என்னங்க ரூ.1000 கோடின்னு கம்மியா சொல்றீங்க.. ரூ.2000 கோடி அடிக்கும்.. கங்குவா பற்றி ஞானவேல் ராஜா அதிரடி பேச்சு
என்னங்க ரூ.1000 கோடின்னு கம்மியா சொல்றீங்க.. ரூ.2000 கோடி அடிக்கும்.. கங்குவா பற்றி ஞானவேல் ராஜா அதிரடியாகப் பேசியுள்ளார்.

கங்குவா படம் உலகளவில் ரூ.2000 கோடி வசூலை அடிக்கும் படத்தின் தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா உறுதிபடத் தெரிவித்து இருக்கிறார்.
நடிகர் சூர்யா தனது அடுத்த படமான கங்குவா மூலம் பான் இந்தியா ஸ்டார் ஆகிறார். இதுவரை தயாரிக்கப்பட்ட இந்திய படங்களிலேயே மிகவும் அதிகம் செலவழித்து உருவாக்கப்பட்ட பிரமாண்டமான படங்களில் ஒன்றாக கங்குவா அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இப்படத்தில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளது. உண்மையில், கங்குவா திரைப்படத்தின் தயாரிப்பாளர், கே.இ.ஞானவேல்ராஜா, இந்தப் படம் ரூ.2000 கோடி வசூலிக்கும் என்று கணித்துள்ளார். இதற்கு முன்பு ஒரே ஒரு இந்திய படம் மட்டும் தான் இந்த சாதனையை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கங்குவா தயாரிப்பாளரின் பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு:
சமீபத்தில் கலாட்டா ஊடகத்துக்கு கங்குவா படக்குழுவினர் அளித்த பேட்டியில், ஸ்டுடியோ கிரீன் பேனரின் கீழ் கங்குவாவை தயாரித்த கே.ஈ.ஞானவேல் ராஜாவிடம் 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை கங்குவா அடிக்குமா என்பது குறித்து கேட்கப்பட்டது.