Keerthy Suresh: 17 முறை முத்தம் வைத்த பிரபல ஹீரோ… போதுமா என்று கேட்டு…கதறி அழுத கீர்த்தி சுரேஷ்! - பகீர் சம்பவம்!-theni kannan latest interview about keerthy suresh sexual harassament experience - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Keerthy Suresh: 17 முறை முத்தம் வைத்த பிரபல ஹீரோ… போதுமா என்று கேட்டு…கதறி அழுத கீர்த்தி சுரேஷ்! - பகீர் சம்பவம்!

Keerthy Suresh: 17 முறை முத்தம் வைத்த பிரபல ஹீரோ… போதுமா என்று கேட்டு…கதறி அழுத கீர்த்தி சுரேஷ்! - பகீர் சம்பவம்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 07, 2024 08:57 AM IST

Keerthy suresh: கீர்த்தி சுரேஷுக்கு முத்தம் கொடுப்பது போன்றதொரு காட்சி ஒன்றை எடுத்து இருக்கிறார்கள். அந்தக்காட்சியில் அந்த நடிகர், கிட்டத்தட்ட 12 முறை கீர்த்தி சுரேஷூக்கு முத்தம் கொடுத்து இருக்கிறார். - கதறி அழுத கீர்த்தி சுரேஷ்!

Keerthy Suresh:  17 முறை முத்தம் வைத்த பிரபல ஹீரோ… போதுமா என்று கேட்டு கதறி அழுத கீர்த்தி சுரேஷ்! - பகீர் சம்பவம்!
Keerthy Suresh: 17 முறை முத்தம் வைத்த பிரபல ஹீரோ… போதுமா என்று கேட்டு கதறி அழுத கீர்த்தி சுரேஷ்! - பகீர் சம்பவம்!

இது குறித்து பேசும் போது, “நடிகை கீர்த்தி சுரேஷ் சில காலத்திற்கு முன்னதாக பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்தார். அது என்னவென்றால், இன்று முன்னணி நடிகராக இருக்கக்கூடிய நடிகர் ஒருவருடன் ஒரு படத்தில் அவர் நடிக்கும் பொழுது, அதில் அந்த நடிகர் கீர்த்தி சுரேஷுக்கு முத்தம் கொடுப்பது போன்றதொரு காட்சி ஒன்றை எடுத்து இருக்கிறார்கள். அந்தக்காட்சியில் அந்த நடிகர், கிட்டத்தட்ட 12 முறை கீர்த்தி சுரேஷூக்கு முத்தம் கொடுத்து இருக்கிறார். இதைப் பார்த்து கொதித்துப் போன கீர்த்தி சுரேஷ், அவரிடம் 12 முறை நீங்கள் எனக்கு முத்தம் கொடுத்து விட்டீர்கள்.

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

இது உங்களுக்கு போதுமா… இல்லை இன்னும் ஏதாவது கொடுக்க வேண்டுமா என்று கேட்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து அவர் அழுதும் இருக்கிறார். இதையடுத்து உடனே ஷாட்டை நிறுத்தி அந்தப்படத்தின் இயக்குநர் அவரை சமாதானப்படுத்தி ஆறுதல் சொல்லி தேற்றி இருக்கிறார். ஆனாலும், அதை அவர் வெளியே தைரியமாகச் சொன்னார்.

மலையாள சினிமா போன்றும் தமிழிலும் பலவிதமான பாலியல் துன்புறுத்தல்கள் நடிகைகளுக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறன. கீர்த்தி சுரேஷ் அதன் பின்னர் அந்த நடிகருடன் நடிக்கவே இல்லை. இனி கீர்த்தி சுரேஷ் அந்த நடிகருடன் நடிக்க மாட்டார். காரணம் அவர் அந்த அளவுக்கு ஓப்பனாக அந்த விஷயத்தை பேசிவிட்டார்.

 

 

கீர்த்தி சுரேஷ் (கோப்பு புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் (கோப்பு புகைப்படம்

இதைப் போன்று மலையாளத்தில் ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. அதாவது ஒரு கதாநாயகி ஒரு ஹீரோவுடன் சேர்ந்து நடித்துக்கொண்டிருக்கும் போது, முன்னமே அந்த ஹீரோ அவரிடம் தவறான முறையில் நடந்து கொண்ட நிலையில், இருவருக்கும் இடையே சண்டை வந்திருக்கிறது. இந்த நிலையில் காட்சி ஒன்றில் நடிக்க அவர்கள் வேண்டி இருந்தது.

அதில் இருவரும் கட்டி உருள வேண்டும்.அந்தக்காட்சியை மட்டும் கிட்டத்தட்ட 17 முறை எடுத்திருக்கிறார்கள். இதை அந்த கதாநாயகி புகாராக தெரிவித்து இருந்தார். அந்த நடிகர் கிட்டத்தட்ட 17 முறை அவரை கட்டிப்பிடித்து அந்த காட்சியில் நடித்திருக்கிறார். அவர், நான் வழியில்லாமல் தான் அந்த காட்சியில் நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. காரணம் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. என்னால் வெளியே செல்ல முடியாத காரணத்தால் பொறுத்துக் கொண்டுதான் அந்த படத்தில் நான் நடித்தேன் என்று கூறியிருந்தார்.” என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.