தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  உறவுக்கார பையன்..ஒகே சொன்ன கீர்த்தி சுரேஷ்? கோவாவில் கோலாகல திருமணம்! பாலிவுட் என்ட்ரி நேரத்தில் இப்படியா?

உறவுக்கார பையன்..ஒகே சொன்ன கீர்த்தி சுரேஷ்? கோவாவில் கோலாகல திருமணம்! பாலிவுட் என்ட்ரி நேரத்தில் இப்படியா?

Nov 17, 2024, 08:10 PM IST

google News
பெற்றோர் பார்த்திருக்கும் உறவுக்கார பையனுக்கு ஒகே சொன்ன கீர்த்தி சுரேஷுக்கு, கோவாவில் வைத்து கோலாகலமாக திருமணம் நடக்க இருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் உலா வருகின்றன. பேபி ஜான் மூலம் பாலிவுட் என்டரி ஆகும் நேரத்தில் இப்படியா என்ற ரசிகர்கள் ஷாக் ஆகி கேள்வி எழுப்பியுள்ளனர்.
பெற்றோர் பார்த்திருக்கும் உறவுக்கார பையனுக்கு ஒகே சொன்ன கீர்த்தி சுரேஷுக்கு, கோவாவில் வைத்து கோலாகலமாக திருமணம் நடக்க இருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் உலா வருகின்றன. பேபி ஜான் மூலம் பாலிவுட் என்டரி ஆகும் நேரத்தில் இப்படியா என்ற ரசிகர்கள் ஷாக் ஆகி கேள்வி எழுப்பியுள்ளனர்.

பெற்றோர் பார்த்திருக்கும் உறவுக்கார பையனுக்கு ஒகே சொன்ன கீர்த்தி சுரேஷுக்கு, கோவாவில் வைத்து கோலாகலமாக திருமணம் நடக்க இருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் உலா வருகின்றன. பேபி ஜான் மூலம் பாலிவுட் என்டரி ஆகும் நேரத்தில் இப்படியா என்ற ரசிகர்கள் ஷாக் ஆகி கேள்வி எழுப்பியுள்ளனர்.

மலையாள நடிகை மேனகா, சினிமா தயாரிப்பாளர் சுரேஷ் குமார் ஆகியோரின் மகளான நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணி ஹீரோயினாக இருந்து வருகிறார். தமிழ், தெலுங்கு சினிமாக்களில் நடித்து வரும் இவர் பாலிவுட் சினிமா ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இதையடுத்து கீர்த்தி சுரேஷ் வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன. உறவுக்காரர் ஒருவரை அவர் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது

பெற்றோரால் நிச்சயக்கப்பட்ட திருமணம்

பிரபல மலையாள ஊடகத்தில் கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில், தனது பெற்றோர் பார்த்திருக்கும் உறவுக்கார பையனை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ளவுள்ளாராம். இவரது திருமணம் கோவாவில் நடைபெற இருக்கிறது என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, பெற்றோர் பார்த்திருக்கும் மாப்பிள்ளையை மணம் முடிக்க கீர்த்தி சுரேஷ் சம்மதம் தெரிவித்த நிலையில், அவரது திருமணம் குறித்து முடிவு செய்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கீர்த்தியின் திருமணம் பற்றி அவரது குடும்பத்தாரின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பலருக்கும் காத்திருக்கின்றனர். ஆனால் இதுபற்றி எந்த உறுதியான தகவலும் வெளியாகிவில்லை.

கீர்த்தி சுரேஷ் திருமண வதந்திகள்

கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த தகவல் வெளியாவது இது முதல் முறையல்லை. ஏற்கனவே, கேரளாவை சேர்ந்த பிரபல அரசியல்வாதி ஒருவரை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ளபோவதாக வதந்திகள் வெளியாகின. அதன் பின்னர் பிரபல இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்தர் - கீர்த்தி சுரேஷ் ஆகியோர் மணமுடிக்க இருப்பதாகவும் தகவல்கள் உலா வந்தன். அப்போது கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆதரமற்ற இதற்கு மறுப்பு தெரிவித்ததனர். அத்துடன் அவர் தற்போது சினிமாவில் கவனம் செலுத்து வருவதாகவும், தற்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை எனவும் கூறினர். தற்போது மீண்டும் கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து தகவல்கள் உலா வந்துகொண்டிருக்கின்றன.

கீர்த்தி சுரேஷ் படங்கள்

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இந்த ஆண்டில் தமிழில் சைரன், ரகு தாத்தா ஆகிய படங்கள் வெளியாகின. இதில் சைரன் படத்தில் போலீஸ் அதிகாரியாகவும், ரகு தாத்தா படத்தில் இந்தி எதிர்ப்பு போராளியாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றார்.

அத்துடன் பான் இந்தியா படமான கல்கி 2898 ஏடி படத்திலும் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது தவிர இவரது நடிப்பில் ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. ரிவால்வர் ரீட்டா படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தமிழில் சூப்பர் ஹிட்டான தெறி படத்தின் ரீமேக்காக இந்தியில் உருவாகி வரும் பேபி ஜான் படத்தில் வருண் தவான் ஜோடியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த படம் மூலம் அவர் பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார். ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பேபி ஜான் டிசம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது. 

அந்த வகையில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ், பாலிவுட் என்ட்ரி கொடுக்கவிருக்கும் நேரத்தில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வரும் தகவல் ரசிகர்களுக்கு ஷாக்காகவே அமைந்துள்ளது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை