பதிலுக்கு பதில் அடி கொடுக்கும் கார்த்திக்.. சாமுண்டீஸ்வரி செய்யப் போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
Nov 22, 2024, 03:50 PM IST
பதிலுக்கு பதில் அடி கொடுக்கும் கார்த்திக்.. சாமுண்டீஸ்வரி செய்யப் போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து பார்ப்போம்.
தமிழ் சின்னத்திரையில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் சாமுண்டீஸ்வரி இடம் வேலையாளாக சேர்ந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது சாமுண்டீஸ்வரி கார்த்திக்கை தனக்கு கீழே மரியாதை குறைவாக நடத்தத் திட்டமிடுகிறாள்.
இன்றைய எபிசோடு:
கார்த்தியிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவனை வீட்டுக்குள் அழைக்கிறாள். அங்கே சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரா கலா என இருவர் மட்டும் அமர்ந்திருக்க கார்த்திக்கு உட்கார சார் கூட இல்லாமல் இருக்கிறது.
இந்த சமயத்தில் ஒரு பெண்மணி டீ கொண்டு வந்து கொடுக்க கார்த்திக் அதை தட்டிவிட்டு, சந்திர கலா மீது கொட்டி விட்டு மன்னிப்புக்கேட்கிறான். சந்திர கலா தனது துணியை அலம்பி கொண்டு வருவதற்காக உள்ளே செல்ல, கார்த்தி, சந்திரகலா அமர வைத்திருந்த சாரில் உட்கார்ந்து சாமுண்டீஸ்வரியை ஷாக்காக்குகிறான்.
கார்த்திக்குக்கு போடப்பட்ட புதிய கண்டிஷன்கள்:
இதைத்தொடர்ந்து அபிராமி கார்த்திக்கு போன் செய்து எல்லாம் நல்லபடியா நடக்குதா என விசாரிக்க, கார்த்திக்கும் எல்லாம் சரியா போய்ட்டு இருக்கு என சொல்லி போனை வைக்கிறான். அதன்பிறகு சாமுண்டீஸ்வரி குடும்பத்தினர் வெளியே கிளம்ப, கார்த்தி தான் கார் ஓட்ட வேண்டும் எனச் சொல்கின்றனர்.
கார் ஓட்டுவது மட்டுமின்றி சாமுண்டீஸ்வரி வெளியே இறங்கும்போது கதவைத் திறந்துவிட வேண்டும்; உள்ளே ஏறும் போது கதவைத் திறந்துவிட வேண்டும் எனவும், இந்த விதிமுறைகள் எல்லாத்தையும் பின்பற்ற வேண்டும் என கண்டிஷன் போடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.
நேற்றைய எபிசோடு:
நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி வீட்டில் துப்பாக்கியுடன் என்டிரி கொடுக்கிறார். அப்போது வீட்டின் முற்றத்தில் வந்து அமரும் சாமுண்டீஸ்வரியிடம் ஒருவர், தான் ராஜா சேதுபதி ஊரில் இருந்து வந்ததாகத் தகவல் சொல்கிறார். மேலும் முப்பது வருடங்களாக மூடியிருந்த ஊர் கோயிலை ராஜா சேதுபதி திறந்துவிட்டதாகவும், பட்டணத்தில் இருந்து அவரது பேரன் வந்திருக்கிறான் என்றும், அவன் தான் பூட்டை உடைத்து கோயிலைத் திறந்தான் எனவும் சாமுண்டீஸ்வரியிடம் தகவல் சொல்கிறான்.
மேலும் கோயிலைத்திறந்த அறுபது நாளைக்குள், கோயிலின் கும்பாபிஷேகத்தை நடத்தி ஆகணும் என்றும், அதற்கு அவரது மகன் ராஜராஜனை கூட்டிக்கொண்டு போக ராஜா சேதுபதியின் பேரன் வரப்போகிறான் எனவும் தகவல் சொல்கிறான். ஆனால் உண்மையான பேரன் ஆன கார்த்திக் இதை மறைந்து இருந்து கேட்டுக்கொண்டு இருக்கிறான்.
அந்த பேரனோடு, உங்கள் புருஷனை நீங்கள் அனுப்பிவைக்க வேண்டும் என்றும் அதைத்தான் சொல்ல வந்தேன் எனவும் வந்தவர் சொல்கிறார். உடனே கோபப்படும் சாமுண்டீஸ்வரி அனுப்பவில்லையென்றால் என்னப் பண்ணுவாராம், அந்தப் பெரிய மனுஷன் எனக் கேட்கிறார், சாமுண்டீஸ்வரி.
உங்கள் புருஷனை அனுப்பவில்லையென்றால், பெரியவரின் கோபத்துக்கு நீங்கள் ஆளாகணும் என்று வந்தவர் எச்சரிக்கிறார். உடனே சீறும் சாமுண்டீஸ்வரி, ’அந்த கிழவன் கிட்டப்போய் சொல்லு.. அந்த கிழவனின் பேரன் வரக்கூடாது’ என்றும்;’வந்தால் உயிரோடு போகமாட்டான்’ என்றும் சொல் எனத்துப்பாக்கியை எடுத்து, தகவல் சொன்னவர் முன் சுட குறிவைக்கிறார்.
டாபிக்ஸ்