Actor Prakash Raj: ’அவர் தெய்வ மகன் கிடையாது! டெஸ்ட் டியூப் பேபி!’விசிக மேடையில் மோடியை சாடிய நடிகர் பிரகாஷ் ராஜ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Actor Prakash Raj: ’அவர் தெய்வ மகன் கிடையாது! டெஸ்ட் டியூப் பேபி!’விசிக மேடையில் மோடியை சாடிய நடிகர் பிரகாஷ் ராஜ்!

Actor Prakash Raj: ’அவர் தெய்வ மகன் கிடையாது! டெஸ்ட் டியூப் பேபி!’விசிக மேடையில் மோடியை சாடிய நடிகர் பிரகாஷ் ராஜ்!

Kathiravan V HT Tamil
May 25, 2024 09:47 PM IST

Actor Prakash Raj: இந்த பாசிசம், சனாதனம் ஒரு குரலை அடக்க நினைத்தால் அதைவிட வேகமான குரல் எழும் என்பதால்தான் நான் பேசி வருகிறேன். வரும் ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு இந்த தெய்வ மகன் சென்றதற்கு பிறகு எனக்கு வேலை இருக்கா என்று தெரியாது.

’அவர் தெய்வ மகன் கிடையாது! டெஸ்ட் டியூப் பேபி!’விசிக மேடையில் மோடியை சாடிய நடிகர் பிரகாஷ் ராஜ்!
’அவர் தெய்வ மகன் கிடையாது! டெஸ்ட் டியூப் பேபி!’விசிக மேடையில் மோடியை சாடிய நடிகர் பிரகாஷ் ராஜ்!

நாம் பேசாமல் இருந்தால் நாட்டுக்கு காயம் 

அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், திருமாவளவனை போல் எனக்கு அரசியலில் நீண்ட பயணம் இல்லை; ஆனாலும் நான் ஏன் பேசுகிறேன் என பலரும் கேட்கின்றனர். உடம்புக்கு ஒரு காயம் என்றால் சும்மா இருந்தால் வலி குறையும், ஆனால் நாட்டுக்கு காயம் என்றால் நாம் பேசாமல் இருந்தால் அது அதிகம் ஆகும். 

கலைஞன் கோழையானால் சமுதாயம் கோழை ஆகும்

நான் ஒரு கலைஞன்தான் ஆனால் என்னுடைய திறமையால் நான் கலைஞன் ஆகவில்லை. என்னைவிட திறமைசாலிகள் அதிகம் உள்ளனர். இன்னைக்கு ஒரு மேடையில் நான் நிற்க காரணம் என்னுடைய திறமை மட்டும் அல்ல, அது மக்களின் அன்புதான். மேடை ஏற்றிய மக்களுக்கு ஒரு பிரச்னை இருக்கும் போது, ஒரு கலைஞன் கோழை ஆகிவிட்டால் இந்த சமுதாயம் கோழை ஆகிவிடும். 

நான் செய்து கொண்டு இருப்பது பெரிய வேலை இல்லை, அது என் கடமை, லங்கேஷ், மார்க்ஸ், அம்பேத்கர், காந்தி, பாரதி போன்ற பலரது சிந்தனைகளை படித்து உள்வாங்கியதால் எனக்கு இந்த புரிந்தல் வந்து உள்ளது. 

அவர் மன்னர் அல்ல; தெய்வ குழந்தை 

கடந்த 9 வருடமாகத்தான் இந்த மன்னரை நான் எதிர்த்துக் கொண்டு வருகிறேன். இப்போதெல்லாம் மன்னர்னு சொல்ல முடியாதுபா! மன்னிக்கனும் அவருதான் தெய்வக்குழந்தை ஆகிவிட்டாரே!

நாம் இனிமேல் அவரை தேர்ந்து எடுக்க முடியாது, நாட்டுக்கு அவரால் ஏதாவது துன்பம் ஏற்பட்டால் அவரை ’மனுசனாயா நீ’ என்று திட்ட முடியாது. தெய்வம் சோதிக்கிறது என்றுதான் சொல்ல முடியும். 

யார் எதிர்க்கட்சி? 

கௌரி லங்கேஷின் தந்தை லங்கேஷ்தான் என்னுடைய ஆசான். அவர் மாபெரும் சிந்தனையாளர், எழுத்தாளர். அவர்தான் எங்களை செதுக்கினார்.  அந்த காலத்திலேயே விளம்பரம் வாங்காமல் பத்திரிக்கையை நடத்துவார். 

அவர் நடத்திய பத்திரிக்கையின் மூலம் நிறைய கலைஞர்கள், கவிஞர்கள், இலக்கிய சிந்தனைவாதிகளை அவர் உருவாக்கினார். ஒரு ஆட்சியே அவர் பேசினால் பயப்படும். அவரை நான் அருகில் இருந்து பார்த்து உள்ளேன். ஒரு பத்திரிக்கையும், ஒரு சாதாரண குடிமகனும், கலைஞனும் நிரந்தரமான எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என அவர் கூறி உள்ளார். அப்பேர்பட்ட ஆசானின் மகள்தான் கௌரி, அவரோடு 40 ஆண்டுகால தொடர்பு உள்ளது.   

அப்பேர்பட்ட கௌரியை சுட்டுக்கொல்லும் போது, அதை ஏற்க முடியவில்லை. அவரை புதைக்கும் போது நான் சொன்னேன், நான் அவளை புதைக்கவில்லை, விதைத்தேன் என்று. 

ஜூன் 4க்கு பிறகு வேலை இருக்கிறதா என்று தெரியாது?

இந்த பாசிசம், சனாதனம் ஒரு குரலை அடக்க நினைத்தால் அதைவிட வேகமான குரல் எழும் என்பதால்தான் நான் பேசி வருகிறேன். வரும் ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு இந்த தெய்வ மகன் சென்றதற்கு பிறகு எனக்கு வேலை இருக்கா என்று தெரியாது. 

அம்பேத்கர் சுடர் விருது எனக்கு கொடுக்கிறீர்கள். நான் தலித் கிடையாது. ஆனால் அம்பேத்கர் இந்த அரசியல் அமைப்பை எழுதாமல் இருந்து இருந்து இருந்தால், இந்த நாடு எப்படி இருந்து இருக்கும் என்பதை சிந்திக்கவே பயமாக உள்ளது. அவருடைய சிந்தனை பசியால் உருவானது அல்ல, அவமானத்தால் பிறந்தது.  மக்களின் வியர்வை தொடாதவர்கள் தெய்வமகன் கிடையாது; டெஸ்ட் டியூப் பேபி என நடிகர் பிரகாஷ் ராஜ் பேசினார். 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.