தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kani Kusruti: 'என் கணக்கில் ரூ.3,000 தான் இருந்தது' - கேன்ஸ் பட விழாவில் அங்கீகாரம் பெற்ற கனி குஸ்ருதி உருக்கமான பேச்சு!

Kani Kusruti: 'என் கணக்கில் ரூ.3,000 தான் இருந்தது' - கேன்ஸ் பட விழாவில் அங்கீகாரம் பெற்ற கனி குஸ்ருதி உருக்கமான பேச்சு!

Marimuthu M HT Tamil

May 28, 2024, 09:18 PM IST

google News
Kani Kusruti: கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு இயக்கிய பாயல் கபாடியாவின் "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" படத்தில் நடித்த கனி குஸ்ருதி, 'பிரியாணி' படத்திற்காக தனக்கு ரூ.70,000 சம்பளம் வழங்கப்பட்டதாக உருக்கமாகக் கூறினார். (Instagram)
Kani Kusruti: கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு இயக்கிய பாயல் கபாடியாவின் "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" படத்தில் நடித்த கனி குஸ்ருதி, 'பிரியாணி' படத்திற்காக தனக்கு ரூ.70,000 சம்பளம் வழங்கப்பட்டதாக உருக்கமாகக் கூறினார்.

Kani Kusruti: கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு இயக்கிய பாயல் கபாடியாவின் "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" படத்தில் நடித்த கனி குஸ்ருதி, 'பிரியாணி' படத்திற்காக தனக்கு ரூ.70,000 சம்பளம் வழங்கப்பட்டதாக உருக்கமாகக் கூறினார்.

Kani Kusruti: 2024 கேன்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்ற பாயல் கபாடியாவின் "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" என்ற படத்தில் நடித்த நடிகை கனி குஸ்ருதி, அவர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியபோது எதிர்கொண்ட நிதிப் போராட்டங்களைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். 

சமீபத்தில் ஏசியாநெட் நியூஸுக்கு அளித்த பேட்டியில், "நான் நிதி ரீதியாக சுதந்திரமாக இருக்கும்போதுதான் நான் நிம்மதியாக இருக்கிறேன்" என்று பேசியுள்ளார். 

கேரள மாநில திரைப்பட விருதுகள் மற்றும் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை வென்ற மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட மலையாள திரைப்படமான "பிரியாணி" படத்தில், தான் எவ்வாறு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினேன் என்பதை நினைவு கூர்ந்து பேசும்போது கனி குஸ்ருதி கண் கலங்கினார். அந்தப் படத்தை சஜின் பாபு எழுதியிருந்தார்.

மேலும் நடிகை கனி குஸ்ருதி, "என்னிடம் பணம் இல்லாத நேரத்தில் சஜின் (சஜின் பாபு) என்னை அப்படத்தில் நடிக்க வைக்க அழைத்தார். ஸ்கிரிப்ட்டை படித்த பிறகு, எனக்கு அதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும், என்னால் அதைச் செய்ய முடியும் என்று தான் நினைக்கவில்லை என்றும் அவரிடம் சொன்னேன். வேறு நடிகையைத் தேடுங்கள் என்றும் சொன்னேன்.

ஆனால், அந்த நேரத்தில் தனக்குப் பணம் தேவைப்பட்டது. ஆனால், படத்தில் நடிக்க விரும்பாமல் இருந்தேன்’’ என்றார்.

இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு, திரைப்படத் தயாரிப்பாளரும் எழுத்தாளரும் கனி குஸ்ருதியை மீண்டும் நடிக்க அணுகவே, பின் நடிக்க ஒப்புக்கொண்டதாகக் கூறுகிறார். 

'பிரியாணி படத்துக்கு ரூ.70,000 சம்பளம்':

’’இந்தப் படத்தில் நடிக்க எனக்கு விருப்பமில்லை என்றும், ஆனால், என்னிடம் பணம் இல்லை என்றும் கூறினேன். தனக்கு சுமார் 70,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது என்றும் நினைக்கிறேன். அது எனக்குப் பெரிய தொகை. எனது கணக்கில் அப்போது ரூ.3,000 மட்டுமே இருந்தது. எனவே ரூ.70,000 கிடைத்தது நல்ல விஷயம் என நினைத்துக்கொண்டேன்" என்று மலையாள செய்தி சேனலிடம் தொண்டை அடைத்துக் கொண்டு கண்ணீருடன் பேசியிருக்கிறார்.

சமூக நலன் விரும்பியாக இருக்கும் கனி குஸ்ருதி, ஒரு மேடை நாடக நடிகை. மேடை நாடகத்தில் சிறப்பாக சம்பாதிக்க முடிந்திருந்தால் தான் மேடை நாடகத்திலேயே இருந்திருப்பேன் என்றும்; சினிமாவில் நுழைந்திருக்கமாட்டேன் என்றும் கூறினார்.

"எதிர்காலத்திலும் கூட, எனக்கு வாழ்வாதாரத்தை நடத்த வழியில்லை என்றால், அதாவது சம்பாதிப்பதற்கான சூழ்நிலைகள் இல்லையென்றால், நான் விரும்பாத விஷயங்களை செய்ய வேண்டியிருக்கும். இப்படி நிறைய பேர், விரும்பாத விஷயங்களை சினிமாவில் செய்கின்றனர். பிடிக்காத படங்களில் நடிக்கின்றனர்" என்றாள்.

கேன்ஸில் முக்கிய அங்கீகாரம் பெற்ற கனி குஸ்ருதி:

2024 கேன்ஸ் திரைப்பட விழாவில், இந்திய இயக்குநர் பாயல் கபாடியாவின் "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" என்ற படம், கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றது. 

இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட இந்தியர்களில் கேரளாவில் பிறந்த நடிகை கனி குஸ்ருதியும் ஒருவர்

கனி குஸ்ருதியும் அவரது குழுவினரும், "ஆல் வீ இமேஜின் அஸ் லைட்" கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றனர். அவர்களும் ரெட் கார்பெட் என்னும் சிவப்புக் கம்பளத்தில் நடந்தனர்.  அப்போது ரெட் கார்பெட்டில் தர்பூசணி ஸ்டைலில், ஹேண்ட் பேக்கை வைத்திருந்தார். இது   பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இருப்பதை மறைமுகமாக உணர்த்தியது.

வீடியோவை இங்கே பாருங்கள்:

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை