தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Story Of The Scene: ‘ரஜினி சார பார்த்து மொத்த பேரும் தெறிச்சிட்டாங்க’ - பேட்ட மாஸ் சீன் பின்னால் உள்ள கதை!

Story of the scene: ‘ரஜினி சார பார்த்து மொத்த பேரும் தெறிச்சிட்டாங்க’ - பேட்ட மாஸ் சீன் பின்னால் உள்ள கதை!

Sep 26, 2023, 06:30 AM IST

google News
பேட்ட திரைப்படத்தில் இடம் பெற்ற மாஸ் சீன் எடுக்கப்பட்ட விதம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் பேசியவை இவ
பேட்ட திரைப்படத்தில் இடம் பெற்ற மாஸ் சீன் எடுக்கப்பட்ட விதம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் பேசியவை இவ

பேட்ட திரைப்படத்தில் இடம் பெற்ற மாஸ் சீன் எடுக்கப்பட்ட விதம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் பேசியவை இவ

இது குறித்து கார்த்திக் பேசும் போது, “நான் மிகவும் என்ஜாய் செய்த சீனில் இதுவும் ஒன்று. இது ஃப்ளாஷ்பேக்கில், இடைவேளை முடிந்த உடன் வரும். ஆகையால் அந்த இடத்தில் மிகவும் ஹைலைட்டான ஒரு விஷயம் இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்.

அதாவது பழைய வில்லன் ரஜினியை, அந்த சீனுக்குள் கொண்டு வருவது போல இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்த சீனை நான் ரஜினி சாரிடம் சொன்ன போது அவரும் மிகவும் உற்சாகமானார்.

அதன் பின்னர்தான் அந்த சீனை நாங்கள் எடுத்தோம். பேட்ட படத்தில் வேலை பார்த்த யாருமே அந்த சீனை மறக்க மாட்டார்கள். அந்தளவுக்கு படப்பிடிப்பில் இருந்தவர்கள் அந்த சீனை என்ஜாய் செய்தார்கள்.

அவர் எழுந்து துப்பாக்கியை எடுத்து சுடுவது வரை சிங்கிள் ஷாட்தான். அவருமே அதனை மிகவும் ரசித்து செய்தார். நான் அவரிடம் முன்பே சொல்லி விட்டேன்.. சார் நீங்கள் எழுந்திருக்கும் போது ஒரு வித தோரணையுடன் எழுந்திருக்க வேண்டும். அதே போல இடையில் டான்ஸ் ஆடவேண்டும் என்று.. அதைக்கேட்ட அவர் டான்ஸ்-லாம் வேண்டாம் என்றார்.

உடனே நான் சார் டான்ஸ் என்றால் டான்ஸ் கிடையாது.. ஒரு மாதிரி வைஃப் செய்வது போல இருக்க வேண்டும்; ஆனால், அதில் ஒரு நக்கல் இருக்க வேண்டும் என்றேன். அதைக்கேட்ட அவர், சரி நான் ஏதோ ஒன்று செய்கிறேன் என்று சொல்லி விட்டுதான் நடித்தார். அவர் அங்கு நடித்துக்கொண்டிருக்கும் போதே நானெல்லாம் கத்தி விட்டேன். இறுதியில், மொத்த படக்குழுவும் தெறித்து விட்டது. அதை என்னால் மறக்கவே முடியாது. அதை நேரில் பார்த்து அனுபவித்தது பாக்கியம் என்று சொல்லலாம்.” என்று பேசினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி