப்படுகிறேன். தயவு செய்து அதை இலகுவாக எடுத்துக் கொள்ளாதீர்கள், ஒரு அமைச்சராக உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
இருவரின் தனியுரிமைக்கு மரியாதை கொடுத்து நடந்து கொள்ளும்படி உங்களை கேட்டு கொள்கிறேன். எனது விவாகரத்து என்பது எனது தனிப்பட்ட விஷயம். எனது விவாகரத்து பரஸ்பர சம்மதத்துடன் நடந்துள்ளது. இதில் எந்த அரசியல் சதியும் இல்லை. தயவு செய்து அரசியல் விவகாரத்தில் இருந்து எனது பெயரை தூரமாக வைக்க முடியுமா? ஏனென்றால் நான் எப்போதுமே அரசியலுக்கு அப்பாற்பட்டவளாக இருக்கிறேன். அதை கடைசி வரை தொடர்ந்து கடைப்பிடிக்க விரும்புகிறேன் ’’ என்றார்.
சைதன்யா பதிலடி
சைதன்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைச்சர் கொண்டா சுரேகாவின் கருத்துக்கு நான் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம். சக மனிதர்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்கவும்.
இதுவரை இந்த விஷயத்தில் பல்வேறு ஆதாரமற்ற மற்றும் முற்றிலும் அபத்தமான கிசுகிசுக்கள் வந்துள்ளன. எனது முந்தைய மனைவி மற்றும் எனது குடும்பத்தினர் மீதான ஆழ்ந்த மரியாதை காரணமாக நான் இதையெல்லாம் அமைதியாக இருந்தேன்.
பொறுப்புள்ள பெண் என்ற முறையில் உங்கள் கருத்துகளை சிலர் ஏற்றுக் கொள்கிறார்கள். உங்கள் கருத்துகளை உடனடியாக திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகளை மீடியா தலைப்புச் செய்திகளுக்காக சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது வெட்கக்கேடானது " என்றார்.
நாகார்ஜுனா பதிலடி
சுரேகாவின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்த நாகார்ஜுனா, அமைச்சர் கொண்டா சுரேகாவின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன். அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கையை உங்கள் எதிரிகளை விமர்சிக்க பயன்படுத்த வேண்டாம். தயவுசெய்து மற்றவர்களின் தனியுரிமையை மதிக்கவும். ஒரு பொறுப்பான பதவியில் உள்ள ஒரு பெண்ணாக, எங்கள் குடும்பத்திற்கு எதிரான உங்கள் கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொருத்தமற்றவை மற்றும் தவறானவை. உங்கள் கருத்துக்களை உடனடியாக திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
ஜூனியர் என்.டி.ஆர், நானி, குஷ்பு சுந்தர் உள்ளிட்ட பல பிரபலங்களும் சுரேகாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.