கங்குவா தயாரிப்பாளர் ஆசையில் 10% ஆவது நிறைவேறியதா? என்ன சொல்கிறது கங்குவா வசூல்?
Nov 30, 2024, 08:19 AM IST
கங்குவா திரைப்படம் வெளியான 16 நாட்களில் இதுவரை மொத்தம் 104.45 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. இது தயாரிப்பாளர் கங்குவா வசூல் மீது வைத்திருந்த நம்பிக்கையில் 5% தான் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த 14ம் தேதி வெளியானது. பேன்டஸி ஆக்சன் படமாக இதனை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் தான் சூர்யாவின் சினிமா வாழ்க்கையிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம்.
மோசமான விமர்சனம்
பல புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட கங்குவா படம், பெரிதளவில் மக்களை ஈர்த்து 2000 கோடி வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெளியான முதல் நாளில் இருந்த படம் குறித்து முழுவதும் நெகட்டிவ் விமர்சனங்கள் தான் வெளியானது. சூர்யாவின் நடிப்பை பாராட்டிய மக்கள் படத்தை மிகவும் மோசமாக விமர்சித்தனர்.
முதல் நாள் மட்டுமே வசூல்
இதனால், கங்குவா படம் முதல் நாளைத் தவிர வெளியான வேறு எந்த நாளும் 6 கோடிக்கு மேல் வசூலை எட்டவில்லை. அத்துடன், அவை படிப்படியாக குறைந்து 1 கோடி ரூபாய் வசூல் கூட இல்லாமல் மிகவும் மோசமான சரிவை சந்தித்தது. இதனால், தமிழ்நாட்டில் தயாரிப்பாளர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் சில முக்கிய முடிவை எடுத்தனர்.
கங்குவா படத்தை நீக்கிய தியேட்டர்கள்
ஆனால், கர்நாடகா மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள தியேட்டர்களில் கங்குவா திரைப்படம் வெறும் 7 நாட்கள் மட்டுமே ஓடியது. மக்கள் கூட்டமும், படத்திற்கான எதிர்பார்ப்பும் இல்லாத காரணத்தால் அனைத்து தியேட்டர்களில் இருந்தும் படத்தை நீக்கியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, தமிழ், தெலுங்கு மக்களை குறிவைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம், வெளியான முதல் நாளில் இருந்தே 6 கோடி வசூலை தொடவில்லை. படம் வெளியானது முதல் இதுவரை மொத்தமாகவே104.45 கோடி ரூபாய் வசூலைத் தான் பெற்றுள்ளது. இதனால், படக்குழு மிகுந்த ஏமாற்றத்தை அடைந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆதரவு
அதுமட்டுமா, தமிழ்நாட்டில் பல திரைக் கலைஞர்கள் சூர்யாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில், பலரும் படத்தை ரசிப்பதாக சில நாட்களாக கூறி வருகின்றனர். இதனால், படம் மெல்ல மெல்ல வசூலைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை மேலும் சரிவை நோக்கி செல்கின்றன.
கங்குவா வசூல்
கங்குவா திரைப்படம் வெளியான 16ம் நாளான நேற்று தமிழ்நாட்டில் 0.08 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் கங்குவா படத்தின் வசூல் 38.36 கோடி ரூபாயாக உள்ளது.
16ம் நாளான நேற்று இந்திய அளவில் 81.45 கோடி ரூபாயும், உலகம் முழுவதும் 104.45 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாக sacnilk இணையதளம் தெரிவித்துள்ளது.
கங்குவா எத்தனை கோடி வசூலிக்கும்?
கங்குவா திரைப்படத்தைப் பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் ஓடிடி தளம் 80 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கே.ஜி.எஃப் 2 மற்றும் இந்தி, தெலுங்கு மொழிப் படங்கள் மட்டுமே இந்தச் சாதனையைச் செய்துள்ளன. இதுவரை எந்த தமிழ்ப் படமும் அந்த சாதனையை எட்டியதில்லை.
கங்குவாவால் 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை எட்ட முடியுமா என்று படத்தின் தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜாவிடம் செய்தியாளர்கல் கேட்டபோது, "நான் ரூ.2000 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை எதிர்பார்க்கிறேன். அதை ஏன் ரூ.1000 கோடி என்று குறைத்து மதிப்பிடுகிறீர்கள்" என்று நம்பிக்கையுடன் பதிலளித்தார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்