Samantha: சமந்தா விவாகரத்திற்கு காரணமான முன்னாள் அமைச்சர்.. ஓடோடி வந்த நாகர்ஜூனா.. நீடிக்கும் மர்மம்..
Samantha: நடிகை சமந்தா- நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய முன்னாள் அமைச்சரே காரணம் எனக்கூறி, அணைந்த தீயை மீண்டும் பற்ற வைத்துள்ளார் தெலங்கானா பெண் அமைச்சர் சுரேகா.

நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு இருவரும் திருமண வாழ்க்கையிலிருந்து பரஸ்பரமாக பிரிந்து வாழ இருப்பதாக அறிவித்தனர். இவர்கள் இருவரின் பிரிவுக்கும் இதுவரை எந்த காரணமும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காத நிலையில், சினிமா வட்டாரங்கள், பிரபலங்கள் என பலரும் பல தகவல்களை பரப்பி வருகின்றனர்.
அந்த வகையில், தெலங்கானா மாநிலத்தின் அமைச்சரான சுரேகா சமந்தாவின் திருமண வாழ்க்கை இப்படி ஆக முன்னாள் அமைச்சர் கேடிஆர் தான் காரணம் எனக் கூறி தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
சினிமா எண்ட்ரி
தமிழ் ரசிகர்ளின் மனங்களில் காதல் திரைப்படம் என்றால் இதுதான் என முத்திரை குத்திய படங்களில் ஒன்று தான் கௌதம் வாசுதேவ் மேனனின் விண்ணைத் தாண்டி வருவாயா. இந்தப் படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து சினிமாவில் எண்ட்ரி கொடுத்தவர் சமந்தா. பின் இதே படத்தின் தெலுங்கு வெர்ஷனில் திரிஷாவிற்கு பதிலாக கதாநாயகியாக அறிமுகமானார் சமந்தா. இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் நாக சைதன்யா.