Dindugal Thalapakatti Biriyani : வீட்டிலே செய்யலாம் எளிதாக! திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி செய்வது எப்படி?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Dindugal Thalapakatti Biriyani : வீட்டிலே செய்யலாம் எளிதாக! திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி செய்வது எப்படி?

Dindugal Thalapakatti Biriyani : வீட்டிலே செய்யலாம் எளிதாக! திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி செய்வது எப்படி?

Priyadarshini R HT Tamil
Published May 20, 2024 04:10 PM IST

Dindugal Thalapakatti Biriyani : வீட்டிலே செய்யலாம் எளிதாக என்றால் எப்படி செய்வது இந்த திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணியை என்று யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா? இதோ ரெசிபி.

Dindugal Thalapakatti Biriyani : வீட்டிலே செய்யலாம் எளிதாக! திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி செய்வது எப்படி?
Dindugal Thalapakatti Biriyani : வீட்டிலே செய்யலாம் எளிதாக! திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி செய்வது எப்படி?

அந்த வகையில் திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணியை வீட்டிலே தயாரிப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஏனென்றால் பிரியாணி பிரியர்களின் முதல் தேர்வாக இருப்பது திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணிதான். இது அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாக உள்ளது. இதற்கு முதலில் மசாலாப்பொருட்களை தனியாக ஃபிரஷ்ஷாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அந்த மசாலாவை மட்டும் தனியாக அரைத்து நீங்கள் ஸ்டோர் செய்து வைத்துக்கொண்டு, பிரியாணி செய்யும்போதெல்லாம் பயன்படுத்தலாம். இதை நீங்கள் காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

பட்டை – ஒரு இன்ச்

கிராம்பு – 4

சீரகம் – ஒரு ஸ்பூன்

ஏலக்காய் – 2

ஸ்டார் சோம்பு – 1

இஞ்சி – ஒரு இன்ச்

பூண்டு – 8 பல்

புதினா – ஒரு கைப்பிடியளவு

மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு

பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்கள்

பிரியாணி இலை – 1

கல்பாசி – சிறிது

ஸ்டார் சோம்பு – 1

பச்சை மிளகாய் – 1

மட்டன் – அரைக்கிலோ

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

நெய் – 2 டேபிள் ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 1 (நீளவாக்கில் நறுக்கியது)

தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்

தயிர் – ஒரு கரண்டி

உப்பு – தேவையான அளவு

ஃபிரஷ் கொத்தமல்லித்தழை – சிறிதளவு

ஃபிரஷ் புதினா – சிறிதளவு

அரிசி – ஒரு கப்

(ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் பிரியாணிக்கு சேர்க்கவேண்டும். முன்னதாக அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும். பிரியாணி செய்ய சீரக சம்பா அரிசியை எடுத்துக்கொள்ளவேண்டும்)

செய்முறை

ஒரு மிக்ஸி ஜாரில், பட்டை, கிராம்பு, சீரகம், ஏலக்காய், ஸ்டார் சோம்பு, இஞ்சி, பூண்டு, மல்லித்தழை, புதினா என அனைத்தையும் அரைத்துக்கொள்ள வேண்டும்.

குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து அதில் பிரியாணி இலை, கல்பாசி, ஸ்டார் சோம்பு, பச்சை மிளகாய் என அனைத்தையும் சேர்த்து வதக்கவேண்டும்.

பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் மட்டனை சேர்த்து நன்றாக வதக்கி, அதில் சிறிது தண்ணீர் சேர்த்து 8 விசில்கள் விட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கர் ரிலீஸ் ஆனவுடன் அதை திறந்து அதில் தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள் மற்றும் தயிர் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். 

ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து அரிசியையும் சேர்த்து கலந்து ஒரு விசில் விட்டு இறக்கினால் மணமணக்கும் திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி தயார்.

இதற்கு தொட்டுக்கொள்ள வெங்காய பச்சடி மட்டுமே கூட போதுமானது.

பிரியாணியில் தயிருக்கு பதில் எலுமிச்சை பழம் சேர்க்கலாம். சிறிது நேரம் மூடி வைத்து சுடச்சுட பரிமாற சுவை அள்ளும்.

இது அரை கிலோ கறிக்கான அளவு, மட்டனின் அளவுக்கு ஏற்ப நீங்கள் மற்ற பொருட்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணியை ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிக்கத்தூண்டும். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.